Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Tuesday, January 14, 2014
Monday, January 13, 2014
இடைநிலை ஆசிரியர் பட்டயப்படிப்பு முடித்தால் காத்திருக்கும் வரவேற்பு
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் கூட்டம் அலைமோதிய காலம் உண்டு. கடந்த 2001-02ம் ஆண்டுகளில் மருத்துவப் படிப்பை ஒதுக்கிவிட்டு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுக்கு முன்புவரை இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிளஸ் 2 முடித்ததும் போட்டி போட்டுக்கொண்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தனர். இதனால், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. படித்து முடித்தவர்களின் எண்ணிக்கையும் மிகுதியானது.
தமிழகத்தில் 9 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், மாவட்டக் கல்வியியல் பயிற்சிக் கல்லூரி (DIEAT) 29, அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 42, தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி 35, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 615 உள்ளன. அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் உள்ள 280 இடங்களில், 245 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. மாவட்டக் கல்வியியல் பயிற்சிக் கல்லூரியில் 2400 இடங்களில் 1999 இடங்களும், அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 2100 இடங்களில் 1275 இடங்களும், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 38,000 இடங்களில் 5263 இடங்களும் மட்டுமே நிரம்பியுள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் ஏராளமானோர் படித்து முடித்துவிட்டதால் இப்படிப்புக்கு வரவேற்பு குறைய ஆரம்பித்துள்ளது. தகுதியுடைய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை தேர்வு செய்து படிப்பதன்மூலம் எளிதில் அரசுப் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு படித்து முடித்தவர்களைவிட, புதிதாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்து முடித்தவர்களே அரசுப் பணிக்கு அதிகம் சென்றுள்ளனர். எனவே, இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பை நல்ல பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்து முடிப்பவர்களுக்கு என்றுமே வாய்ப்பு காத்திருக்கும்.
முன்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணிவாய்ப்பு கிடைத்து வந்தது. தற்போது, அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இதன்மூலம், இடைநிலை ஆசிரியராக முடியும்.
அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது. எனவே, இப்படிப்பில் சேர்ந்து அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள், இப்படிப்பில் சேர்ந்தவுடன் தொலைதூரக் கல்வியில் பி.ஏ., பி.எஸ்சி. என பட்டப்படிப்பு சேர்வது புத்திசாலித்தனம். பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு முடித்து பி.எட்., எம்.எட். என படிக்க வேண்டும். இவ்வாறு மேற்படிப்புகளை படிப்பதன்மூலம், இடைநிலை ஆசிரியர்கள் இளநிலை, முதுநிலை பணி வாய்ப்பு பெறலாம். எம்.பில்., பிஎச்.டி. வரை படிப்பவர்கள் கல்லூரிகளில் பேராசிரியராகலாம்.
எனவே, இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பு படிப்பவர்கள் அடுத்தடுத்த பட்டப்படிப்புகளை படிப்பதால் கல்வித் தரத்தை உயர்த்திக்கொண்டு நல்ல நிலைக்கு செல்ல முடியும். தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பாடம் எடுக்க பி.எட். கல்வித் தகுதி கேட்கும் நிலை உள்ளது. ஆசிரியர் பட்டயப் படிப்புடன் கூடுதலாக பட்டப்படிப்பு படிப்பதால், கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும்
பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்வு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இணையதள முகப்பு.
2013-14 நிதியாண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் பி.எப் கணக்குக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பி.எப் வட்டியை அதிகரிக்க வேண்டும் என்று தொழிலாளர் சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவு நிதியை நிர்வகித்து வரும் இந்த அமைப்பு, தனது சேவையை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள 2,700 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மையங்களிலும் விரைவில் ஒரு புதிய கணினி மென்பொருளை பயன்பாட்டுக்கு கோண்டு வந்து அதன் மூலம் சேவை கண்காணிப்பை அதிகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது
NMMS DATE EXTENDED
|
mD¥òe®
ÂU. F. njtuh#‹, v«.V., v«.v£.,
muR¤ nj®ÎfŸ Ïa¡Fe®,
br‹id –
600 006.
|
bgWe®
mid¤J Kj‹ik¡ fšé mYty®fŸ,
fšé mYty® (khefuh£Á) br‹id,
mid¤J kht£l¡ fšé mYty®fŸ,
mid¤J kht£l¡ bjhl¡f¡ fšé mYty®fŸ,
mid¤J
cjé bjhl¡f¡ fšé mYty®fŸ,
|
e.f.v©.
054617 /B4 /NMMS/2013 ehŸ :
10 . 01.2014
Iah/m«ikp®,
|
bghUŸ :
|
njÁa tUthŒtê k‰W«
Âw‹go¥ò cjé¤ bjhif £l¤ nj®Î (NMMS) 2013 – nj®t®fë‹ é©z¥g§fis
Ïizajs« _y« gÂnt‰w« brŒjš – fhy Ú£o¥ò F¿¤J.
|
|
gh®it :
|
Ï›tYtyf Ïnj v©â£l foj«
ehŸ: 13.12.2013
|
- - - -
njÁa
tUthŒtê k‰W« Âw‹ go¥òjé¤ bjhif £l¤ nj®Î (NMMS)
2013 r«gªjkhd nj®t®fë‹ é©z¥g§fis Ïizajs« _y« gÂnt‰w« brŒa V‰fdnt m¿é¡f¥g£oUªj
nj¡F¥ gÂyhf 11 .01.2014 Kjš 20.01.2014
tiu Ïizajs« _y« gÂnt‰w« brŒa fhy Ú£o¥ò brŒa¥gL»wJ v‹gij¤ bjçé¤J¡ bfhŸ»nw‹.
Ïa¡Fe®
efš: mid¤J muR¤ nj®ÎfŸ k©ly¤ Jiz Ïa¡Fe®fŸ,
Sunday, January 12, 2014
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை
"அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர், டியூஷன் எடுக்கக் கூடாது; மீறினால், சஸ்பெண்ட் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து, தனி வகுப்பு (டியூஷன்) எடுப்பதாகவும், "டியூஷனுக்கு" வராத மாணவ, மாணவியரிடம், வகுப்புகளில், ஆசிரியர், கடுமையாக நடந்து கொள்வதாகவும், அரசின் கவனத்திற்கு, புகார் வந்துள்ளது.
ஆசிரியர்களின், இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. விழுப்புரம் மாவட்டத்தில், மாணவர்களை கட்டாயப்படுத்தி, சில ஆசிரியர்கள் டியூஷன் எடுத்துள்ளனர். இதனால், மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கல்வித்துறைக்கு புகார் வந்ததை அடுத்து, அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, முறைகேடான செயல்களில் ஈடுபடுவதை, ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும்; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான சுற்றறிக்கையை ஆசிரியர்களிடம் வழங்கி அதில், அவர்களின் கையெழுத்தை பெற்று கோப்பில் பராமரிக்க, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
Saturday, January 11, 2014
ஆசிரியரை செருப்பால் அடித்த, பெண் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த, எஸ்.பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கலையரசன் (52) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில், எஸ்.பட்டியை சேர்ந்த செல்வராணி (50) தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த, 6ம் தேதி, வருகை பதிவேடு ஏன் குறிக்கவில்லை, எனக்கேட்டு, பள்ளி தலைமை ஆசிரியர், தன்னை தகாத வார்த்தையால் திட்டியதாகவும், செருப்பால் அடித்ததாகவும், கலையரசன், அரூர் போலீஸில் புகார் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து ஆசிரியர் கலையரசன் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடமும் புகார் தெரிவித்தார்.
அதே நேரத்தில், "மாணவர்களின் விடைத்தாள்களை சரியாக திருத்தாதது குறித்து நான் விளக்கம் கேட்ட போது, கலையரசன் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்' என்று, தலைமை ஆசிரியர் செல்வராணியும், அரூர் போலீஸில் புகார் கொடுத்தார்.
அரூர் போலீஸார், இது குறித்து விசாரித்து, தலைமையாசிரியர் செல்வராணி மீது, புதன்கிழமை இரவு, வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சாமிநாதன், தலைமை ஆசிரியர் செல்வராணியை, வியாழக்கிழமை “சஸ்பெண்ட்” செய்து உத்தரவிட்டார்
தவறாமல் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு தினமும் ரூ.2 ஊக்கத் தொகை: புதிய திட்டம்
கர்நாடகத்தில் பெண் குழந்தைகள் கல்வி பயில்வது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. பள்ளியில் சேரும் பலர் பாதியிலேயே பள்ளிக்கு வராமல் நிறுத்திக் கொள்கிறார்கள்.
எனவே பெண்கள் கல்வி கற்பதையும் தவறாமல் பள்ளிக்கு வருவதை ஊக்கப்படுத்தவும், 1–ம் வகுப்பில் சேரும் மாணவிகள் தவறாமல் பள்ளிக்கூடம் வந்தால் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 வீதம் ஊக்கத் தொகை கணக்கிட்டு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த திட்டம் கடந்த 1–ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பெண் குழந்தைகள் கல்வி ஊக்கத் தொகை திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் மந்திரி ஜெயசந்திரா நிருபர்களிடம் கூறுகையில், இந்த புதிய திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் பள்ளிக்கு வருவது அதிகரிக்கும். ஊக்கத் தொகை அளிப்பது குடிசைப் பகுதி மற்றும் கிராமப் பகுதி மக்களுக்கு தங்களின் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வம் ஏற்படும் என்றா
அரசு பள்ளியில் இருந்த திமுக தலைவர் கலைஞரின் படத்தை அகற்றியதால் சாலை மறியல்
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே அமரகுந்தியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, அ.தி.மு.க.,வை சேர்ந்த, அமரகுந்தி பஞ்சாயத்து தலைவர் குருசாமி (எ) மாதவன், சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் மணிமுத்து உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு, அமரகுந்தி தொடக்கப்பள்ளிக்குச் சென்றனர்.
அங்கு தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்ற மணிமுத்து, அங்கிருந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் படத்தை அகற்றுமாறு, தலைமை ஆசிரியை விஜயலட்சுமியை மிரட்டினார்.
அவரது மிரட்டலுக்கு பயந்த தலைமை ஆசிரியை, சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்த, கலைஞரின் படத்தை கழட்டிவிட்டார். இதுகுறித்து, தகவலறிந்த, தி.மு.க.,வினர், 25-க்கும் மேற்பட்டோர், பள்ளி எதிரே சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற, ஜலகண்டாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி, மறியலில் ஈடுபட்ட, தி.மு.க.வினரை, சமாதானம் செய்து, மறியலை கைவிடச் செய்தார். கழற்றப்பட்ட கலைஞரின் படத்தை, தி.மு.க.,வினர் எடுத்து வந்து இருந்த இடத்திலேயே மாட்டினர். இந்த மறியலால், தாரமங்கலம்-தொளசம்பட்டி சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதை தவிர்க்க, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாள் மறுமதிப்பீடு முடிவுகள் இணைதளத்தில் வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாள் மறுமதிப்பீடு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in இல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளில் தவறு இருந்ததால் விடைத்தாள்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து விடைத்தாள்களும் மறுமதிப்பீடு செய்யப்பட்டன
Wednesday, January 08, 2014
கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர் சேர்க்கை பாதிப்பு: கல்வி அமைச்சர் தகவல்
மதுரை: "கழிப்பறை வசதி இல்லாததால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. அடிப்படை வசதிகள் மேற்கொள்ள கல்வி அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்" என கல்வி அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
மதுரையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: "கிராமப்புற அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாததால்தான் மாணவர் சேர்க்கை பாதிக்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் கிராமங்களில் வீடு வீடாக சென்று பெற்றோரை சந்தியுங்கள். "குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்காவிட்டால் அந்த பள்ளியை அரசு மூடிவிடும்" என எடுத்துக் கூறுங்கள். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்து பள்ளிக்குத் தேவையான வசதிகளை செய்து தர கோரிக்கை வையுங்கள்." இவ்வாறு வீரமணி பேசினார்.
கல்வித்துறை செயலர் சபிதா பேசியதாவது: "மாணவர் சேர்க்கையில் சி.இ.ஓ.,க்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 2014 மார்ச்சுக்குள் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். மாணவர் எண்ணிக்கை மிக குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமையில் உள்ள பள்ளியுடன் இணைக்க பரிசீலிக்க வேண்டும். தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகள் இருக்கக் கூடாது." இவ்வாறு சபிதா கூறினார்.
பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க கல்வித்துறை நடவடிக்கை
ஜனவரி 08,2014,10:56 IST
தர்மபுரி: "மாவட்டத்தில் உள்ள நூறு பள்ளிகளை தேர்வுசெய்து அப்பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1998ம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை சுற்றுச்சூழல் மன்றங்களை அமைக்க அரசு உத்தரவிட்டது. இம்மன்றங்கள் மூலம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா, விளையாட்டு போட்டி, பேரணி, மரக்கன்றுகள் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் 250 பள்ளிகள் சுற்றுச்சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே "நம் பள்ளி, நம் தோட்டம்" திட்டம் செயல்படுத்தப்பட்டு வனத்துறையின் உதவியுடன் பள்ளிகளுக்கு பல்வேறு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுற்றுச்சூழல் மன்றங்கள் சார்பில் பள்ளிகளில் மூலிகை தோட்டங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட சுற்றுச்சூழல் மன்றங்களின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் 250 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 159 மன்றங்கள் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
தமிழகத்திலேயே தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் செயல்படும் "நம் பள்ளி, நம் தோட்டம்" திட்டத்தின் கீழ் இதுவரை 36,600 செடிகளை பள்ளிகளுக்கு வழங்கி உள்ளோம். நடப்பாண்டில், வனத்துறை உதவியுடன் ஒரு லட்சம் மரக்கன்றுகளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இம்மன்றங்கள் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். விரைவில், மாவட்ட சுற்றுச்சூழல் மன்றங்கள் சார்பில் நூறு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அப்பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
சமநிலைக் கல்வி பெரிய சவால்:மீராகுமார்
அனைவருக்கும் சமமான கல்வி வழங்குவது அரசிற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளதாக லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார். மேலும், நமது நாட்டில் 2 விதமாக கல்வி முறைகள் இருந்து வருவதாகவும், கிராமம் மற்றும் நகரத்தில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளும், வறுமை நிலையில் உள்ள குழந்தைகளுக்கும் முறையான கல்வி அளிகப்படுவதில்லை; அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி அளிக்கப்படுகிறது; இந்த வேறுபாட்டை நீக்குவது மிகுந்த சவாலாக உள்ளது என மீரா குமார் தெரிவித்துள்ளார்.
Tuesday, January 07, 2014
Monday, January 06, 2014
Sunday, January 05, 2014
திருவாரூர் மாவட்டச் செயலாளருக்கு வாழ்த்துக்கள்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தேர்தலை தமிழகத்திலேயே முதலில் முடித்து மீண்டும் மாவட்டச் செயலாளர் பொறுப்பை தொடரும் அண்ணன் மதிவாணன் அவர்களையும் திருவாரூர் மாவட்டக் கிளையையும் நாகை மாவட்டக்கிளை வாழ்த்துகிறது.

திருவாரூர் மாவட்டத் தலைவராக மீண்டும் தொடரும் திரு.ஆர்.கே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்

திருவாரூர் மாவட்டத் தலைவராக மீண்டும் தொடரும் திரு.ஆர்.கே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்
Saturday, January 04, 2014
இலங்கை அரசுக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கண்டனம்
தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை தொடர்ந்து சிறைபிடிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மத்திய அரசு வழங்கும் நிதியை அந்த திட்டம் முடியும் வரை முழுமையாக வழங்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள 1500 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும். அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் அரசு விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும். ஆசியர்களுக்கு உள்ளதைப் போலவே ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மாதந்தோறும் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் பி. பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். செல்வக்குமார், மாவட்டப் பொருளர் எம். ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில தலைமை நிலையச் செயலர் கே. வேலுச்சாமி தீர்மானங்களை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
15 வயது சிறுமியைத் திருமணம் செய்த பள்ளி ஆசிரியர் கைது
தருமபுரி மாவட்டம், சின்னம்பள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆறுமுகம் (37). ஏற்க்கனவே திருமணமான இவர், அதே பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில், மாவட்டக் கல்வித் துறை சார்பில் விசாரனை நடத்தப்பட்டது. பின்னர், அரூர் அருகே உள்ள கே.வேட்ரம்பட்டி அரசுப் பள்ளிக்கு ஆறுமுகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரனை நடத்திய போலீஸார், திருமண வயதை எட்டாத சிறுமியை திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆறுமுகத்தைக் கைது செய்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் 100 % மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் பள்ளி கல்வி முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்
வரும்கல்வியாண்டில்அரசு பள்ளிகளில் நூறு சதவீத மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்று ஐந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் சபிதா அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளி கல்வித்துறையின் மீளாய்வு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திண்டுகல் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 70 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமை தாங்கினார்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வரவேற்புரையாற்றினார், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலைவகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு கடந்த ஆண்டு பொது தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் பேசியதாவது: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைந்துள்ளது. பிரைமரி பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் முன்வருவது இல்லை. வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, இந்த மாதம் முதலே மாணவர்கள் கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைபடுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுகல்லில் 12 பள்ளிகளின் பாத்ரூம் கதவு இல்லை, 15 பள்ளிகளில் உள்ள பாத்ரூம்களில் பீங்கான் வசதியில்லை, 347 பள்ளிகளில் குடிநீர் வசதியில்லாமல் உள்ளது. கோவையில் 40 பள்ளிகளில் பாத்ரூம் கதவு இல்லை, 100 பள்ளிகளில் உள்ள பாத்ரூம்களில் பீங்கான் வசதியில்லை, 120 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. திருப்பூர், நீலகிரி மாவட்டத்திலும் இதே நிலைதான் உள்ளது. கரூர் மாவட்டத்தில் மட்டுமே அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. எனவே, மற்ற நான்கு மாவட்டங்களிலும் கழிப்பிட வசதி பிரச்னையை விரைவில் முடிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகையை குறித்து மத்திய அரசிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம். மத்திய அரசு இரண்டு முறைகளில் தொகையை பள்ளிகளுக்கு வழங்க உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகளில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளாக கோவையில் 25 பள்ளிகள், கரூரில் 7 பள்ளிகள், நீலகிரியில் 18 பள்ளிகள் என 5 மாவட்டங்களையும் சேர்த்து 70 பள்ளிகள் வரும் ஏப்ரல் மாத இறுதியில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் சேர்க்கை நடக்காது. அரசு பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகள்.
வரும்கல்வியாண்டில் 95 சதவீத தேர்ச்சியை அடைய வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்கள் பொது தேர்வில் இலக்கை அடைய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் பள்ளிகல்வி துறைகள் குறித்த பல்வேறு பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி செய்து இருந்தார்.
10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி அமலாகுமா?
ஜனவரி 04,2014,09:42 IST
கோவை: எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவ முறை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
தமிழகத்தில், முப்பருவ முறை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமச்சீர் பாடத்திட்டத்தை, மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக அக, புற மதிப்பீட்டின் படி தேர்ச்சி கணக்கிடப்படுகிறது.
அக மதிப்பீட்டின் படி மாணவர்களின் தனித்திறனுக்கு 40 மதிப்பெண்களும், எழுத்து தேர்வுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் "கிரேடு" மதிப்பிடப்படுகிறது. அரசாணையின் படி, 2013- 14 கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும், 2014- 15ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கும் முப்பருவ முறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்த இறுதியான தகவல்களை பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிடவில்லை.
இதுகுறித்து, பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின் அரசு ஒப்புதலுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டாலும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தற்போதைய முறையிலேயே, நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் வீரமணி கூறுகையில், "எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவமுறை அமல்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படுமா என்ற இறுதி முடிவு மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.
தமிழகத்தில், முப்பருவ முறை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமச்சீர் பாடத்திட்டத்தை, மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக அக, புற மதிப்பீட்டின் படி தேர்ச்சி கணக்கிடப்படுகிறது.
அக மதிப்பீட்டின் படி மாணவர்களின் தனித்திறனுக்கு 40 மதிப்பெண்களும், எழுத்து தேர்வுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் "கிரேடு" மதிப்பிடப்படுகிறது. அரசாணையின் படி, 2013- 14 கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும், 2014- 15ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கும் முப்பருவ முறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்த இறுதியான தகவல்களை பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிடவில்லை.
இதுகுறித்து, பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின் அரசு ஒப்புதலுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டாலும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தற்போதைய முறையிலேயே, நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் வீரமணி கூறுகையில், "எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவமுறை அமல்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படுமா என்ற இறுதி முடிவு மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.
அடிப்படைக் கல்வியின் தரம் அறிய தேர்வு: எஸ்.எஸ்.ஏ., ஏற்பாடு
ஜனவரி 04,2014,14:58 IST
: அரசு பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களின் வாசிப்புத் திறன், அடிப்படை கணித அறிவு தரமறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், அடைவு ஆய்வு எனும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்விற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியத்திற்கு 3,5,8ம் வகுப்பில் இருந்து தலா 10 பள்ளிகளை தேர்வு செய்து, ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்த 30 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களிடமிருந்து ஒட்டு மொத்த மாணவர்களின் கல்வி தரத்தை பரிசோதிக்கும் விதமாக தமிழ், ஆங்கில பாடத்தில் வாசிப்பு, அடிப்படை கணிதத்தை அறிய அடைவு ஆய்வு எனும் திறனாய்வு தேர்வை நடத்தி சர்வே எடுக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலுமிருந்து 20 தேர்வு கண்காணிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு தேர்வு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 3, 5ம் வகுப்பிற்கான தேர்வு ஜன.21, 22லும், 8ம் வகுப்பிற்கு 23, 24ந் தேதியிலும் நடக்கிறது என அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்றுனர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், "இத்தேர்விற்கான வினாக்கள் அறிவியல் பரிசோதனை அடிப்படையில் ஆய்வு நோக்கில் அமைந்திருக்கும். யாரும் காப்பி அடிக்க முடியாது. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வித்தரம், திறனை அறிய முடியும் என நம்பப்படுகிறது.
இதில், மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் ஆன்-லைனில் ஏற்றப்படும். இதன் மூலம், மத்திய அரசிடமிருந்து எஸ்.எஸ்.ஏ.,விற்கு கூடுதல் நிதியை பெறவும் வாய்ப்புண்டு.
Thursday, January 02, 2014
Wednesday, January 01, 2014
Subscribe to:
Posts (Atom)






