SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, November 14, 2013

Jaya takes on Karunanidhi, exposes double standards on schools

Chennai: Lashing out at DMK chief M. Karunanidhi for questioning her on the Union HRD ministry’s model school initiative, chief minister J. Jayalalithaa charged him with maintaining ‘double standards” on the issue. Having granted permission and expre­ssed his support as chief minister then, Karun­anidhi was now opposing the same only to gain some political mileage, she said.
She claimed that he had kept mum when the Centre’s Rashtriya Vidyalaya Scheme was introduced when he was chief minister “for his personal gains” and supported the move. Now, he raised a banner of protest by issuing a statement, reflecting his double standards.
His recent statement on the issue surprises one as whether he was indulging in such tactics because he is confused as to whom he should align with in the next Lok Sabha elections, particularly when Congress has not taken a right decision on the Sri Lankan Tamils iss­ue, Jayalalithaa said.
The Centre began work to implement Model School Scheme in 2007 to set up 6,000 model schools thro­ugh state governments’ efforts in educationally backward districts. The state cabinet, which discussed it on July 22, 2009 approved establishing 20 model schools with Cent­re’s assistance, at a cost of `75.40 crore, she said.
The medium of education is only English and there was an entrance test for students to enrol in these schools, she said and asked Karunanidhi to explain why he kept quiet then and was raking it up now

SIRKALI AGREEMENT



5 teachers for 4 students

By தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-நாகப்பட்டினம் வட்டாரம்

BEST WISHES TO MR.J.RAJESH









--

Wednesday, November 13, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் அதிக தேர்ச்சி ஏன்?


கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் சேலம் மாவட்டம் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு, தேர்வெழுதிய 34,180 பேரில் 1,753 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தகுதித்தேர்வு தேர்ச்சியில் நீலகிரி மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம்
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் தமிழ்நாடு உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் (காஷ்மீர் தவிர) கடந்த 23.8.2010 முதல் அமலுக்கு வந்துவிட்டது.
அரசு பள்ளியோ, அரசு உதவி பெறும் பள்ளியோ, சுயநிதி பள்ளியோ அனைத்து பள்ளிகளுக்கும் தகுதித்தேர்வு விதிமுறை பொருந்தும். அரசு பள்ளிகளிலும் உதவி பெறும் பள்ளிகளிலும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் கண்டிப்பாக தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் முதலிடம்
தமிழ்நாட்டில் இதுவரை 3 தகுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. முதல் தேர்வில் 0.3 சதவீதம் பேரும், 2-வது தகுதித்தேர்வில் 3 சதவீதம் பேரும் அண்மையில் வெளியான தேர்வில் 4.26 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். முந்தைய தேர்வுகளுடன் ஒப்பிடும்போது, தேர்ச்சி விகிதம் ஏறுவரிசையை நோக்கி சென்றாலும், அது மிகவும் குறைவுதான்.
கடந்த வாரம் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 27,072 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 12,596 பேர் இடைநிலை ஆசிரியர்கள், 14,496 பேர் பட்டதாரி ஆசிரியர்கள். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் சேலம் மாவட்டம்தான் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை 13,372 பேர் எழுதினர்.
கடைசி இடத்தில் நீலகிரி
அவர்களில் 687 பேர் தேர்ச்சி பெற்றனர். அதேபோல், பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை 20,808 பேர் எழுதியதில் 1066 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இரு தேர்வுகளில் சேர்த்து பார்த்தால் 34,180 பேர் தேர்வு எழுதி, அதில் 1,753 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தகுதித்தேர்வு தேர்ச்சியில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தகுதித்தேர்வில் தருமபுரி 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியில் நீலகிரி மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை 1,294 பேர் எழுதியதியதில் 60 பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை 3,261 பேர் எழுதியதில் 43 பேரும் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒட்டுமொத்தமாக 33,440 தேர்வு எழுதினர். அவர்களில் தேறியவர்கள் வெறும் 780 பேர் மட்டுமே

15 ம் தேதிக்குள் முடிக்க ஆசிரியர்கள் திணறல்

  •  மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண்ணுடன் பல் நோக்கு பயன்மிக்க ஸ்மார்ட் கார்டுகள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
  • இந்த கார்டுகளை வரும் 15 ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க ஆசிரியர்கள் திணறி வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் 1397 தொடக்கப்பள்ளிகள், 264 நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 3.18 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள். இந்த மாணவ, மாணவியரின் தகவல் அடங்கிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்கான விபரங்கள் இணைய தளத்தில் பதிவேற்றும் பணி 11 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
  • எல்லா பள்ளிகளிலும் இணையதள வசதி இல்லை. அதனால் மாவட்ட கல்வி நிர்வாகம் பொன்னேரி மற்றும் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரிகளில் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி 158 கணினிஆசிரியர்கள் மூலம் தகவல் பதிவேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி முழுமை அடையவில்லை.அதில் உள்ள பிழைகளை அந்தந்த பள்ளிகளே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனல் கணினி வசதி இல்லாத பள்ளிகள் பிழைகளை திருத்தம் செய்ய முடியாமல் உள்ளனர். தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கணினி வசதி கிடையாது.
  • அதனால் தனியார் மையங்களில் பணிகளை முடிக்க முயன்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் தேதி அன்று மாணவர்களின் அடையாள அட்டை எண்ணையும் ஸ்மார்ட் கார்டில் சேர்க்க உத்தரவிடப்பட்டது. இப்பணியை முழுமையாய் முடிக்க முடியாமல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் திணறி வருகிறார்கள்.

Friday, November 08, 2013

TEACHERS WHO HAVE GIVEN APPLICATION FOR ADDITIONAL 3% .GIVE THIS TODAY (GRIEVANCE DAY)

EMIS OFFLINE INSTRUCTIONS

நரிக்குறவர்களின் நலம் நாடும் நல்லாசிரியர் உதயகுமார்

ஒரு இயக்கம் செய்ய வேண்டிய காரியத்தை 25 வருடங்களாக தனி மனிதனாகச் செய்து கொண்டிருக்கிறார் நல்லாசிரியர் விருதுக்குச் சொந்தக்காரரான உதயகுமார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடா னையை ஒட்டியுள்ளது பண்ணவயல் கிராமம். இங்குள்ள சமத்துவபுரத்தில் குடியிருக்கும் நரிக்குறவர்கள், உதயகுமாரை தோளில் தூக்காத குறையாக கொண்டாடுகிறார்கள். சில வருடங்களாக அந்த மக்களுக்கு இவர்தான் காட் ஃபாதர்.
அவரைச் சந்திக்க திருவாடானை சென்றோம். பஸ் நிலையத்தில் இறங்கி செல்போனில் தொடர்பு கொண்டபோது, தாலுகா அலுவலகத்தில் இருப்பதாகச் சொன்னார். அங்கு சென்றபோது, அலுவலக வாசலில் இருக்கும் அரச மரக் கன்றுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். இங்கு மட்டுமல்ல.. திருவாடானை தாலுகா வட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலமரம் மற்றும் அரச மரக் கன்றுகளை நட்டும் அவற்றை பிள்ளைகள்போல் பராமரித்தும் வருகிறாராம் உதயகுமார்.
“ஏதோ பிறந்தோம்.. வாழ்ந்தோம்.. இறந்தோம் என்று இல்லாமல் வாழும் காலத்தில் எதைச் சாதித்தோம் என்ற கேள்வி நமக்குள் இருக்க வேண்டும். மற்ற உயிரினங்கள் தன் இனத்துக்காக செய்ய முடியாததை மனிதன் மட்டுமே செய்ய முடியும். அது கல்வி, பொருளாதாரம், உடல் உழைப்பு என்று எந்த வழியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏழை, எளியவர்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என நினைத்தேன். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்”... தத்துவார்த்த மான வார்த்தைகளுடன் பேச்சைத் தொடங்கினார்.
பண்ணவயல் நரிக்குறவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் வாழ்க்கை முறையையும் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். மற்றவர்களைப் போல இவர்களுக்கும் சம வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் இவர்களில்கூட ஒரு கலெக்டரை உருவாக்க முடியும். இதை மனதில் வைத்துதான் இந்த மக்களை நெருங்க ஆரம்பித்தேன். திருவாடானை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தபோது, இங்குள்ள ஒரே ஒரு நரிக்குறவர் குழந்தையை பள்ளியில் சேர்த்தேன். அதற்கு நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்லை. அதற்காக பின்வாங்கவில்லை. தொடர்ந்து அந்த மக்களிடம் பேசிப் பேசி, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்னேன். பல குழந்தைகளை பள்ளிக்கூடத்துப் பக்கம் திருப்பினேன். இப்போது, 56 குழந்தைகள் திருவாடானை சமத்துவபுரம் அன்பாலயா உறைவிடப் பள்ளியில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் படிக்கிறார்கள்.
தங்கள் குழந்தைகளை முறையாக தமிழ் பேசவும் எழுதவும் படிக்கவும் வைத்திருப்பதால் என்னை அந்த மக்கள் நம்புகின்றனர். அவர்கள் இல்லங்களில் நடக்கும் சுக, துக்கங்களில் என்னையும் மறக்காமல் சேர்த்துக் கொள்கிறார்கள்…
பேசியபடியே பண்ணவயல் சமத்துவபுரத்துக்கு அழைத்துச் சென்றார்.
உதயகுமாரின் தலையைப் பார்த்ததுமே அங்கிருந்த நரிக்குறவ மக்கள், ‘சார்.. சார்..’ என்று அவரை மொய்த்துவிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.
இவங்களோட நாகரிகமில்லாத நிலை, உடல் துர்நாற்றம், சுத்தமில்லாத ஆடை போன்றவை ஆரம்பத்தில் எனக்கும் குமட்டத்தான் செய்தது. ஆனால், நாளடைவில் பழகிப்போச்சு. நாகரிகம்னா என்ன, சுத்தபத்தம்னா என்னன்னு இவங்களுக்கு இன்னமும் சொல்லிக் கொடுத்துக்கிட்டேதான் இருக்கிறேன். திருவாடானையில் உள்ள ஆதிரத்தினேஸ்வரர் கோயில் தேவாரமும் திருவாசகமும் பாடிய திருத்தலம். அதனால், ஆண்டுதோறும் கோயில் விழாக்களில் நரிக்குறவர் மாணவர்களை தேவாரமும் திருவாசகமும் பாடவைக்கிறேன்.
என்னதான் பாடமா படிச்சாலும் இந்தக் குழந்தைகள் ஏழாம் வகுப்புக்கு மேல படிக்க மாட்டேங்குறாங்க. காரணம் இவங்களுக்குள்ள இருக்கிற குழந்தைத் திருமண முறைகள். இன்னொன்று இவர்களின் பொருளாதார நிலைமை. இந்த நிலையையும் மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கேன். என் ஆயுளுக்குள் இந்தக் குழந்தைகள்ல யாராச்சும் ஒருத்தரையாவது கல்லூரியில் சேர்த்து படிக்க வைச்சிடணும். அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா நரிக்குறவர் வீட்டுக் குழந்தையா பிறக்கணும். இதுதான் எனக்கிருக்கிற ஆசை… கண்கள் பணிக்கச் சொன்னார் உதயகுமார்

ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம்


  • By ஆ.ரகுராமன், சென்னை

First Published : 08 November 2013 02:25 AM IST
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் செய்யும் முறை இந்த ஆண்டு மாறலாம் எனத் தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலப் பதிவு மூப்புக்குப் பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாமா என அரசு பரிசீலித்து வருகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.
இதில் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை மட்டுமே மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் இரண்டு தாள்களையும் சேர்த்து மொத்தம் 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் 14,496 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாளில் 12,596 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 2 ஆயிரம் காலிப்பணியிடங்களும் உள்ளன.
கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் காலிப்பணியிடங்களை விட குறைவான ஆசிரியர்களே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்ததால் நியமன முறை அதிக முக்கியத்துவம் பெறவில்லை.
என்ன வழக்கு? இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.
அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு இரண்டிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில மாதங்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
மனுவை ஏற்று இந்த வழக்கை முடித்துவைத்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு காலாவதியாகியுள்ளது.
எனவே, இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வெயிட்டேஜ் மதிப்பெண் முறை (அரசாணை எண் 252) மூலம் நியமனம் செய்யலாமா அல்லது மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யலாமா என தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

STUDENTS ATTEMPT TO COMMIT SUICIDE

imggallery

TET RESULT -CONFUSION STARTS

Tuesday, November 05, 2013

டிஇடி தேர்வு முதல் தாள் முடிவு வெளியீடு


ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இரண்டாம் தாளுக்கான முடிவு நள்ளிரவுக்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி விகிதம் 4.09% ஆக உள்ளது என ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
கடந்த மாதம் 17,18ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெற்றன.  சுமார் 2 லட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகை தொடக்க கல்வி அலுவலகத்தில் காலி பணிடங்களை நிரப்ப வேண்டும்

END CARD FOR SCHOOLS

MK QUESTIONS GOVERNMENT ON ADARSH VIDYALAYA

NEW EDUCATION MINISTER ORIENTATION

EDUCATIONAL OFFICERES MEET

AIPTF ASSAM CONFERENCE-

AIPTF ASSAM CONFERENCE-TOUR NOV.26-27.FLIGHT TICKET 13000 UP AND DOWN+OTHER EXPENSES.6 DAYS SPL.CL ALLOWED IF INTERESTED CALL 9443526696

Sunday, November 03, 2013

EMIS SHOULD BE UPDATED IN OFFLINE SOFTWARE-LAST DATE NOVEMBER 15

மறக்க முடியாத மாணவர்கள்: மகாலெட்சுமி.

தேர்வறையின் மூலையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி காலாண்டுத்தேர்வை கர்மசிரத்தையுடன் எழுதிக்கொண்டிருந்த மாணவிகளை கண்காணித்துக்கொண்டிருந்தேன். முகங்களில் பதட்டம் தெரிய பரபரப்பின் காரணமாக வழிந்த வியர்வையை துடைக்கக்கூட அவகாசமின்றி மாணவிகள் மும்முரமாய் எழுதிக்கொண்டிருந்தது எனக்கு என் பள்ளி காலங்களை நினைவூட்டியது. சற்றே இறந்த காலத்தில் தொலைந்திருந்த என்னை வராத மாணவிகளின் எண்களை குறித்துப்போக வந்த பியூனின் குரல் மீட்டெடுத்தது.
 
வராத மாணவிகளின் எண்களை குறித்து கையெழுத்திட்டு நீட்டியபோதுதான் கவனித்தேன் அவளை. மகாலட்சுமி !. என் வகுப்பில் எப்போதும் அவள் படித்ததில்லை. அதனால் அவளைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் இப்போது அவள் செய்துகொண்டிருந்த செயல் அவளைப் பற்றி அறியவும், அவளுக்கு சற்று அறிவுரை வழங்கவும் வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
 
தேர்வு முடிந்ததும் அனைவரும் விடைத்தாட்களை ஒப்படைத்துவிட்டு கிளம்ப அவளும் என்னிடம் வந்தாள். நீ கொஞ்சம் இரு கடைசியாக போகலாம் என்றேன். அவளுக்கு சட்டென்று வியர்த்தது. முகம் மாறியது. ஓ! இவர் நம் செயலைக் கவனித்து விட்டார் என்று புரிந்துகொண்டாள். ஒருவேளை அதற்கு என்ன பதில் சொல்லலாம் எனவும் கிடைத்த அந்த அவகாசத்தில் அவள் யோசித்திருக்க கூடும். அனைவரும் சென்றபிறகு அவளையே பார்த்தேன். சிரிக்க முயன்று தோற்றாள். நான் போகட்டுமா மேம் என்றாள். எப்படி உட்கார்ந்திருந்தே அங்கே என்றேன். சம்மணம் போடாமல் உட்கார்ந்திருந்தேன். நான் அதைப் பத்தி கேட்கல என்றேன் அழுத்தமாக. புரியல மேம் என்று தயக்கத்தோடு பார்த்தாள். சற்றுநேரம் அவள் கண்களையே பார்த்து சரி நீ போ என்றேன் மேலும் ஒன்றும் கூறாமல். அதுவரை பாடம் நடத்துதலின் அழுத்தம் காரணமாக வளரிளம் பருவ மாணவிகளுக்கு அறிவுரை கூறுவதில் சற்றே சுணக்கம் கண்டிருந்தேன். இப்போது  மீண்டும் அதற்கு அவசியம் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டாள் அவள்.
 
ஒருவாரம் சென்றிருக்கும். பக்கத்து வகுப்பறையில் ஒரே சலசலப்பு. சற்று நேரத்தில் இரு பெண்கள் ஓடி வந்தனர். மேம், பக்கத்து காம்பவுண்டிலிருந்து  இந்த பந்து வந்து விழுந்தது என்று கல் கட்டிய பேப்பர் பந்து ஒனறை நீட்டினாள்.வாங்கி பார்த்தேன். யாரோ 9 ம் வகுப்பி பி பிரிவு மகாலட்சுமி எனும் மாணவிக்கு எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம். காதல் ரசம் அறுவருப்பின் எல்லையைத் தொட்டது. அவளை அழைத்து வா என்றேன். வந்தவளைப் பார்த்து அதிர்ந்துபோனேன். சென்ற வாரம் பதின்பருவ மாணவிகள் பற்றி என்னைச் சற்றே யோசிக்க வைத்தவள்.
 
அவளிடம் ஒன்று பேசத் தோன்றவில்லை எனக்கு. மனதளவிலும் உடலளவிலும் வயதுக்கு மீறி வளர்ந்திருந்தாள் அவள். இந்தக் கடிதத்தில் அவளுக்கு எந்தளவு பங்கு இருக்கிறது என்று தெரியவில்லை எனக்கு. ஆகவே பொதுவாக ஆனால் அழுத்தமாக அறிவுரை கூறி அவளை அனுப்பி வைத்தேன். ஆனால் அந்த அறிவுரைகளை அவள் நின்று கேட்டவிதம், இதுபோன்ற அறிவுரைகள் எனக்கு ஏற்கனவே பழக்கம்தான் என்றது. 
 
அன்று வெள்ளிக்கிழமை. வளரிளம் பருவ மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமைத் தோறும் மாலை நேரங்களில் அவர்களின் உடற்கூறு மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை பற்றி விவாதிக்கும் நாள் .அதன் ஒருங்கிணைப்பாளர் நான். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆசிரியை கருத்துகளைக் கூற வேண்டும் என்று ஏற்பாடு. அன்றைக்கு பேச இருந்த ஆசிரியையிடம் இன்று நானே பேசிவிடுகிறேன் அடுத்த வாரம் உங்களை அழைக்கிறேன் என்று கூறி அன்று நானே வகுப்புக்கு சென்றேன் .
 
மாணவிகளுக்கு அந்த வயதில் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அதனால் மனதளவில் ஏற்படக்கூடிய சலனங்களைப் பற்றியும் அதற்கு காரணமான ஹார்மோன்கள் பற்றியும் அவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைத்தேன். மேலும் பொதுவாகவே வளரிளம் பருவத்தினரிடையே எப்போதும் தங்கள் உடல் வளர்ச்சி பற்றிய ஒருவித கிளர்ச்சியும் காதல் பற்றிய ஒரு தெளிவற்ற சுயப் புரிதலும் இருக்கும். பார்ப்பவர் மீதெல்லாம் ஒரு ஈர்ப்பு வரும். நம் கல்வியாளர்கள் பன்னிரண்டு வயதுள்ள பருவத்தை plastic age எனவும் பதின்பருவத்தை Age of day dreaming என்றும் அழைப்பர்என்றும் விளக்கினேன் .  மேலும் இது கல்வி பயிலும் வயது இந்த நேரத்தில் மனதை ஒரு முகப்படுத்துதல் அவசியம். அலைபாய விட்டால் வாழ்க்கை தடம் மாறிப்போகும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அறிவுறுத்தினேன். அங்கே அமர்ந்திருந்த முன் வரிசை  மாணவிகளுள் மகா லட்சுமியும் ஒருத்தி!
 
இரண்டு மாதங்கள் சென்றிருக்கும் பள்ளி கல்வித்துறையின் ஆணையின்படி JRC (இளையோர் செஞ்சிலுவை சங்கம் )மாணவிகளை அருலிலிருக்கும் ஏதேனும் ஒரு இடத்துக்கு களப்பயணம் அழைத்து செல்ல வேண்டும் என்று கூறப்பட்டது. JRC பொறுப்பிலிருந்த ஆசிரியர் ஆண் என்பதால் பெண் ஆசிரியை ஒருவர் மாணவிகளுக்கு துணையாக செல்ல வேண்டும் என்று  தலைமை ஆசிரியர் என்னை அனுப்பி வைத்தார்.
 
பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளியின் பின்பக்கமாக பேருந்து நிறுத்தப்பட்டிருக்க நான் மாணவிகளுடன் உள்ளே அமர்ந்திருந்தேன். என் அருகில் அமர்ந்திருந்தாள் மலர்கொடி எனும் மாணவி. மிகத் தைரியமான பெண்.அவள் திடீரென  (தற்போது பெண் காவலராக பணிபுரிகிறாள்) என்னை உசுப்பினாள். என்ன என்றேன். முன்பக்கமாக கைக்காட்டினாள். நிமிர்ந்து பார்த்தேன். மகா லட்சுமி பேருந்துக்குள் இருந்து வெளியில் நிற்கும் ஒரு ஆணுக்கு சைகையில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். சரி யாராவது தெரிந்தவராக இருக்கும் விடு என்றேன். இல்லை மேம் என்றாள் மலர் அழுத்தமாக.
 
பேருந்து கிளம்பியது இறங்க வேண்டிய இடம் வந்தததும் அனைவரும் இறங்கினர் ,ஜாலியாக சுற்றி வந்தனர். நான் அவர்கள் மகிழ்வதை ரசித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று எங்கிருந்தோ ஓடிவந்தாள் மலர்கொடி. மேம் இங்கே வாங்களேன்  என்று அழைத்தாள்  அவள் பின்னே சென்றேன். அங்கே ஒரு தனியறையில் மகாலட்சுமி சைகையில் பேசிய பையனுடன் நின்றிருந்தாள். என்னைப் பார்த்ததும் அதிர்ந்துபோனாள். சட்டென்று முகத்தை மறைத்தபடி வெளியேறினான் அவன்.
 
யாரவன்? என்றேன்.
 
என் அண்ணன் என்றாள்
 
உன் அண்ணனிடம் இந்தக் காட்டில் வந்து என்ன பேசிக்கொண்டிருக்கிறாய்? ஏன் இப்படி புனிதமான உறவுகளை கொச்சைப் படுத்திறீங்க என்றேன் கோபமாய்.
 
சட்டென அது என் மாமா என்றாள்.
 
கோபம் தலைக்கேறியது எனக்கு. நாளை உன் அம்மாவை வரச்சொல் அவங்களோட நான் கொஞ்சம் பேசணும் என்றேன் வரவழைக்கப்பட்ட சாதாரண குரலில் .அன்று போனவள் தான் .மீண்டும் அவளை பார்க்கவில்லை .
 
ஆண்டுத் தேர்வுகள் நடந்துகொண்டிருந்த சமயம். தேர்வு பணி முடிந்து தலைமையாசிரியர் அறையிலிருந்து விடைத்தாட்களை பெற்றுக்கொண்டு  ஆசிரியர் ஓய்வறையை நோக்கி நடந்துகொண்டிருந்தேன் .சட்டென ஒரு குரல் குட் ஈவினிங் மேம் என்று கூறி என்னை நிறுத்தியது. நிமிர்ந்து பார்த்தேன் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போனேன். மஞ்சள் தடவிய முகத்துடன் கழுத்தில் புது தாலி மின்ன கால்களில் மெட்டி ஒலிக்க என்னை நோக்கி வந்தாள் மகாலட்சுகி. கண்களில் அதுவரை தெரிந்த துறுதுறுப்பும் ஆவலும் தொலைந்துபோய் அமைதி குடிகொண்டிருந்தது. நான் என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க, அவளே பேசினாள்.
 
எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி மேம் ! மாப்பிள்ளை என் மாமாதான். என்னை அன்பாக பார்த்துக்கறார். என்றாள் வெகுளியாக. முகத்தில் அத்தனை சந்தோஷம், பெருமிதம் ! 
 
ஆனால் அவளின் மகிழ்ச்சி என் முகத்தில் பிரதிபலிக்கவில்லை. மாறாக கோபமாய் வந்தது. என்ன பெற்றோர்கள் இவர்கள்! தங்கள் பொறுப்பை விரைவில் தட்டிக்கழித்து விட வேண்டும் என்பதில் இருக்கும் துடிப்பு இவர்களுக்கு தங்கள் குழந்தைகள் ஆயுள் முழுவதும் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதில் இல்லையே !இந்த பிள்ளைகளும் தான் கொஞ்சம் பெற்றவர்களிடம் பேசினால் என்ன !
 
எனக்கு நேற்று சந்தித்த வேல்விழியின் முகம் நினைவில் நிழலாடியது .1982 வில் தன் எட்டாம் வகுப்பை பாதியிலேயே விட்டுவிட்டு திருமணம் செய்திருந்தவர் தன்னுடைய பிறந்த தேதிக்காக மாற்று சான்றிதழ் வேண்டி வந்திருந்தார் .40 வயதுக்கு மேல் இருக்கும் அவர் தற்போது மாற்று சான்றிதழ் வாங்கி என்ன செய்யப்போகிறார் என்ற ஆர்வத்தில் அவரை விசாரித்தேன் .கட்டிய கணவன் தன்னை மணக்கவே இல்லை என்று கூறி வீட்டைவிட்டு துரத்திவிட்டார். அவர் ராணுவத்தில் பணிபுரிந்து மிலிட்டரி பென்ஷன் வாங்குகிறார். அதில் குழந்தைகளுக்கு பங்கு வேண்டும்.அதற்காக என் மாற்று சான்றிதழ் தேவைப் படுகிறது என்றார் வேதனையாக இருந்தது .
 
பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் இருக்கின்றனர். திருமணம் என்ற ஒற்றை வார்த்தையில் எல்லாவற்றையும் மறக்க தயாராய்!எதிர்க்காலத்தைப் பற்றிய சிறு அச்சமோ பயமோ இன்றி கணவன் பின் செல்கின்றனர். நம்பியவன் கைவிடும்போதுதான் தன்னை சுற்றியுள்ள உலகத்தை கவனிக்கின்றனர். வாழ்க்கைக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்று தாமதமாகவே உணரத்தொடங்குகின்றனர். கண்ணெதிரே எத்தனை பேரை பார்த்தாலும் இது போன்றவர்கள் உணர்வதில்லை. எனக்கு படிப்பு தான் முக்கியம். அதை முடித்துவிட்டு மனம் செய்துக்கொள்கிறேன் என்று எப்போது ஒரு பெண் சொல்கிறாளோ அப்போது தான் இதுபோன்ற துயரங்கள் அரங்கேறுவதை தடுக்க முடியும்.
மகாலட்சுமி இதுபோன்ற பெண்களில் ஒருத்தியாய் மாறாமல் இருக்க மனதுக்குள்  பிராத்தித்து அவளிடமிருந்து  விடைபெற்றேன் நான்!
 
 
D.விஜய லெட்சுமி, அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுபவர். அவர் தன்னிடம் படித்த மறக்க முடியாத மாணவர்களைப் பற்றி எழுதி வருகிறார்.

Saturday, November 02, 2013

மெல்லக் குறையுது மாணவர் எண்ணிக்கை: 1268 துவக்கப் பள்ளிகளுக்கு "பூட்டு

"நவம்பர் 02,2013,07:27 IST

எழுத்தின் அளவு :
குஜிலியம்பாறை: அரசு துவக்கப் பள்ளிகளில், 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூட, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேநிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே இல்லாமல் போகும் என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
தமிழக அரசு சமீப காலமாக, கல்வித்துறையில் நவீன பாட முறைகளையும், இலவச திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது; இருந்தும், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பெற்றோரின் ஆங்கிலக் கல்வி மோகம், போன்றவற்றின் தாக்கமே இதற்கு காரணம். இதனால், அரசுப்பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது.
தற்போது உள்ள 23 ஆயிரத்து 576 துவக்கப்பள்ளிகளில், 1268 பள்ளிகளை மூட அரசு முயற்சித்து வருவதாக ஆசிரியர் சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறியதாவது:
முதல் கட்டமாக, 10 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மூடப்பட உள்ளன. இப்பள்ளிகளில், தற்போது இரண்டு ஆசிரியர்கள், ஒரு சத்துணவு மேலாளர், இரண்டு ஆயாக்கள் உள்ளனர். இப்பள்ளிகளை மூடிவிட்டு, அருகில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஒன்றியத்திற்கு, மூன்று முதல் நான்கு பள்ளிகள் மூடப்படும். இதே நிலை நீடித்தால், அரசுப்பள்ளிகள் இல்லாமல் போகும். இவ்வாறு கூறினர்.

Friday, November 01, 2013

தமிழகத்தில் மாதிரி பள்ளித் திட்டத்தை தடுக்க ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் மாதிரி பள்ளித் திட்டத்தை தடுக்க ராமதாஸ் கோரிக்கை

Comment   ·   print   ·   T+  

தமிழகத்தில் மாதிரி பள்ளித் திட்டத்தை தடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாதிரி பள்ளி திட்டத்தை அனுமதிப்பது கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கும் விதமாக அமைந்து விடும். ஏற்கெனவே, அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, சுமையில்லாத பள்ளிக்கல்வியை இலவசமாக வழங்க வேண்டிய மாநில அரசு கடமையில் இருந்து தவறி கல்வியில் தனியார் பள்ளிகளை அனுமதித்ததன் விளைவு தான் இன்று கல்வி கடைச் சரக்காகி இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கல்வியில் பின்தங்கிய பகுதி அல்லாத ஒன்றியங்களில் தலா ஒரு தேசிய மாதிரி பள்ளியை தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ள 2500 பள்ளிகளில் 356 பள்ளிகள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு மற்றும் கல்வித்தரத்துடன் கூடிய இத்தகைய பள்ளிகள் தொடங்கப்பட வேண்டியது வரவேற்கத்தக்கது தான். ஆனால், இந்த பள்ளிகளை தனியார் துறையினருடன் இணைந்து தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது தான் மிகுந்த கவலை அளிக்கிறது.
அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, சுமையில்லாத பள்ளிக்கல்வியை இலவசமாக வழங்க வேண்டியது அரசுகளின் கடமை ஆகும். இக்கடமையிலிருந்து தவறிய அரசுகள் தனியார் பள்ளிகளை அனுமதித்ததன் விளைவு தான் கல்வி இன்று கடைச் சரக்காகி விட்டது. இந்த நிலையில் தனியார் பங்களிப்புடன் பள்ளிகளைத் தொடங்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
தேசிய மாதிரி பள்ளிகளைத் தொடங்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகள் அனைத்தும் தனியாருக்கு சாதகமாகவே உள்ளன.
இதற்கெல்லாம் மேலாக, இப்பள்ளிகளுக்கு தேவையான நிலம் வழங்குதல், பத்தாண்டுகளுக்குப் பிறகு விருப்பமிருந்தால் நிதி உதவி வழங்குதல் ஆகியவற்றைத் தவிர இந்தத் திட்டத்தில் மாநில அரசுகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை.
இது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல் என்பது மட்டுமின்றி, மாநில அரசின் அதிகாரத்தையே பறிக்கும் செயலாகும். இத்திட்டம் தொடர்பான கருத்துக்களை மாநில அரசுகள் தெரிவிப்பதற்கான அவகாசம் முடிவடைந்துவிட்ட நிலையில் தமிழக அரசு எத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது தெரியவில்லை.
மாநிலங்களின் அதிகாரத்தில் குறுக்கிடும் வகையிலும், கல்வியை தனியார் மயமாக்கும் வகையிலும் அமைந்துள்ள இத்திட்டத்தை தமிழ்நாட்டில் மாநில அரசு அனுமதிக்கக்கூடாது. இதற்கு முன் கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் இத்தகைய மாதிரி பள்ளிகளை மத்திய அரசு அறிவித்தபோது, தனியாரை அனுமதிக்காமல் தமிழக அரசே அந்த பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகிறது.
அதேபோல் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 356 மாதிரி பள்ளிகளையும் தமிழக அரசே தொடங்கி நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் புதிதாக 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் - அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம்

தமிழகத்தில் புதிதாக 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் - அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம்

ஜெ. கு. லிஸ்பன் குமார்
Comment   ·   print   ·   T+  

தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இதையடுத்து, அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. அரசு - தனியார் கூட்டுமுயற்சியுடன் இது நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் வட்டாரத்துக்கு ஒரு பள்ளி வீதம் 2,500 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படும்.
இதற்காக தனியார் புதிய பள்ளிகளை தொடங்கலாம். அல்லது தற்போதைய பள்ளிகளையே மாதிரி பள்ளிகளாக மாற்றிக்கொள்ளலாம். பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிக்காக மொத்த செலவில் 25 சதவீத தொகையை மத்திய அரசு மானியமாக ஆண்டுதோறும் வழங்கும்.
அரசு ஒதுக்கீடு
பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களில் 40% பேர் அரசால் ஸ்பான்சர் செய்யப்படுவர். எஞ்சிய 60% பேர் பள்ளி நிர்வாகத்தால் சேர்க்கப்படுவார்கள். அரசு ஸ்பான்சர் செய்யும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே பள்ளிக்கு செலுத்திவிடும். நிர்வாகப் பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகமே நிர்ணயித்துக்கொள்ளலாம். ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம்தான் சம்பளம் வழங்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட இந்த மாதிரிப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் போல் செயல்படும். இப்பள்ளிகளில் நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அரசு ஸ்பான்சர் செய்யும் மாணவர்களுக்கும் இது பொருந்தும். மாதிரிப் பள்ளிகளுக்கு மத்திய அரசின் 25 சதவீத மானிய உதவி 10 ஆண்டுகளுக்கு கிடைக்கும். அதன்பிறகு அந்தந்த மாநில அரசுகள் உதவிசெய்ய வேண்டும்.
356 பள்ளிகள்
நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ள 2,500 மாதிரிப் பள்ளிகளில் தமிழ்நாட்டுக்கு 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்காக கல்வியில் பின்தங்கிய பகுதி அல்லாத இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. சென்னையில் எழும்பூர், அடையாறு, மயிலாப்பூர், புரசைவாக்கம், பெரியமேடு, ராயபுரம், திருவல்லிக்கேணி, தி.நகர், பெரம்பூர் ஆகிய 9 இடங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
மாதிரிப் பள்ளிகள் தொடங்க விரும்பும் அறக்கட்டளைகள், சங்கங்கள், தனியார் நிர்வாகங்கள் போன்றோரிடம் இருந்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கெனவே விண்ணப்பங்களை பெற்றுவிட்டது. மாதிரிப் பள்ளிகள் தொடங்குவதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தகவல் அனுப்பியிருக்கிறது. இதுவரை தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மாதிரிப் பள்ளிகள் தொடங்க நிச்சயம் அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
அரசு பள்ளிகள் பாதிக்கும்
சாதாரணமாகவே தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களின் பெற்றோர் படையெடுப்பது வழக்கம். ஆங்கில மோகம்தான் அதற்கு காரணம். தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பக்கமும் பல பெற்றோரின் பார்வை திரும்பியிருக்கிறது. இந்த நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான வசதியுடன் இலவசமாக படிக்கக்கூடிய வாய்ப்புடன் மாதிரி பள்ளிகள் வரும்பட்சத்தில் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கூட தங்கள் குழந்தைகளை இதுபோன்ற பள்ளிகளில் சேர்க்கவே ஆசைப்படுவார்கள். இதனால். அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
வேண்டுகோள்
மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படுவது குறித்து பொதுப் பள்ளிமுறைக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, “மத்திய அரசு-தனியார் கூட்டுமுயற்சியில் உருவாகும் மாதிரிப் பள்ளிகள் திட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக தனது ஆட்சேபணையை தெரிவிக்க வேண்டும். இந்த திட்டத்திற்காக தனியாருக்கு மத்திய அரசு வழங்கும் 25 சதவீத மானியத்தொகையை தமிழக அரசு கேட்டுப்பெறவேண்டும். அதை இங்குள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக ்கொள்ளலாம். மாதிரி பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், கல்வி முற்றிலும் வணிகமயமாகிவிடும்” என்று குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தில், தமிழ்நாட்டுக்கு 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

பள்ளிக்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள்

பள்ளிக்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள்

Comment   ·   print   ·   T+  
  • வெளி மாநிலக் குழந்தைகளுக்கு வங்க மொழி கற்றுத்தரப்படுகிறது. உள்படம்: சுதீப் பிஸ்வாஸ்
    வெளி மாநிலக் குழந்தைகளுக்கு வங்க மொழி கற்றுத்தரப்படுகிறது. உள்படம்: சுதீப் பிஸ்வாஸ்
  • கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நாகராஜன்
    கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நாகராஜன்

பரந்து விரிந்த செம்மண் பூமி. சுற்றுவட்டாரம் முழுவதும் செங்கல் சூளைகள். வேட்டி கட்டிய தமிழ் முதலாளிகள். மேற்கு வங்காளம், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலிருந்து குடும்பத்தோடு குமரிக்கு வந்து தங்கியிருந்து வேலை பார்த்து வயிற்றை நிரப்பும் கூலித் தொழிலாளர்கள். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, ஆரல்வாய் மொழி சுற்றுவட்டாரப் பகுதியின் காட்சியமைப்புதான் இது.
மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கூலி வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களின் குழந்தைகள் தெருப் புழுதியில் விளையாடி பொழுதை கழித்து வந்தார்கள். இதை அறிந்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நாகராஜன், களப்பணியில் இறங்க… இதோ இப்போது 300 வெளிமாநிலக் குழந்தைகளுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் பேசினோம். ’’தோவாளை பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் வெளிமாநிலங்களிலிருந்து வந்து வேலை பார்ப்பவர்களின் குழந்தை கள் பள்ளிக்கு செல்லாதது உறுத்த லாக இருந்தது. இவர்கள் அதிகபட்சம் ஒரு வருடத்துக்கு மேல் எந்த இடத்திலும் நிரந்தரமாக ஒரே பகுதியில் தங்கி வேலை செய்வ தில்லை என்பது தெரியவந்தது. கல்வித் துறையின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் இவர்களுக்காக குறுகிய காலப் பயிற்சி மையங்களை தொடங்கினோம். ஒரு மனிதனுடைய தாய் மொழி மட்டுமே அவனை பண் புள்ளவனாக்கும் என்பதால் வெளி மாநில குழந்தைகளின் நலனைக் கருதி பெங்காலி, ஹிந்தி, வங்க மொழி பாடப் புத்தகங்களை வாங்கி னோம். வெவ்வேறு வயதுடைய குழந்தைகளை வயதுவாரியாகப் பிரித்து, மாவட்டம் முழுவதும் நீண்ட கால மற்றும் குறுகிய கால 10 பயிற்சி மையங்களை தொடங்கியுள்ளோம். 272 குழந்தைகள் படிக்கிறார்கள். அதில் மேற்கு வங்க குழந்தைகள் மட்டும் 218 பேர்” என்றார்.
வெளிமாநில குழந்தைகளின் கல்விக்கான மையங்களின் தோவாளை வட்டாரத்தின் மைய மேற்பார்வையாளர் ஹேமாவிடம் பேசியபோது, ’’ஆட்சியர் வழிகாட்டுதலின் அடிப்படையில் செங்கல் சூளை அமைந்துள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று அவர்களின் பெற்றோர்களிடம் மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் பேசினோம். குழந்தைகளை எங்களை நம்பி அனுப்பி வைப்பதில் அவர்களுக்கு தயக்கம் இருந்தது. வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வரவும் ஏற்பாடு செய்தோம்” என்றார்.
அசத்தும் சுதீப் பிஸ்வாஸ்:
வெளிமாநில குழந்தைகளுக்கு பெங்காலி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் சுதீப் பிஸ்வாஸிடம் பேசியபோது, ’’நான் கொல்கத்தாவில் ஒரு காலேஜில் முதல் ஆண்டு ஆங்கிலம் படிச்சேன். குடும்ப சூழல் காரணமா படிப்பை பாதியில் விட்டுட்டு இங்கே செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்துட்டேன். நான் ஓரளவு இங்கிலீஷ் பேசுவேன்னு யாரோ கலெக்டரிடம் சொல்லிருக்காங்க. அவர்தான் என்னை பெங்காலி வகுப்பு எடுக்கச் சொல்லியிருக்கார்” என்கிறபோதே பிஸ்வாஸின் கண்கள் பனிக்கின்றன.
வெளிமாநில குழந்தைகள் பயிற்சி மையம் செல்வதற்காக இலவசமாகவே வேன் வசதியை செய்து கொடுத்திருக்கிறது அதே பகுதியில் உள்ள செயிண்ட் ஆன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி. இதே போல் இந்தக் குழந்தைகள் கல்வி வெளிச்சம் பெறுவதில் செங்கல் சூளை உரிமையாளர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்
வெளி மாநில குழந்தைகள் மத்தியில் கல்லாமையை இல்லாமையாக்கும் பணியில் கன்னியாகுமரி மாவட்டம் இந்தியாவுக்கே முன் உதாரணமாகத் திகழ்கிறது

SABL SLM-FOR NAGAPATTINAM THIRUVARUR DISTRICT TEACHERS ATTENTION

----------