தமிழில் 'ஆஃப்லைன் அகராதி'யை இலவசமாக வழங்கும் இ-கலைவன்!
|
Posted Date : 10:06 (13/06/2013)Last updated : 14:06 (14/06/2013)
(டவுன்லோடு இணைப்பு கீழே)
- சரா
தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், இந்த 40 வயது இ-கலைவன். கோவை - சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரிக்கு அருகில், 'இ-கலை' கணினி என்ற தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஓர் ஆண்டு காலம் முழுமையாக உழைத்து, இவர் யுனிகோடில் உருவாக்கி இருக்கும் அகராதியின் பெயர் - ‘களஞ்சியம் அகராதி'. ஆன்லைனிலும், தொழில்நுட்ப உலகிலும் தாம் கடந்து வந்த பாதையை விவரித்த சேகர், ‘‘நான் பிறந்த ஊர் போத்தம்பாளையம் என்னும் குக்கிராமம். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத எங்கள் நெசவு குடும்பம் திருப்பூருக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அறிவை கற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏதுவாக இல்லை. இந்நிலையில் வானொலியிலும், பத்திரிகைகளிலும் வரும் அறிவியல் சம்பந்தமான் கட்டுரைகளை கேட்டும், படித்தும் ஆராய்ந்தும் திறமையை வளர்த்துக்கொண்டேன். எங்கள் கிராமத்து பள்ளியில் நாங்கள் ஆசிரியர்கள் வந்தால் "காலை வணக்கம் ஐயா'' என்றும், அட்டென்டன்ஸ் எடுக்கும்போது "உள்ளேன் ஐயா" என்றும் 10 வருடங்கள் பழகிய நாக்கு, நகரத்துக்கு வந்து “Good morning Sir”, "Present Sir”-ருக்கு பழக பல மாதங்கள் ஆகிவிடும். அந்தப் பள்ளி மாணவர்களிடம் கேட்டால் அவமானமாகிவிடும் என்பதால் அவர்களிடமும் கேட்கமாட்டோம். Dictionary என்பது படிக்கும் காலம் வரை ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். காரணம் அப்பொழுதெல்லாம் வாத்தியார் எழுதி கொடுக்கும் நோட்டு புத்தகங்கள்தான் வீட்டில் வாங்கி தருவார்கள். அதில் Dictionary இருக்காது. கிராமத்தில் உள்ளவர்களுக்கு எப்படி தொடங்கவேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று விளக்கமளிக்கூடியவர்கள் குறைவாக உள்ள காரணத்தால், மாணவர்கள் புரியாமல் படிப்பதனால் கால விரயத்துடன் படித்தது பயனற்றதாக ஆகிவிடுகிறது. அதைப் போக்க அனைத்தும் அடங்கிய எளிமையான ஒரே ஒரு நூல் தமிழில் இருந்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆங்கிலத்தில் கணினி, மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப அறிவுள்ள புத்தகங்கள் ஏராளம். அவற்றில் வரும் வார்த்தைகளை புரிந்துகொள்வது மாற்று மொழிக்காரர்களுக்கு அதிலும் தமிழ் மொழி கொண்டவர்களுக்கு எப்போதுமே சவால்தான். இன்னும் நிறைய பேருக்கு உச்சரிப்பில் "Message”- “மெஜேஜ்'' ஆகிவிடும், “Fan" - “ஸ்பேன்" ஆகிவிடும். இன்றைய கணினி பயன்பாட்டில் இணையத்தில் இருந்து ஏராளமாக நமக்கு வேண்டிய புத்தகங்களை PDF, EBUP போன்ற கோப்புகளில் இலவசமாக Download செய்து கொண்டு படிக்கலாம். ஆனால், இங்கும் பிரச்னை வார்த்தைகளுக்கான பொருள்தான். இணையம் இருந்தால் இணையத்தில் தேடிக்கொள்ளலாம். அதில் நமது கவனமும், நேரமும் வீணாகும். இன்டர்நெட்டில் எலி பிடிக்கபோய் குரங்கை பிடித்து வருவோம். பத்தாவது வரை தமிழில் படித்தேன். அதுவரை தமிழில் கற்றதால் ஆங்கிலம், அறிவியல் கணினி சம்பந்தபட்ட வார்த்தைகள் மிகப் புதிதாகக இருந்தன. அதற்கு விளக்கம் தேடி நூலகம் சென்று படிப்பேன். இருந்தபோதும் ஒரு முழுமையாக என் தேடல்களுக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. இதை அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டுமென்ற என்னுடைய கனவு கணினியில் சாத்தியம் என்பது புரிந்தது. இது சம்பந்தமான தேடல்களில் கணினி மொழிகளை பலவற்றையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் பிறந்தது. நான் கணினியில் புரோகிராமிங் கற்றுக்கொள்ள PDF கோப்புகளில் உள்ள ஆங்கில புத்தகங்களை படிக்கும்போது ஏற்பட்ட இடர்கள் ஏராளம். “For loop”, “If condition”-க்கு எல்லாம் பொருள்தேடியவன் நான். இதைப்போன்ற இடர்பாடுகள் தமிழில் படிப்பவர்களுக்கு இருக்கக்கூடாது என்று அவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு மென்பொருளை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் உதித்தது. English-English ஏராளமான அகராதிகள் உண்டு. ஆனால், தமிழில் ஒரு சிலவே உண்டு. அவையும் கால மாற்றத்திற்கு ஏற்ப ஒருங்கு குறிக்கு (Unicode) மாற்றமடையவில்லை, அது தவிர, புதிய Windows 7, Windows 8 போன்ற நவீன இயங்கு தளங்களில் இயங்காது. தமிழில் Unicode அகராதிகள் ஆன்லைனில் உண்டு. ஆனால் Desktop-ல் இயங்கும் அகராதி இல்லை. இதன் விளைவாக உருவானதுதான் ‘களஞ்சியம் அகராதி'. என்னுடைய கணினி அனுபவ அறிவைப் பார்த்து ஒரு சில மென்பொருள் கம்பெனிகள் அழைத்தபோதும், எனக்கு ஆங்கில அறிவு போதிய அளவு இல்லாமையால் அந்த வாய்ப்புகள் தவறிவிட்டன. என்னைப் போல சிரமப்படும் மாணவர்களுக்கு என்னால் இயன்ற வரையில் HTML, CSS, Javascript, Java, C, C# , SQL, Animation, Electronics மற்றும் Embedded Project போன்றவற்றை தமிழில் மாணவர்களுக்கு கற்றுத்தருகிறேன். கல்வியில் உயர்ந்த சமுதாயமே உலகின் உயர்ந்த சமுதாயம். அந்த உயர்ந்த நோக்கோடு தான் தமிழக அரசு அனைத்து மாணாக்கர்க்கும் மடிக்கணினி தந்துள்ளது. அதனால் மாணவர்களின் அறிவு மிகவும் மேம்பாடு அடையும். அதற்கு கூடுதல் உந்து சக்தியாக இருக்க கல்வி பயன்பாட்டிற்கான இந்த களஞ்சியம் அகராதி இலவசமாக இணையத்தில் Download செய்துகொள்ளலாம். இன்றைய இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் படிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் படிப்பை கெடுப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் இந்த சமுதாயத்திற்கும், உலகிற்கும் செய்ய நிறைய கடமைகள் இருக்கின்றன என்பதை கருத்தில் கொண்டால் வெற்றியடைவது என்பது நிச்சயம். இந்த உலகில் வெறும் 2% மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீதி 98% Dark Mater-ராக இன்னும் கண்டுபிடிக்கபடாமல் உள்ளன. அதில் வருங்காலத்தில் தமிழகத்தின் கண்டுபிடிப்பின் பங்கு அதிகமாக இருக்கட்டும். எனக்கு பிடித்த பொன்மொழி உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். "என்னை தலை குனிந்து படி, உன்னை தலை நிமிரச் செய்வேன்- என்று சொன்னது புத்தகம்." இந்த உலகம் என்பது நமக்கு சொந்தமல்ல. இதை நம் எதிர்கால சந்ததியிடம் இருந்து கடன் வாங்கியுள்ளோம். அதை பத்திரமாக, நாம் அனுபவிக்கும் இத்தனை வசதிகளுடனும் அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அதுதான் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் இப்போதுள்ள தலையாய கடமை. எனவேதான் எனது ஆஃப்லைன் அகராதியை இலவசமாகவே வழங்குகிறேன்'' என்றார் சேகர். களஞ்சியம் அகராதியின் சிறப்புகள்: * ஒருங்குகுறி (Unicode) கொண்டு உருவாக்கப்பட்டது. * 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிப்பட்ட வார்த்தைகளுக்கான பொருள் கொண்டது. * 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள் தரும் இணைப்பு வார்த்தைகள். * ஆங்கிலம் - தமிழ், ஆங்கிலம் - ஆங்கிலம், தமிழ் - தமிழ் மற்றும் பல்கலைகழகக் பேரகராதி ஆகிய அனைத்து அகராதிகளையும் உள்ளடக்கியது. * 3000-க்கும் அதிகமான படங்கள். * உலக நாடுகளின் கண்டம், வரைபடம், கொடி கொண்டது. * தமிழில் (Built-in Tamil Typing) தட்டச்சு செய்து வார்த்தைகளுக்கு பொருள் தேடும் வசதி. * தமிழிலும், ஆங்கிலத்திலும் படித்துச் சொல்லும் (LH-Michelle & LH-Michael). * கணினியில் எங்கிருந்தும் ஒரு வார்த்தையை தேர்வு செய்துகொண்டு Shortcut key (Ctrl + ~) அழுத்தினால் வார்த்தைக்கான பொருள் கிடைக்கும். * தானியக்க இருமொழித் தேடுதல் (Automatic encoding) * புதிய வார்த்தை, பொருள் மற்றும் படங்களை பயனாளரே இணைத்து கொள்ளும் வசதி. * Free Software (இலவச மென்பொருள்) * தமிழில் முதல் மேஜைபயன்பாட்டு (Windows Desktop) ஒருங்குகுறி (Unicode) அகராதி. * Destop-ல் விரும்பிய வார்த்தைகளை விரும்பிய வண்ணங்களில், எழுத்துருக்களில் அமைத்துக் கொள்ளலாம். * Windows XP, Windows 7, Windows 8 சார்ந்த இயங்கு தளங்களில் இயங்கும். |
Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Sunday, July 07, 2013
OFFLINE DICTIONARY
TET RESERVATION PRO ARTICLE
ஆசிரியர் தேர்வில் சமூகநீதிக்கு சவக்குழி!
|
Posted Date : 07:07 (05/07/2013)Last updated : 07:07 (05/07/2013)
ஆசிரியர்கள் வாழ்க்கையில் பல தப்புக் கணக்குகளைப் போட்டு தமிழக அரசு விளையாடுவதாகக் கொதிக்கிறார்கள் கல்வியாளர்கள். தமிழக அரசு கடந்தமுறை நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைய சலசலப்புகளையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
ஆசிரியர் தேர்வு வாரியம் 2012-ம் ஆண்டு ஜூலை 12-ல் நடத்திய தகுதித் தேர்வில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 ஆசிரியர்கள் தேர்வு எழுதி, 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றது, அதிர்ச்சி அலையை எழுப்பியது. இரண்டாவது முறையாக அக்டோபர் மாதத்தில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ச்சிபெற்றனர். அவர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்படுவதில் பல குழப்பங்கள் தொடர்வதுதான் வேதனையின் உச்சம்.
இந்த நிலையில் மூன்றாம் முறையாக நடத்தப்படும் தேர்வை 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதுவார்கள் என எதிர்பார்ப்பதால், 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி சதவிகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதுகுறித்து, களப்பணியில் ஈடுபட்டுவரும் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸிடம் பேசினோம். ''தமிழ்நாட்டில்
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சத் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியக் கல்விக் கழக நெறிமுறைகளின் 9-ம் விதிமுறைப்படி ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். 'நலிந்த பிரிவினருக்குத் தகுதி மதிப்பெண்களைக் குறைத்து நிர்ணயிக்கலாம்’ என்று தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் சொல்லியும் தமிழக அரசு மட்டும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இது, இடஒதுக்கீட்டுக்கு எதிரானது.
ஆந்திராவில் முற்பட்ட வகுப்பினருக்கு 60 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம், தாழ்த்தப்பட்டவர்கள் - பழங்குடியினர் - மாற்றுத் திறனாளிகளுக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் என்ற இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுகின்றனர். தமிழகத்திலும் இதைப் பின்பற்றியிருந்தால், சுமார் 3 லட்சம் பேர் தகுதி பெற்றிருப்பார்கள். 36 ஆயிரம் காலிப் பணி இடங்களும் நிரப்பப்பட்டிருக்கும். அதாவது 19 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட்டது போக, கூடுதலாக 17 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும். வேலை கிடைத்த ஆசிரியர்கள் போக, மீதமுள்ளோர் ஆசிரியப் பணிக்குத் தகுதி பெற்றவர்களாக ஏற்று, அடுத்து காலிப் பணியிடங்கள் வரும்போதெல்லாம் அவர்களைப் பணியில் சேர்த்துக்கொள்ளலாம். சத்தீஸ்கர், மணிப்பூர், ஒடிசா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், பீகார், அருணாசலப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தகுதி மதிப்பெண்களில் 20 சதவிகிதம் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இனியும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், இந்த விவகாரத்தை நீதிமன்றம் தன்னிச்சையாகக் கவனத்தில் ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வெறும் இடஒதுக்கீடு மோசடி மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பும்கூட. ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் சௌத்ரியை சஸ்பெண்ட் செய்து விசாரிக்க வேண்டும்'' என்றார்.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ''ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும் பி.எட். படித்தவர்களுக்கும் ப்ளஸ் டூ, பட்டயம் அல்லது பட்டப் படிப்பு, தகுதித் தேர்வு ஆகியவற்றை சேர்த்து வெயிட்டேஜ் மதிப்பெண் 100 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ப்ளஸ் டூ-வில் 50 சதவிகிதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு பூஜ்யம் மதிப்பெண்தான் வெயிட்டேஜ் ஆக நிர்ணயிக்கப்படுகிறது. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் படிக்கும் பல பள்ளிகளில் ஆசிரியர், நூலகம், கட்டமைப்பு வசதிகள் இருந்திருக்காது. அதனால் ப்ளஸ் டூ-வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றாலும் அதற்குப் பிறகான அறிவுத் தேடலில் ஆசிரியப் பயிற்சியிலோ, பட்டப்படிப்பிலோ நல்ல மதிப்பெண்கள் பெற்றிருப்பர். வெயிட்டேஜ் முறையைப் பின்பற்றினால் சமூகரீதியாகப் பின்தங் கியவர்கள் ஆசிரியர்களாகத் தேர்வுபெற முடியாத சூழல் உருவாகும்'' என்கிறார். ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் சௌத்ரி, ''அரசு உத்தரவைப் பின்பற்றுகிறோம். இதற்குமேல் கருத்துத் தெரிவிக்க இயலாது'' என்று முடித்துக்கொண்டார்.ஆசிரியர்களுக்கு சட்டப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
- க.நாகப்பன், நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: வ.விஷ்ணு
|
IMPORTANT WEB ADDRESSES
தமிழக அரசுத் துறை சார்ந்த இணைய தளங்களை அறிந்துகொள்வோம்
By Venkatesan Sr
First Published : 07 July 2013 04:51 PM IST
அரசுத் துறைகள் பல்வேறு சேவைகளை மக்களுக்கு இணையம் மூலம் வழங்கி வருகின்றன. இந்த இணைய சேவைகள் அனைத்தும் இப்போது அந்தந்தத் துறைகளின் வலைத் தளங்களின் மூலம் அளிக்கப்படுகின்றன.
இணையதள சேவை, இணையதள முகவரி, சேவை தொடர்பான இணைப்புகள், சேவையின் நிலை குறித்த தகவல் இடம்பெறும். இதன் மூலம் பொதுமக்கள் அரசின் சேவைகளைப் பெற அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவை குறைக்கும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே இணையதளங்களை வெளியிட்டிருக்கிறது.
இதோ அந்த வெப்சைட்களின் முழுத் தகவல்களும் உங்களுக்காக.
* சான்றிதழ்கள் பெற...
பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf
http://www.tn.gov.in/appforms/death.pdf
சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
* E-டிக்கெட் முன் பதிவு:
ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
விமான பயண சீட்டு:
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
* E-Payments (Online):
BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html
Share Market - பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
* கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.php
http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp
http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm
பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
இணையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/
UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/
http://trb.tn.nic.in/
உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/
இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/
இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/
Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
* கணினி பயிற்சிகள் (Online)
அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html
சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html
சிறார்களுக்கு கணிதப் பயிற்சி
http://www.mathsisfun.com/
இ - விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com/\
ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http://www.yahoo.com/
http://www.ebuddy.com/
http://www.skype.com/
* பொது சேவைகள் (Online)
தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/
சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/
http://www.india-tourism.com/
http://www.theashokgroup.com/
http://www.smartindiaonline.com/
திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/
http://kalyanamalai.net/
http://www.bharatmatrimony.com/
http://www.shaadi.com/
குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/
ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://freehoroscopesonline.in/horoscope.php
இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/
இணையதள மூலமாக உங்களுக்கு தேவையான அகராதியை பார்க்க
http://www.enchantedlearning.com/Dictionary.html
http://dictionary.tamilcube.com
http://ta.wiktionary.org/wiki/
http://www.tamildict.com
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
http://www.bbc.co.uk/
SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx
இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx
* மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/
* வணிகம் (Economy)
தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
http://www.rates.goldenchennai.com/
http://www.bullionrates.in/p/live-bullion-rates.html
வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
http://www.xe.com/
* அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/
பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html
* அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf
மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf
பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf
நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf
http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
மேற்கண்ட இணையதளங்களை இருந்த இடங்களிலிருந்து பயன்படுத்தி அரசின் திட்டங்கள், அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெற அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவை குறைத்து பயன் பெறலாம்.
SCHOOLS WORKING BEYOND TIMINGS
பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகும் "பிசி" யாக செயல்படும் பள்ளிகளை கண்டு கொள்ளாத கல்வித் துறையால் சமூக விரோத செயல்கள் தொடருவதாக ஆசிரிய சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண கொள்ளை வசூல் முடிந்த நிலையில் தற்போது வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு போட்டியாக பல்வேறு அரசு பள்ளிகளிலும் கட்டண கொள்ளை நடந்து வந்த நிலையில் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கியுள்ளன. ஒரு சில வகுப்புகளுக்கு தொடர்ந்து "அட்மிஷன்" நடந்து வருகிறது.
ஆனால் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் பட்டியல் இன்னும் வெளியிடப்படாத நிலையில் இப்பள்ளிகளில் சேர முடியாத நிலையில் தனியார் பள்ளிகளை நாடி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.
இதே போல், முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர்கள் உட்பட பல்வேறு அதிகாரிகளின் காலி பணியிடங்கள் நீடிப்பதால் கல்வித் துறையில் பணிகள் தேக்கம் அடைந்துள்ளதோடு மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் பாதிக்கப்பட்டுள்னர்.
இதற்கிடையில் மாவட்டத்தில் கல்வித் துறை அறிவித்த கால அட்டவணையை மீறி மாலையில் கூடுதல் நேரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சில பள்ளிகளில் பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகு பள்ளி வளர்ச்சி குழுவினர் என்ற பெயரில் சிலர் தினமும் பள்ளிகளுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தினமும் பள்ளி "வசூல்" கணக்குகளை "ஆய்வு" செய்வதோடு பள்ளி வளாகத்தை "ஆக்ரமித்து" பல சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாக ஆசிரிய சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.
இரவு காவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஒரு சில ஆசிரியர்கள் இந்த "ஆய்வு" பணியில் பங்கேற்கின்றனர். ஒரு சில பள்ளிகளில் இரவு காவலர்கள் இல்லாத நிலையில் நள்ளிரவு வரை விரும்பத்தகாத சம்பவங்கள் நீடிக்கிறது. பள்ளி வளாகத்தில் பாட்டில்கள், "பலான" பொருட்களை விட்டு செல்வதால் மறுநாள் காலையில் பள்ளி வரும் மாணவிகள், பெண் ஆசிரியைகள் பாதிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததல் மாணவ, மாணவிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, மாவட்டத்தில் பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகும் "பிசி"யாக செயல்படும் பள்ளிகளையும், பள்ளி வளாகத்தில் இரவு வரை இருக்கும் சமூக விரோத கும்பல்களையும், இதற்கு உடந்தையாக இருக்கும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை கண்காணித்து கல்வித் துறை மற்றும் போலீஸ் துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரிய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
Saturday, July 06, 2013
PUBLIC GHERO AEEO
ஆசிரியர் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி ஆய்வுக்கு வந்த கல்வி அதிகாரி முற்றுகை பொதுமக்களின் போராட்டத்தால் வழுக்கம்பாறையில் பரபரப்பு
பதிவு செய்த நாள் : Jul 05 | 06:29 pm
கன்னியாகுமரி
வழுக்கம்பாறையில் ஆசிரியர் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி ஆய்வுக்கு வந்த கல்வி அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஆசிரியர் குறைப்பு
சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அதில் ஒரு ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்ய அதிகாரிகள் முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும், அந்த பகுதி பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மாணவர்களின் வருகைப்பதிவேட்டை ஆய்வு செய்வதற்காக உதவி தொடக்க கல்வி அதிகாரி சோபனகுமார் நேற்று வழுக்கம்பாறை அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்தார். இதுபற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மோகன் தலைமையில் பள்ளியின் முன்பு திரண்டனர்.
முற்றுகை போராட்டம்
பின்னர் அதிகாரி சோபனகுமாரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த பள்ளியில் உள்ள 4 ஆசிரியர்களில் ஒருவரைக்கூட இடமாற்றம் செய்யக்கூடாது என்று அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு அதிகாரி சோபனகுமார் கூறும்போது, “30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் தற்போது நியமிக்கப்படுகின்றனர். இங்கு 90 மாணவர்களே உள்ளனர் என்பதால் 3 ஆசிரியர்கள் போதுமானதாகும்“ என்று கூறினார்.
இதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மோகன் கூறும்போது, “இங்கு 94 மாணவர்கள் படிக்கிறார்கள். எனவே, கண்டிப்பாக 4 ஆசிரியர்கள் இருக்க வேண்டும்“ என்று கூறினார். அதற்கு அந்த அதிகாரி 2 நாட்கள் பொறுத்திருந்து இதுபற்றி முடிவு எடுப்போம் என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களது முற்றுகை போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Friday, July 05, 2013
A school with 1 teacher and kid
A school with 1 teacher and kid
The number of school-going children is low in Kallarkudi as several families from the settlement migrated to Tirupur and Coimbatore for employment, says the school's headmaster Muruganandam.
The primary school in the Kallarkudi tribal settlement in Valparai is a one-of-a-kind institution in many ways. It’s probably the only school that employs one teacher and has an attendance of one student. Though it may sound preposterous, the only teacher, Kalaiselvi, treks through the treacherous jungle, braving everything from elephant attacks to leech bites to reach the school and tutor her class II student. The tribal settlement is situated 20 km from Valparai town and about 100 km from Coimbatore.
The school’s headmaster, Muruganandam, and teacher Kalaiselvi walk nearly 2.5 km to reach the Kallarkudi Panchayat Primary School and at the end of the day too, they return on foot. They are met by the tribals every day at the bus stand and escorted to the settlement.
“We have to be careful while walking through the forest as the elephant population is high in the area and attacks from the pachyderms are quite common,” P Muruganandam, head master of the school told. And, it’s not enough to keep one’s eyes open for the gigantic creatures, one has to watch out for the tiny bugs on the forest floor as well. “Leeches are common along the trail and if you’re not careful, you could be left with bleeding wounds before you reach your destination,” the headmaster added.
Sources said the strength of students at the school dwindled in the last few years, thanks to the migration of tribals to the plains.
“On the instructions of higher officials, we explained to the local tribal families the various government welfare schemes for students attending the government schools. Many have promised to admit their wards and convince their relatives to admit their children as well,” he said. “We have to wait till August, when the chance of more students joining the school is high,” said Muruganandam, adding, “two years ago the school had four students.” The number of school-going children is low in Kallarkudi as several families from the settlement migrated to Tirupur and Coimbatore for employment, said Muruganandam. Similarly, the student strength is low in six other tribal settlements in and around the Valparai. The Kavarakkal tribal settlement panchayat primary school also has just one student, the Nedungkundru panchayat primary school has seven pupils, Karumutti tribal school has eight, Vellimudi tribal settlement school has nine, Poontachi tribal settlement school has 5 and the Palakkinar tribal settlement school has 4 students. However, department officials said there were no plans to close these schools.
The number of school-going children is low in Kallarkudi as several families from the settlement migrated to Tirupur and Coimbatore for employment, says the school's headmaster Muruganandam.
The primary school in the Kallarkudi tribal settlement in Valparai is a one-of-a-kind institution in many ways. It’s probably the only school that employs one teacher and has an attendance of one student. Though it may sound preposterous, the only teacher, Kalaiselvi, treks through the treacherous jungle, braving everything from elephant attacks to leech bites to reach the school and tutor her class II student. The tribal settlement is situated 20 km from Valparai town and about 100 km from Coimbatore.
The school’s headmaster, Muruganandam, and teacher Kalaiselvi walk nearly 2.5 km to reach the Kallarkudi Panchayat Primary School and at the end of the day too, they return on foot. They are met by the tribals every day at the bus stand and escorted to the settlement.

“We have to be careful while walking through the forest as the elephant population is high in the area and attacks from the pachyderms are quite common,” P Muruganandam, head master of the school told. And, it’s not enough to keep one’s eyes open for the gigantic creatures, one has to watch out for the tiny bugs on the forest floor as well. “Leeches are common along the trail and if you’re not careful, you could be left with bleeding wounds before you reach your destination,” the headmaster added.
Sources said the strength of students at the school dwindled in the last few years, thanks to the migration of tribals to the plains.
“On the instructions of higher officials, we explained to the local tribal families the various government welfare schemes for students attending the government schools. Many have promised to admit their wards and convince their relatives to admit their children as well,” he said. “We have to wait till August, when the chance of more students joining the school is high,” said Muruganandam, adding, “two years ago the school had four students.” The number of school-going children is low in Kallarkudi as several families from the settlement migrated to Tirupur and Coimbatore for employment, said Muruganandam. Similarly, the student strength is low in six other tribal settlements in and around the Valparai. The Kavarakkal tribal settlement panchayat primary school also has just one student, the Nedungkundru panchayat primary school has seven pupils, Karumutti tribal school has eight, Vellimudi tribal settlement school has nine, Poontachi tribal settlement school has 5 and the Palakkinar tribal settlement school has 4 students. However, department officials said there were no plans to close these schools.
Thursday, July 04, 2013
RALLY AGAINST ENGLISH MEDIUM IN GOVERNMENT SCHOOLS
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதைக் கைவிட வலியுறுத்தி
கோட்டையை நோக்கிக் கோரிக்கைப் பேரணி
தமிழ்வழி அரசுப் பள்ளிகளை அகற்றிவிட்டு, ஆங்கில வழிப் பள்ளிகள் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஆகத்து 8 அன்று சென்னை கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்தப்படும் என தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவு டைமைக் கட்சித் தலைவருமான பெ.மணியரசன் அறிவித்தார்.
கோட்டையை நோக்கிக் கோரிக்கைப் பேரணி
தமிழ்வழி அரசுப் பள்ளிகளை அகற்றிவிட்டு, ஆங்கில வழிப் பள்ளிகள் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஆகத்து 8 அன்று சென்னை கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்தப்படும் என தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவு டைமைக் கட்சித் தலைவருமான பெ.மணியரசன் அறிவித்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அங்கம் வகிக்கும் தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில், தமிழ்வழிப் பள்ளிகளை அகற்றும் தமிழக அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைத் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் 01.07.2013 திங்கள் அன்று மாலை சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளமல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சைதை கே.வி.சிவராமன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் குணங்குடி அனிபா, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளமல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சைதை கே.வி.சிவராமன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் குணங்குடி அனிபா, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில், பின்வரும் கருத்துகள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. தமிழக அரசு தமிழ்நாடெங்கும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதை கண்டித்தும் அத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், கடந்த 28.05.2013 அன்று சென்னையில் பள்ளிக் கல்வி இயக்கு னரகம் வாயிலில் எழுச்சியோடு முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அடுத்த கட்டப்போராட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுத்து அதன்படி 17.06.2013 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருட்டிணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், மன்னார்குடி, புதுக்கோட்டை, மதுரை, இராசப்பாளையம், திருநெல்வேலி, கன்னி யாகுமரி ஆகிய 18 இடங்களில் எழுச்சியோடு ஆர்ப்பாட்டம் நடந்தது. தருமபுரி, விழுப்புரம், கடலூர், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
2. மூன்றாவது கட்டப் போராட்டமாக 08.08.2013 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னையில் கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கோட்டையில் தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதற்குமுன் ஒருமாத காலத்தில் தமிழகம் முழுவதும் கிராமங்கள், நகரங்கள் உட்பட பரப்புரை கூட்டங்கள் நடத்த வேண்டும். வீடு வீடாக கோரிக்கை விளக்கத் துண்டறிக்கை வழங்க வேண்டும். இப்பணிகளை அந்தந்த மாவட்டம் மற்றும் வட்டாரங்களில் உள்ள நமது தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தில் உள்ள அமைப்பினரையும் மற்றும் ஒத்த கருத்துள்ள அமைப்புகளையும், இன, மொழி உணர்வாளர்களையும், சனநாயக ஆற்றல்களையும் இணைத்துக் கொண்டு இப்பணிகளைச் செய்ய வேண்டும். கோட்டைப் பேரணிக்கு முன்பாக இப்பணிகளை சிறப்பாகச் செய்து பேரணிக்குப் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்ட வேண்டும்.
3. தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக தோழர் பெ.மணியரசன் அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக ஓர் இயக்கத்திற்கு ஒருவரும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
1. தமிழக அரசு தமிழ்நாடெங்கும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதை கண்டித்தும் அத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், கடந்த 28.05.2013 அன்று சென்னையில் பள்ளிக் கல்வி இயக்கு னரகம் வாயிலில் எழுச்சியோடு முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அடுத்த கட்டப்போராட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுத்து அதன்படி 17.06.2013 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருட்டிணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், மன்னார்குடி, புதுக்கோட்டை, மதுரை, இராசப்பாளையம், திருநெல்வேலி, கன்னி யாகுமரி ஆகிய 18 இடங்களில் எழுச்சியோடு ஆர்ப்பாட்டம் நடந்தது. தருமபுரி, விழுப்புரம், கடலூர், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
2. மூன்றாவது கட்டப் போராட்டமாக 08.08.2013 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னையில் கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கோட்டையில் தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதற்குமுன் ஒருமாத காலத்தில் தமிழகம் முழுவதும் கிராமங்கள், நகரங்கள் உட்பட பரப்புரை கூட்டங்கள் நடத்த வேண்டும். வீடு வீடாக கோரிக்கை விளக்கத் துண்டறிக்கை வழங்க வேண்டும். இப்பணிகளை அந்தந்த மாவட்டம் மற்றும் வட்டாரங்களில் உள்ள நமது தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தில் உள்ள அமைப்பினரையும் மற்றும் ஒத்த கருத்துள்ள அமைப்புகளையும், இன, மொழி உணர்வாளர்களையும், சனநாயக ஆற்றல்களையும் இணைத்துக் கொண்டு இப்பணிகளைச் செய்ய வேண்டும். கோட்டைப் பேரணிக்கு முன்பாக இப்பணிகளை சிறப்பாகச் செய்து பேரணிக்குப் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்ட வேண்டும்.
3. தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக தோழர் பெ.மணியரசன் அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக ஓர் இயக்கத்திற்கு ஒருவரும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, 02.07.2013 அன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
RESERVATION SHOULD BE FOLLOWED IN TET
ஆசிரியர்ப் பணி தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கை புறக்கணிப்பை கைவிட வேண்டும்: சிபிஎம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இரண்டு நாட்கள் (02-03.07.2013) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் தோழர்.டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில்,
தமிழ்நாடு ஆசிரியர் பணி தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளது. தவறுகள் சரி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இப்போது மீண்டும் தகுதித்தேர்விற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிகாட்டுதல் அடிப்படையிலும், இதர மாநிலங்களை பின்பற்றியும், தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதிக்கான நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டும் தமிழக அரசு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உரிய அளவில் தகுதித்தேர்வு மதிப்பெண்களை தளர்த்த நடவடிக்கை தேவையான எடுக்க வேண்டுமெனவும், பொதுப்பட்டியலை இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உட்பட அனைவரையும் மதிப்பெண்அடிப்படையில் நிரப்ப வேண்டுமெனவும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கடந்த தேர்வுகளில் மறுக்கப்பட்ட இடங்களை நிரப்பிடவும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பதால் தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கட்சி வலியுறுத்திகிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
PLAN TO FILE PIL AGAINST USING STUDENTS FOR RALLIES
அதிகாரிகள் மீது பொது நல வழக்கு தொடர முடிவு: மாணவர்களை ஊர்வலத்திற்கு பயன்படுத்த எதிர்ப்பு
பள்ளி நேரத்தில், மாணவர்களை கட்டாயப்படுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபடுத்துவதால், அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு துறைகள் சார்பில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேப்போன்று, கல்வியின் அவசியம், பொது சுகாதாரம், போக்குவரத்து விதிமுறை, ரத்ததானம், கண் தானம், காச நோய் ஒழிப்பு, எய்ட்ஸ் பாதிப்பு, பெண்களுக்கு சம உரிமை, மக்கள் தொகை அதிகரிப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பொது பிரச்னைகளின் மக்களின் பங்களிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இதற்காக ஒவ்வொரு துறைக்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அந்தந்த துறை அதிகாரிகள், களப் பணியாளர்கள் மக்களை சந்தித்து ஒவ்வொரு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஆனால், அதிகாரிகள் அவ்வாறு செய்யாமல், எந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றாலும் அருகாமையில் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து "சம்பிரதாயத்திற்காக' முக்கிய வீதிகளில் ஊர்வலமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.தற்போது தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியை சமாளிக்கவும், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கிடும் நோக்கில், மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியது. இதற்காக மஞ்சக்குப்பம் வேணுகோபாலுபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலிருந்து 400 மாணவ - மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளியான செயின்ட் ஆன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 250 பேர் நேற்று காலை 8:30 மணிக்கே கலெக்டர் முகாம் அலுவலகம் முன் வரவழைக்கப்பட்டனர்.காலை 9:30 மணிக்கு வந்த நகராட்சி ஊழியர்கள், மாணவர்களை வரிசையில் நிறுத்தி வைத்தனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் ரோட்டில் நின்றிருந்த நிலையில் சரியாக 10:00 மணிக்கு கலெக்டர் கிர்லோஷ்குமார், நகராட்சி சேர்மன் சுப்ரமணியன், கமிஷனர் காளிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் புடைசூழ வந்தார். காரை விட்டு இறங்கிய கலெக்டர், மாணவர்களின் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்துவிட்டு, புறப்பட்டுச் சென்றார்.அதன்பிறகு மாணவர்கள் ஒன்றரை கி.மீ., தூரம் மழை நீர் சேகரிப்பு குறித்து கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்று, சிதம்பரம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் முடித்தனர். மாணவர்களுடன் ஊர்வலத்தில் வந்த சேர்மன் உள்ளிட்ட அதிகாரிகள், ஊர்வலத்தை தொடர்ந்து வந்த தங்கள் கார்களில் ஏறி சிட்டாக பறந்தனர்.
காலை வெயிலில் ஊர்வலமாக வந்த மாணவர்கள், நகராட்சி நிர்வாகம் சார்பில் கொடுத்த தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் ஒன்றரை கி.மீ., தூரம் நடந்து 11:30 மணிக்கு தங்கள் பள்ளிகளுக்கு சென்றனர். ஊர்வலமாக சென்ற சோர்வினால், பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்களை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது.ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் பிள்ளைகள் நன்றாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவே, பள்ளிக்கு அனுப்பகின்றனர். ஆனால், மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க வேண்டிய அதிகாரிகள், அவர்களை அழைத்து வந்து பல மணி நேரம் காக்க வைத்து ஊர்வலம் நடத்தி அவர்களின் படிப்பை பாழாக்கி வருவது வேதனையாக உள்ளது.
இதுகுறித்து கடலூரைச் சேர்ந்த வெண்புறா பொதுநலப் பேரவை தலைவர் குமார் கூறுகையில், "அரசின் எந்த துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் என்றாலும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களை கொண்டு நடத்துவதே அதிகாரிகள் வழக்கமாக உள்ளனர்.இதே அரசு பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை அழைப்பதில்லை. காரணம், தனியார் பள்ளிகளின் அதிகாரிகள் வீட்டு பிள்ளைகள் படிக்கின்றன. அவர்களின் படிப்பு கெடக் கூடாது. ஆனால், ஏழை மாணவர்களின் படிப்பு பாழாக்கி வருகின்றனர். இனியும், அதிகாரிகள் திருந்தவில்லை எனில், பொதுநல அமைப்புகள் சார்பில் பொது நல வழக்கு தொடரப்படும்' என்றார்.
Wednesday, July 03, 2013
FREE BOOKS NOT ISSUED IN UDUMALAIPETTAI
உடுமலையில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், அனைவருக்கும் புத்தகப்பை வழங்கப்பட்டும், புத்தகங்கள் முழு அளவில் வழங்கப்படவில்லை; புத்தகங்கள் பற்றாக்குறையாக வந்துள்ளதால், மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.
உடுமலை ஒன்றியம் மற்றும் நகரப்பகுதியில் 113 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி துவங்கியவுடன் விலையில்லா சீருடைகள், நோட்டு, காலணிகள், வண்ண பென்சில்கள் மற்றும் பேக் மற்றும் பள்ளிகளுக்கும் தலா ஒரு செஸ் போர்டும்; முதல் பருவத்திற்கான புத்தகங்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், உடுமலை ஒன்றியம் மற்றும் நகரப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள் பற்றாக்குறையாக உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சில தொடக்கப்பள்ளிகளில், சில வகுப்புகளை தவிர, மற்ற வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை; ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை புத்தகங்கள் அனைவருக்கும் முறையாக கிடைக்காத நிலையில், பாடம் கற்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளுக்கும் புத்தகங்கள் பற்றாக்குறையாகவே உள்ளன. பாடபுத்தகங்களில் உள்ள பயிற்சிகள் மற்றும் குறிப்புகள் எடுக்க புத்தகங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. ஆனால் புத்தகங்கள் இல்லாததால், பயிற்சி அளிப்பதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சில பள்ளிகளில் கடந்தாண்டு மாணவர்கள் பயன்படுத்திய புத்தகங்களை கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியதுள்ளது. பள்ளி துவங்கி ஒரு மாதம் ஆகியும் அரசுப்பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால், பாடங்களை கற்பிக்க முடியாமல் ஆசிரியர்களும், கற்க முடியாமல் மாணவர்களும் பரிதவித்து வருகின்றனர்.
செப்., மாதம் வரை, முதல் பருவ பாட புத்தகங்களை பயன்படுத்த முடியும் என்பதால், உடனடியாக புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் அதிகளவு மாணவர்கள் உள்ள பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டாலும் புத்தகங்கள் கிடைக்காததால், அந்த வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. புத்தகப்பை கிடைத்தும் புத்தகங்கள் கிடைக்காததால், மாணவர்கள், பெற்றோர் வேதனையடைந்துள்ளனர்.
பள்ளி துவங்கியதும் அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து விலையில்லா பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுத்த அரசு, அனைவருக்கும் புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Tuesday, July 02, 2013
STUDENTS COULD NOT DIFFERENTIATE TAMIL ALPHABETS
தமிழ் படும் பாடு: குறில் நெடில் அறியாத பள்ளி மாணவர்கள்...
கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் குறில், நெடில் சார்ந்த தெளிவின்மையின் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழை அதிகமாக உள்ளது என்று ஆய்வுப்பணியில் தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும், ஆரம்பப்பள்ளிகளில், காலை வழிபாடு, செயல் வழி கற்றல் வகுப்பு, தனித்தன்மை வெளிப்பாடு, நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைந்துள்ளதா என்று உதவி தொடக்ககல்வி அலுவலர், வட்டார வள மைய அலுவலர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். ஆய்வின் ஒரு பகுதியாக, மாணவர்களின் வாசிப்பு திறன், புரிந்து கொள்ளும் தன்மை சோதிக்கப்பட்டன.கோவை செல்வபுரம் ஆரம்பப்பள்ளி (மையம்) மாணவர்களின் வாசிப்பு திறன் ஆய்வு செய்யப்பட்டதில், வார்த்தைகளையும், வாக்கியங்களையும் சரியாக உச்சரிக்கும் மாணவர்கள், எழுத்துக்களை தனியாக உச்சரிக்கும் போது, பெரும்பாலான மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த தெளிவு இல்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழைகள் அதிகரிப்பதாகவும், கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இந்த குறைபாடு இருப்பதாகவும் வட்டார வள மைய அலுவலர்கள் கூறுகின்றனர்.
உதாரணமாக, "க' என்பதை க்+ அ என்று உச்சரிப்பதற்கு பதிலாக க்+ஆ என்றே 95 சதவீத மாணவர்கள் பயில்கின்றனர். வார்த்தைகளாக எழுதும்போதும், இந்த குறில், நெடில் பற்றிய தெளிவு இல்லாததால், எழுத்துப் பிழையுடனே எழுதுவதையும் அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர். ஆரம்பப்பள்ளியில் தவறான முறையில் கற்கும் மாணவர்கள், பள்ளி இறுதி வகுப்பு வரையிலும் இந்த குறில், நெடில் வித்தியாசங்களை உணராமலே மேல்நிலைக் கல்வி கற்கச்செல்கின்றனர். அங்கு தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாததால், வாழ்க்கை முழுவதும் இந்த எழுத்துப் பிழையும் அவர்களுடன் பயணிக்கிறது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் வசந்தி கூறுகையில்,""ஆரம்பப்பள்ளிகளில் நாம் கற்றுக்கொடுப்பதே மாணவர்களின் மனதில் நன்கு பதியும். கற்பித்தலில், தவறுகள் ஏற்பட்டால் சரி செய்வது கடினம். மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த மாதிரி வகுப்புகள் எடுக்கப்பட்டது. தமிழ் மொழியின் அழகே சரியான உச்சரிப்பு, அதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். குறில் தெரியாமல் வாசிப்பது எளிது; ஆனால், எழுதுவது கடினம். சராசரி மாணவர்களுக்கும், சராசரிக்குக் குறைவான மாணவர்களுக்கும் எழுத்துப்பிழைகள் அதிகரிக்க இதுவே காரணம்,'' என்றார்.
அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,"கோவை மாவட்டத்தில் பொதுவாக குறில், நெடில் கற்பிக்கும் முறை சரியாக இல்லை. "எனக்கு' என்ற சாதாரண வார்த்தையை மாணவர்கள் எழுத்துக்களாக படிக்க சொல்லும் போது "ஏ,னா,க் கூ' (எனக்கு) என்று உச்சரிக்கின்றனர். இது முற்றிலும் தவறு, பெரும்பாலான ஆசிரியர்களுக்கே குறிலுக்கான வித்தியாசம் புரியவில்லை என்பதே உண்மை. முதலில் இந்த வித்தியாசத்தை ஆசிரியர்கள் மத்தியில் தெளிவு படுத்துவது அவசியம்' என்றனர்.
தாய்மொழியும் முக்கியம்:
ஆங்கில வழிக்கல்விக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசு, தாய் மொழியான தமிழை தவறின்றிப் படிப்பதற்கு பள்ளி மாணவர்களைத் தயார் படுத்த வேண்டுமென்பதே கல்வியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கான முதல் முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழைத் தெளிவாக எழுதவும், படிக்கவும், உச்சரிக்கவும் கற்றுத்தருவது அவசியம்.
Monday, July 01, 2013
KOOTTANI GENERAL BODY NEWS -DINAMANI
விலையில்லா பொருள்களுக்கான சரக்கு போக்குவரத்து செலவை வழங்கக் கோரிக்கை
By நாகப்பட்டினம்
First Published : 01 July 2013 02:59 AM IST
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா பொருள்களை பள்ளிக்கு கொண்டு செல்வதற்கான செலவுத் தொகையை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை நிர்வாகம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம், நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் கோ. ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பி. பன்னீர்செல்வம், சி. பிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைச் செயலர் இரா. நீலா புவனேஸ்வரி, ஓய்வு பெற்றோர் பிரிவு மாவட்டச் செயலர் மு. கருணாநிதி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாகை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டித் தந்த தமிழக அரசு நன்றி தெரிவித்துக் கொள்வது. வேதாரண்யம் ஒன்றிய தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள சேம நல நிதி கணக்கீட்டுத் தாளை உடனடியாக வழங்கக் கோருவது.
வேதாரண்யம் ஒன்றியம் புஷ்பவனம் கொத்தங்காடு பள்ளி கடந்த 2 ஆண்டுகளாக ஓராசிரியர் பள்ளியாக இயங்குவதைக் கருத்தில் கொண்டு, அந்தப் பள்ளிக்கு உடனடியாக ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்ய மாவட்டக் கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் உள்ள சார்நிலை கருவூலம் மூலம் மாத ஊதியம் வழங்கப்படுவதால், திருமருகல் ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணப் பயன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, நாகை சார்நிலை கருவூலம் மூலம் மாத ஊதியம் வழங்கக் கோருவது.
தமிழக அரசு மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருள்களை பள்ளிகளுக்கு கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளப்படும் சரக்குப் போக்குவரத்து செலவுத் தொகையை, ஆசிரியர்களுக்கு வழங்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாவட்டச் செயலர் மு. லட்சுமிநாராயணன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் மா. சித்தார்த்தன் நன்றி கூறினார்.
M.Ed Applications in Tamil University from July 1st
தமிழ் பல்கலை: எம்.எட்., படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்
By dn, தஞ்சாவூர்
First Published : 01 July 2013 12:55 PM IST
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், எம்.எட் படிப்புக்கு இன்று (ஜூலை 1) முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இப்படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.எட்., படிப்பிற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு விதிமுறையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பங்களை பல்கலைக்கழக வளாகத்திலோ அல்லது இணையதளத்திலோ விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.600ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
ஜூலை 31க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Subscribe to:
Posts (Atom)