Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Thursday, June 06, 2013
Wednesday, June 05, 2013
Tuesday, June 04, 2013
A GOVERNEMENT SCHOOL TEACHER'S LETTER
தேர்ச்சி விகித உயர்வுக்குத் தலைகுனியும் ஓர் அரசு பள்ளி ஆசிரியரின் கடிதம்
|
Posted Date : 11:06 (04/06/2013)Last updated : 11:06 (04/06/2013)
நான் ஒரு கிராமத்துப் பள்ளியில் தமிழாசிரியராக இருக்கிறேன். பத்தாம் வகுப்புக்குத் தமிழ் பயிற்றுவிக்கிறேன். பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் இந்தப் பள்ளியில் பெரும்பான்மை. ஏழைகள் அல்லது கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் குடும்பத்தின் மாணவர்கள் இவர்கள். கல்வியிலும் பொது அறிவிலும் மிகவும் பின்தங்கியவர்கள். வருகையின்மை அதிகம். சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் நடைபெறும் சிறப்பு வகுப்பிற்கு வராமல் தவிர்ப்பவர்கள்தான் இம்மாணவர்கள். ஏனெனில் ஏழ்மையில் வாழும் இக்குடும்ப மாணவர்கள், இந்த இரண்டு நாட்கள் செங்கல் சூளையிலும் வயல்களிலும் பணிபுரிந்து குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டிய துர்பாக்கியநிலை. இதை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் எல்லாப் பள்ளி ஆசிரியர்களும் உழைக்கிறார்கள். இவ்வளவு பின்னடைவு இருந்தும், அவர்களைத் தேர்ச்சி அடைய வைக்கவே ஆசிரியர்கள் பாடுபடுகிறார்கள்.
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தேன். சமீப காலமாக, ஒரு பள்ளியின் தேர்ச்சி வீதத்தில், மாணவனின் பங்கைவிட, ஆசிரியர் பங்கு அதிகமாகிறது. ஒரு மாணவனின் தேர்ச்சியால், ஓர் ஆசிரியரின் தேர்ச்சி விழுக்காடு குறைந்தபட்சம் ஒரு சதவீதம் ஏறுகிறது. ஒருவேளை மாணவன் தோல்வி அடைந்தால்? இதை நான் சொல்லத் தேவையில்லை. மாணவர்களின் தோல்வி என்பது தனிப்பட்ட மாணவர்களுடையது (வெறும் சர்டிபிகேட் போதும்) என்பதைக் கடந்து, இப்பொழுது ஆசிரியருக்கான கௌரவக் குறைச்சலாகிவிட்டது.
இந்த வருடம், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், தமிழகத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விழுக்காடு, கடந்த ஆண்டைவிடக் குறையும் என்று எதிர்பார்த்தேன். அதற்கு இரண்டு காரணங்கள்.
1. ஒன்பதாம் வகுப்பில் அனைவரும் கட்டாயத் தேர்ச்சி
2. காலம் தாழ்த்தி வகுப்பினைத் தொடங்கியது.
இந்த இரண்டு காரணங்கள் ஆழமானவை என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, கடந்த ஆண்டைவிட இந்த வருடம், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு விழுக்காடு அதிகரித்துள்ளது. இது முதல் அதிர்ச்சி. இது பொதுவான அதிர்ச்சிதான்.
அடுத்ததாக எனக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. இந்த அதிர்ச்சிக்கு சந்தோஷப்படத்தான் வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த அதிர்ச்சி என்னைக் கவலைப்பட வைத்தது. என்னிடம் பத்தாம் வகுப்புப் பயின்ற மாணவர்கள் சிலர் தமிழில் தேர்ச்சி அடைந்ததுவிட்டார்கள்.
பள்ளிக்கு அதிகம் வராமலும், வகுப்பிற்கு வந்தால் எந்தப் பாடநூலும் பாட ஏடும் கொண்டு வராமலும், சிறப்பு வகுப்புகளுக்கு வராமலும், தேர்வுக்கால சிறப்பு வகுப்பிற்கு வராமலும் இருந்த மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருப்பதை என்ன சொல்வது?
சரி... இவர்கள் கடைசி நேரத்தில் படித்திருக்கலாமே? என்று நீங்கள் உறுதியாக என்னைக் கேட்கலாம். காலாண்டு, அரையாண்டு, மீள்பார்வை தேர்வுக்கு அவ்வப்போது வராத மாணவர்கள்தான் இவர்கள். வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டு, பள்ளிக்குள் வராமல், ஆற்றங்கரையிலும் தென்னந்தோப்பிலும் இருந்துவிட்டுப் பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்குச்செல்பவர்கள் இவர்கள். அப்படி பள்ளிக்கு வந்தாலும் தொடர்ச்சியான வாசிப்பு இல்லாததால், இடையில் வந்து திணறி, இடையிலேயே நின்று விடுபவர்கள் இவர்கள்.
சென்ற ஆண்டைவிட இந்த வருடம், என்னுடைய தேர்ச்சி சதவீதம் குறையும் என்று நினைத்திருந்தேன். காலாண்டு, அரையாண்டு, மீள்பார்வைத் தேர்வுகள் 3, கடைசியாக மாதிரிப் பொதுத்தேர்வு ஆகியவற்றைக் கொண்டுதான், அரசு பொதுத்தேர்வில் என்னுடைய சதவீதம் கணிக்கப்படும். அப்படி கணித்ததில், என்னுடைய தேர்ச்சி 50% - 55% சதவீதம்தான் வரும் என்று எதிர்ப்பார்த்தேன். கடந்த ஆண்டு நான் கொடுத்த சதவீதம் 88% என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால் இந்த வருடம் எனக்கு வந்தது 72% சதவீதம்.
என்னால் இந்தப் பேரதிர்ச்சியைத் தாங்கமுடியவில்லை. எப்படி அவர்கள் தேர்ச்சி அடைந்தார்கள் என்பதே என் கேள்வி. அவர்கள் தோல்வி அடைந்திருக்கவேண்டும் என்பதற்குச் சில காரணங்கள் என்னிடம் இருக்கின்றன.
1. தொடர்ச்சியாக வகுப்பிற்கு வராதது.
2. கடைசி நேரத்தில் அரசியல்வாதிகள், பெரும்புள்ளிகள் (வெறும் சர்டிபிகேட்டிற்காக) பரிந்துரை மற்றும் குறைந்த வருகைப் பதிவேட்டைச் சரி செய்யும் மருத்துவச் சான்றிதழ் வழியாகப் பள்ளிக்குள் நுழைந்து தேர்வு எழுதுவது.
3. சிறப்பு வகுப்புகளில் கலந்துகொள்ளாதது.
4. ஆசிரியர்களும் அரசும் தந்திருக்கின்றன குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் கையேட்டைத் தொடர்ந்து பயிற்சி செய்யாதது.
5. பாட ஆசிரியர்கள் தரும் அறிவுரைக் கலந்தாய்வைப் பின்பற்றாதது.
6. தன் பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் என்று பெற்றோர் கவனம் செலுத்தாதது.
7. ஆசிரியர்களிடம் தன் பிள்ளையின் கல்விநிலை குறித்து அடிக்கடி விசாரிக்காதது.
8. கல்வி சட்டத்தின் அடிப்படையில் மாணவனைப் படிப்பிலும் ஓழுக்கதிலும் அதிகமும் ஆசிரியர்கள் வலியுறுத்தமுடியாதது.
இந்த காரணங்கள் மட்டும் இல்லாமல், ஒழுக்கத்தின் மீதும், படிப்பின்மீது அக்கறையற்ற இம்மாணவர்கள் தமிழில் எப்படி தேர்ச்சி அடைந்தார்கள்? என்பதுதான் என் கேள்வி.
இருநூறு நாட்கள் நடந்த பள்ளியில், அரைகுறையாக வந்து சென்று, அரைகுறையாக வாசித்து வந்த இந்த மாணவர்கள் எப்படி தேர்ச்சி அடைந்தார்கள் என்பதே என் கேள்வி.
இங்கு ஒன்றை ஆதாரமாகக் குறிப்பிடவிரும்புகிறேன். காலாண்டு தேர்வில் என் பாட சதவீதம் 30. அரையாண்டில் 40. கடைசியாக நடத்திய மாதிரி பொதுத்தேர்வில், பொதுத்தேர்வில் திருத்துவது போன்றே திருத்தி வந்த சதவீதம் 45% தான். இந்த முன்னேற்றத்தைக் கொண்டு, கடைசி நேரத்தில் வாசிப்பார்கள் என்று நினைத்து, நான் கணித்த என் பொதுத்தேர்வு சதவீதம் 50% - 55%. ஆனால், எனக்குப் பொதுத்தேர்வில் வந்த சதவீதம் 72%. எப்படி இவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டது என்பது இன்னும் இந்த அடியேனுக்கு விளங்கவில்லை.
இந்த தேர்ச்சியில் சந்தோஷத்துடன் திரியும் மாணவர்களின் புத்தகங்களும் கையேடுகளும், நான் தயாரித்துக்கொடுத்த (60 மதிப்பெண் பெற) வழிகாட்டியும் என்னிடத்திலும், தலைமையாசிரியர் அறையிலும் தூசு ஏறி இருக்கின்றன.
தன் புத்தகம் காணாமல் போய்விட்டதைப் பற்றிக் கவலைப்படாத மாணவன் இன்றைய மாநிலப் பொதுத்தேர்வில் தேர்ச்சி. எப்படி இது சாத்தியம்?
அரசாங்கம் ரிசல்ட் குறையக்கூடாது என்று நினைத்து கம்ப்யுட்டரில் புரொக்ராம் செய்துவிடுவார்கள் என்பது ஆசிரியர்களுக்கிடையேயான ரகசிய வதந்தி. இது உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை. உண்மையாக இருந்தால் நாம் இதற்காக வெட்கப்படவேண்டும்.
இந்தப் பேரதிர்ச்சியில் அந்த மாணவன் சந்தோஷத்தில் தலை நிமிரலாம். தமிழ் ஆசிரியராகிய நான் கொஞ்சம் தலைகுனிகிறேன்.
- பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்,
தமிழ்நாட்டில் ஒரு கல்விமாவட்டம்
|
MEETING CONDUCTED TO INCREASE ENROLMENT IN SCHOOLS
அரசுப் பள்ளியில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்பதற்கான கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பில் அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கூட்டம் புதுக்கோட்டை வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் திரு. இரா.சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் இராமச்சந்திரன், அனைவருக்கும் கல்வி இயக்க உதவித்திட்ட அலுவலர் இராஜேந்திரன், புதுக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் 25 உதவிஃகூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் புதுக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 154 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்த ஆண்டு புதுக்கோட்டை ஒன்றியத்தில் கண்டறியப்பட்டுள்ள 2274 பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் கிராமக் கல்விக் குழு தலைவர், உறுப்பினர்கள், சுய உதவிக்குழுவினர், அரசு சாரா தொண்டு நிறுவ னங்கள் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களை பயன்படுத்தி அரசின் நலத்திட்டங்கள், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை, நன்னெறிக் கல்வி, யோகா, உடற்பயிற்சி போன்றவை பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
1 முதல் 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறையும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறையும் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறையிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. பள்ளியின் அருகே மாணவர்களின் செயல்பாட்டினை விளக்கும் பேனர் ஒன்று பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். முன்னதாக புதுக்கோட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சோ. தங்கராசு அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் ப.பச்சமுத்து நன்றி கூறினார்.
SCHOOL SANITATION IN CUDDALORE DISTRICT
கடலூரில் சுகாதாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை: நகரசபை தலைவர் எச்சரிக்கை
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூன் 03, 8:05 PM IST
கடலூர், ஜூன் 3-
கடலூர் நகரசபை தலைவர் சி.கே.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடலூர் நகரில் 37 அரசு மற்றும் தனியார் பள்ளிகூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பள்ளிகூடங்களில் சுகாதார வசதியின்றி செய்படுவதாக புகார்கள் வந்துள்ளது.
ஆகவே பள்ளி கூடங்களில் சுகாதார முறையில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மேலும் 50 மாணவர்ளுக்கு ஒரு கழிப்பறை அமைக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் வகையில் காற்றோட்டமான கட்டிடங்கள் இருக்க வேண்டும். பள்ளிகூடங்கள் அருகாமையில் சுகாதாரமற்ற தின்பண் டங்கள் விற்பனை செய்யப்படுவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்.
இதுமட்டுமின்றி ஈ மொய்த்த தின்பண்டங்கள் சாப்பிடுவதால் டெங்குகாய்ச்சல், மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் தாக்க கூடிய நிலை ஏற்படுகின்றது. ஆகையால் பாதுகாப்பான முறையில் பள்ளிகூடங்கள் செயல்பட வேண்டும். சுகாதார வசதியின்றி செயல்படும் பள்ளிகூடங்கள் மீது நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்.
இது பற்றி நகராட்சிக்குட்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி களுக்கு சுற்றிக்கை அனுப்பி வைக்கப்படும். சுகாதார மாக பள்ளிகூடங்கள் உள்ளதா? என்று ஆணையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து தக்க நட வடிக்கை எடுக்கப்படும். ஆகையால் பள்ளியின் முதல் வர்கள், தலைமை ஆசிரியர்கள் பள்ளியை முழுவதுமாக சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கவுன்சிலர் கந்தன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ONLY FEMALE TEACHERS IN GIRLS SCHOOLS
அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டுமே நியமனம் தமிழக அரசு உத்தரவு
பதிவு செய்த நாள் : Jun 03 | 09:26 pm
சென்னை,
அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இனிமேல் ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணி இடங்களில் பெண்களை மட்டுமே நியமிக்கவும், இதேபோல் ஆண்கள் பள்ளிகளில் ஆண்களை மட்டுமே நியமிக்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளிகள்
கடந்த கல்வி ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டில் 34,871 ஆரம்பப் பள்ளிகளும், 9,969 நடுநிலைப்பள்ளிகளும், 5,167 உயர்நிலைப்பள்ளிகளும், 5,660 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் ஆகியவை அடங்கும், இந்த பள்ளிகளில் 1½ கோடி மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.
அரசு பள்ளிகள் என்று பார்த்தால் 23,522 ஆரம்பப் பள்ளிகள், 7,651 நடுநிலைப்பள்ளிகள், 3096 உயர்நிலைப்பள்ளிகள், 2,595 மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. அரசு பள்ளிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது அரசு பள்ளிகளில் ஆசிரியர் பதவிகளில் ஆண்கள் பள்ளிகள், பெண்கள் பள்ளிகள் என்று பாகுபாடு இல்லாமல் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பணியாற்றி வருகின்றனர்.
பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகள்
இந்த நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இனிமேல் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளிலும், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளிலும் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். அதேபோல், ஆண்கள் உயர்நிலைப்பள்ளிகளிலும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட உள்ளனர். இருபாலர் (கோ–எட்) அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் ஆண்களும், பெண்களும் நியமிக்கப்படுவார்கள். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ளார்.
Monday, June 03, 2013
DINATHANTHI EDITORIAL IN FAVOUR OF TET
அறிவாற்றல் மிகுந்த ஆசிரியர்கள்
‘‘என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில், ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்...’’ என்று, மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ஒரு திரைப்படத்தில் பாடுவார். பண்டைய காலத்தில் இருந்து, தமிழ்நாடு எல்லா வளங்களையும் கொண்டிருந்தாலும், கல்வி வளத்தில் மிக முன்னணியில் இருந்திருக்கிறது. இதற்கு அய்யன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஒன்றே போதும், அந்த காலங்களில் எவ்வளவு மேன்மையான அறிவில் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு. வறுமையின் கடைக்கோடியில் இருப்பவன்கூட, தன் பிள்ளை கண்டிப்பாக எழுதப்படிக்க தெரிந்திருக்கவேண்டும் என்று நினைப்பான். அந்த வகையில், கல்வியில் முதலிடத்தில் இருந்தது தமிழ்நாடு என்பதை மகாகவி பாரதியார் தன் பாட்டில் எடுத்துக்கூறியிருக்கிறார். ‘‘கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் – மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு’’ என்று அவர் பாடியதில் இருந்தே, கல்விக்கு தமிழ்நாடு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்பது நன்றாக புரியும்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல்–அமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் பொறுப்பேற்றார். தான் அதிகம் படிக்காவிட்டாலும் தமிழ்நாட்டில் எல்லோரும் கல்வி அறிவு பெறவேண்டும் என்பதில் அதிக ஆர்வத்தோடு இருந்து, ஊர் ஊருக்கு பள்ளிக்கூடங்களை தொடங்கி கல்விக்கண்ணை திறந்துவைத்தார். அவர் போட்டுவைத்த புள்ளிகளை தொடர்ந்து வந்த முதல்–அமைச்சர்கள் பக்தவச்சலம், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் வண்ணமிகு கோலங்களாக ஆக்கினர்.
மாணவர்கள் முன்புபோல இப்போது இல்லை. தகவல் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் அறிவு மிக விசாலமாகிவிட்டது. பள்ளிக்கூடத்திற்கு போகும்முன்பே இப்போதுள்ள குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோரால் பதில்சொல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்றால் முன்புபோல இல்லை. எந்த பாடத்தை எடுத்தாலும், அதில் அவர்களுக்கு ஏற்கனவே ஞானம் இருப்பதால், ஆசிரியர்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். தனக்கு கற்றுக்கொடுக்கும் பாடத்தில், ஆசிரியர்கள் கரைகண்டவர்களாக இருக்கவேண்டும் என்று மாணவர்களும் எதிர்பார்க்கிறார்கள், அவர்களின் பெற்றோர்களும், ஏன் சமுதாயமும் எதிர்பார்க்கிறது. ஆழமான அறிவாற்றல் இல்லாத ஆசிரியர்களால், நிச்சயமாக இப்போதுள்ள காலகட்டங்களில் சமாளிக்க முடியாது. அதிலும், இந்திய அரசாங்கம் நிறைவேற்றியுள்ள இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் இப்போது நடைமுறையில் உள்ளது. இந்தச்சட்டத்தின் 23–வது பிரிவு (உள்பிரிவு 1–ன்படி) ஒன்று முதல் எட்டு வரையிலான ஆரம்ப நிலை வகுப்புகளுக்கு, நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச தகுதிகள் தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பினால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் புதிதாக நியமனம் செய்யப்பட இருக்கும் ஒன்று முதல் எட்டாவது வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் தற்போது 34,871 தொடக்கப்பள்ளிகளும், 9,969 நடுநிலைப்பள்ளிகளும் இருக்கின்றன. இந்தப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் நியமனம்பெற விரும்புகிறவர்கள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் கண்டிப்பாக பெறவேண்டும். இந்த ஆண்டு தகுதித்தேர்வை ஆகஸ்டு 17, 18–ந் தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த இருக்கிறது. 12 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனைக்கு வரஇருக்கின்றன. 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்தத்தேர்வில் எப்படியும் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, பணி நியமனத்தை பெறவேண்டும் என்ற துடிப்பில், இறுதித்தேர்வை எழுதப்போகும் மாணவர்கள்போல, ஆசிரியர்கள் விழுந்து... விழுந்து... படிப்பதை காணமுடிகிறது. நிச்சயமாக எதிர்காலத்தில் எட்டாவது வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மிகுந்த அறிவாற்றல் மிகுந்தவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் படிக்கப்போகும் மாணவச்செல்வங்கள், எல்லா திறமைகளையும் பெற்று, ஒளிமிகுந்த சமுதாயத்தை உருவாக்குவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
Sunday, June 02, 2013
TEACHER COMPLAINS ABOUT CONFUSION IN TRANSFER COUNSELLING
பணி மாறுதல் கவுன்சிலிங் குளறுபடி ஆசிரியை புகார்:
சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் மே 30ல் ஒன்றிய அளவில் இடைநிலை ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் நடந்தது. காளையார்கோவில் ஒன்றியம் காஞ்சரம் பள்ளி காலியிடமாக அறிவிக்கப்பட்டிருந்தது. பணி மூப்பு ஆசிரியர்களை அழைத்தனர். அதே ஒன்றியம், அல்லிவயலில் பணிபுரியும் ஆசிரியை ஜெயமேரிக்கு தகுதி இருந்தும், அவரை விட ஒரு மாதம் பணி மூப்பு குறைந்த மற்றொருவருக்கு மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் புகார் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ""போதிய தகுதி இருந்தும், அவ்விடத்தை தேர்வு செய்யாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் எழுத்து பூர்வ கடிதம் பெற்ற பின்னரே மற்றவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். என்னிடம் கருத்து கேட்காமல் பணி மூப்பற்ற ஆசிரியைக்கு காஞ்சரம் பள்ளிக்கு மாறுதல் வழங்கியுள்ளனர்.அதிகாரிகள் குளறுபடி ஏற்படுத்தி, எனக்கு கிடைக்க வேண்டிய காலியிடத்தை தட்டி பறித்தனர், என்றார்.ஏ.இ.ஓ.,கருப்பையா கூறுகையில்,""தகுதி அடிப்படையில் முதலில் வருவோர் இல்லாவிடில், அடுத்தவருக்கு வாய்ப்பளிக்கப்படும். ஜெயமேரி ஏதோ ஒரு காரணத்திற்காக இருந்து விட்டு பின்னர் தகுதி இருக்கிறது என,மே31ல் என்னிடம் புகார் செய்தார். கவுன்சிலிங் முடிந்த பின், எதுவும் செய்ய இயலாது, என்றார்.
MEETING ON TRB EXAM FOR PG TEACHERS
கல்வி அலுவலர்களுக்கான மாநில ஆலோசனைக் கூட்டம்
By திருச்சி,
First Published : 02 June 2013 02:01 AM IST
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படவுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தொடர்பாக கல்வி அலுவலர்கள் பங்கேற்ற மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் பிஷப் ஹீபர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2,881 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை 1) நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜூலை மாதம் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மே 31-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 17-ம் தேதி முதல் விநியோகிக்கப்படவுள்ளன.
இதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 17,18 தேதிகளில் (முறையே முதல் மற்றும் இரண்டாம் தாள்) நடைபெறவுள்ளன.
சிறப்பு ஆசிரியர்களுக்கான நேரடி நியமனங்களும் விரைவில் நடைபெறவுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்ய பல்வேறு நிலைகளில் நடைபெறவுள்ள இத்தேர்வுகளை சிறப்பாக நடத்துவது, விண்ணப்பம் விநியோகம், விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பவது, தேர்வு மையங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களை அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் மூலம் விநியோகிப்பது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத்தில் ஆசிரியர் தேர்வாணைய உறுப்பினர் செயலர் ஜி. அறிவொளி, இணை இயக்குநர் சேதுராம வர்மா, துணை இயக்குநர் பூபதி மற்றும் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 32 முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் 62 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
CHILDREN RESCUED FROM THE LOCKED SCHOOL
பள்ளியை பூட்டி சென்ற தலைமை ஆசிரியை: குழந்தைகளை மீட்டனர் மக்கள்
தேனி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாறுதலாகி, பணியில் சேர தலைமை ஆசிரியர் வந்தபோது, பள்ளியை தலைமை ஆசிரியை பூட்டிச் சென்றதால், பல மணி நேரம் வெளியில் காத்திருந்தார். பூட்டிய பள்ளிக்குள் சிக்கிய சத்துணவு பணியாளர்கள் மற்றும் குழந்தைகளை, ஏணி வைத்து அப்பகுதி மக்கள் மீட்டனர்.
மேல்மணலார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக இருந்தவர் ஜெகநாதன். இவருக்கு அண்மையில் நடந்த பொது மாறுதல் கலந்தாய்வில், கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் உத்தரவு கிடைத்தது. இந்த உத்தரவுடன், நேற்று பகல், 12:30 மணிக்கு, பணியில் சேர வந்துள்ளார். அப்போது, பள்ளியின் முன்பக்க கேட்டிற்கு பூட்டு போடப்பட்டிருந்தது. சத்துணவு பெண் பணியாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர், மூன்று குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர், பூட்டிய பள்ளிக்குள் சிக்கிக் கொண்டனர். "எங்களை வெளியில் திறந்து விடுங்கள்' என, அவர்கள் சத்தம் போட்டனர். கூடலூர் தெற்கு போலீசார், பொதுமக்கள் உதவியுடன் பள்ளிக்குள் இருந்தவர்களை ஏணி வைத்து, வெளியே கொண்டு வந்தனர். உள்ளே இருப்பது கூட தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்று விட்டதாக அவர்கள் புலம்பினர்.
பணியில் சேர வந்த தலைமை ஆசிரியர் ஜெகநாதன் கூறியதாவது: நான் இங்கு பணியில் சேர வருவது தெரிந்தும், இங்கு பணியாற்றிய தலைமை ஆசிரியை மெர்சி, வேண்டுமென்றே, சத்துணவு பணியாளர்களையும், குழந்தைகளையும் உள்ளே வைத்து பூட்டிச் சென்றுள்ளார். இது குறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு புகார் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை ஆசிரியை மெர்சி கூறியதாவது: இவர், பணியில் சேர வருவது குறித்து எந்த தகவலும் எனக்கு தெரியாது. இன்று (நேற்று) காலை, ஏற்கனவே இரண்டு உதவியாசிரியர்கள் புதிதாக இங்கு பணியில் சேர்ந்தனர். இவர்களின் விவரங்களை தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றிருந்தேன். பள்ளிக்குள் சத்துணவு பணியாளர்கள் இருந்தது, எனக்கு தெரியாது. இவ்வாறு, அவர் கூறினார். நேற்று மாலை, 3:00 மணிக்கு, சாவி கொடுத்தனுப்பிய பின், பள்ளி திறக்கப்பட்டு, புதிய தலைமை ஆசிரியர் ஜெகநாதன் பணியில் சேர்ந்தார்.
DIVINE MATRICULATION SCHOOL RECOGNITION CANCELLED AFTER STUDENTS DEATH
ஜீப் மோதி மாணவி பலி எதிரொலி
தாளவாடி டிவைன் பள்ளி அங்கீகாரம் அதிரடி ரத்து
கருத்துகள்
02:10:00
Sunday
2013-06-02
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் தாலுகா தாளவாடியில் உள்ள டிவைன் வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி மைதானத்தில் 7,1,13 அன்று பாதிரியார்கள் டேவிட், லூர்துசாமி ஆகியோர் ஜீப் ஓட்டிப் பழகினர். அப்போது சிறப்பு வகுப்பு முடித்து நடந்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி சந்தியா(15) மீது ஜீப் மோதியுள்ளது. இதில் அந்த மாணவி அதே இடத்தில் பலியானார். குஷ்மா (15) என்ற இன்னொரு மாணவி படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து அந்தப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறை வெடித்ததால் தாளவாடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக 61 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில், டிவைன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி நிர்வாகத்துக்கு சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் (சென்னை) கடிதம் எழுதினார். பள்ளி வேலைநேரத்தில் மாணவர்கள் பாதுகாப்பிற்கு உரிய முக்கியத் துவம் அளிக்காமல் மாணவியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது, பள்ளி வளாகத்தில் உரிய அனுமதியின்றி பள்ளிக்கு சம்பந்தப்படாத வெளியாட்களை வாகனம் ஓட்ட அனுமதித்து விபத்து ஏற்பட காரணமாக இருந்தது பற்றி அதில் விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பள்ளி தாளாளர் அளித்த விளக்கத்தை பரிசீலித்த நிலையில் டிவைன் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தற்காலிக அங்கீகாரத்தை ரத்து செய்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். எனினும் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் 31,5,13 வரை இருக்கும் என்றும் 1,6,13 முதல் அங்கீகார ஆணை திரும்பப்பெறப்படுகிறது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் தாள வாடி மலைப்பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வரும் 10ம் தேதி மற்ற பள்ளிகளை போல இந்தபள்ளி திறக்கப்படாவிட்டால் இங்கு படிக்கும் மாணவ மாணவிகளின் கதி கேள்விக்குறியாக உள்ளது
.
Saturday, June 01, 2013
ANNAMALAI UNIVERSITY 28 STUDY CENTRES CLOSED
அண்ணாமலைப் பல்கலைக்கழக தகவல் 28 மையங்கள் மூடப்பட்டன
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கத்தின் 28 தகவல் மையங்களை மூட பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம் உத்திரவிட்டுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த ஏப்.4-ம் தேதி தமிழக அரசு நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.
பின்னர் தமிழக அரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழ தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் 89 படிப்பு மையங்கள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 60 படிப்பு மையங்கள் உள்ளன. மேலும் தமிழகத்தில் 117 தகவல் மையங்களும் உள்ளன. நிதிநெருக்கடியை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தேவையில்லாமல் உள்ள தகவல் மையங்களான அரவக்குறிச்சி, வரட்டாண்டு, சேத்தூர்பேட், காங்கேயம், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணாபுரம், தேவக்கோட்டை உள்ளிட்ட 28 தகவல் மையங்களை மூட பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா உத்தரவின் பேரில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம் உத்தரவிட்டுள்ளார்.
|
RECOGNITION WILL BE CANCELLED FOR PRIVATE NOT ADMITTING 25 PERCENT STUDENTS IN FREE QUOTA
இலவச ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கத் தவறினால் சுயநிதி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: கல்வித்துறை எச்சரிக்கை
By VIJAYABASKAR.K, கடலூர்
First Published : 01 June 2013 02:54 PM IST
25 சதவீத இலவச இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கத்தவறினால் சுயநிதி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி அனைத்து சுயநிதி பள்ளிகளிலும் அறிமுக வகுப்புகளில் (எல்.கே.ஜி. மற்றும் 6-ம் வகுப்பு) 25 சதவீத இடங்கள் நலிவடைந்த பிரிவினரான தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதரவற்ற மாணவர்கள், எச்.ஐ.வி.நோயால் பாதிக்கப்பட்டோரின் பிள்ளைகள், சுகாதாரமற்ற பணி செய்வோரின் பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் குறைவானவர்களின்(அனைத்து சாதியினருக்கும் பொருந்தும்) பிள்ளைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவு மாணவர்களை சேர்ப்பதற்காக மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு விண்ணப்ப படிவங்களை மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநரகம் கொடுத்திருந்தது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 105 மெட்ரிக்.பள்ளிகளில் 3 பள்ளிகள் மட்டுமே 25 சதவீத இலவச இடங்களில் நலிவடைந்த மாணவர்களை சேர்த்தது, பெரும்பாலான பள்ளிகள் மாணவர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லையென்று கூறி விட்டன. இதனால் முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகம் மூலமாக மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்க மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநரகம் உத்தரவிட்டதன்பேரில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திலும், முதன்மை கல்வி அலுவலகத்திலும் மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சுயநிதி பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் மாணவர்சேர்க்கை தொடர்பான முன்னேற்றம் குறித்து ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அவருடைய வழிகாட்டுதலுடன் அனைத்து பள்ளிகளிலும் சேர்க்கை நிறைவு செய்யப்பட வேண்டும். எந்த பள்ளியாவது விதிமுறைகளை அனுசரிக்க தவறினால் அப்பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
SENIORITY LIST RELEASED BY EMPLOYMENT OFFICE FOR THE TEACHER POST
ஆசிரியர் காலி பணியிட வேலைவாய்ப்பு பதிவு மூப்பு வெளியீடு
By நாகப்பட்டினம்
First Published : 30 May 2013 10:50 AM IST
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான பதிவு மூப்பு விவரம் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த வேலைவாய்ப்பு அலுவலக செய்திக் குறிப்பு :
சென்னை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர், இசையாசிரியர் பணியிடங்களுக்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பதாரர்கள் மாநிலப் பதிவு மூப்புக்குப் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.
உத்தேசப் பதிவு மூப்புப் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிய விரும்புவோர் ஜூன் 4-ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
By நாகப்பட்டினம்
First Published : 30 May 2013 10:50 AM IST
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான பதிவு மூப்பு விவரம் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த வேலைவாய்ப்பு அலுவலக செய்திக் குறிப்பு :
சென்னை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர், இசையாசிரியர் பணியிடங்களுக்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பதாரர்கள் மாநிலப் பதிவு மூப்புக்குப் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.
உத்தேசப் பதிவு மூப்புப் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிய விரும்புவோர் ஜூன் 4-ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
AIDED SCHOOL TEACHERS AFTER STUDENTS FOR ENROLMENT
பள்ளி சேர்க்கைக்கு மாணவர்களை தேடும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்ஜூன் 01,2013,11:34 IST
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் மாணவர்களை சேர்க்க, கிராமம் கிராமமாக மாணவர்களை தேடி அலைகின்றனர்.
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில், அரசு துவக்கப்பள்ளிகள், அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் என 85 பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கைக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை தேடி அலைகின்றனர். போட்டி போட்டு ஆசிரியர்கள் வருவதால், மாணவர்களுக்கு கடும் "கிராக்கி" ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மே மாத துவக்கத்திலேயே, பல குழுக்களாக பிரிந்து, வீடு வீடாக சென்று, தங்கள் பள்ளியில் மாணவனை சேர்த்தால், என்ன வசதிகள் கிடைக்கும் என பெற்றோர்களுக்கு விளக்கம் தருகின்றனர். அரசு தரும் நல திட்ட உதவிகள், கூடுதலாக புத்தக பை, இலவச டூர், இலவச பஸ் வசதி போன்றவைகளை கூறி, பெற்றோர்களுக்கு ஒரு தொகையும் கொடுத்துமாணவனை தங்கள் பள்ளியில் சேர்க்க படாதபாடு படுகின்றனர்.
மேலும், மாணவர் வேறு பள்ளிக்கு சென்று விடாமல் இருக்க, பள்ளி திறக்கும் வரை அவ்வப்போது சென்று கண்காணிக்க வேண்டிய நிலையில், ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் இதை, அரசு துவக்கபள்ளி ஆசிரியர்கள் செய்வதில்லை.
மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்தாலும் இவர்களுக்கு கேள்வி இல்லை. பெரும்பாலான அரசு பள்ளிகளில் 10க்கு குறைவான மாணவர்களே உள்ளனர். இவர்களுக்கு 3 ஆசிரியர்களே உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
தனியார் பள்ளி செயலர் ஒருவர் கூறுகையில், "அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான், மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் அலைய வேண்டியுள்ளது. மாணவர்களை எண்ணிக்கை குறைந்து போனால், கூடுதலாக ஆசிரியர்கள் உள்ளனர் என கூறி, அவரை மாற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு பயந்து, மாணவர்கள் சேர்க்கையை கூட்டவும், குறையாமலும் பார்த்து கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால், அரசு துவக்க பள்ளிகளுக்கு எதுவும் இல்லை. 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் இருந்தாலும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அரசு பள்ளிகளுக்கு தான், அரசு அதிக அக்கறை எடுத்துகொள்கிறது," என்றார்.
PRIVATE SCHOOL STUDENTS BENEFITTED BECAUSE OF SAMACHEER KALVI SYLLABUS
தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தால், அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, பெரிய அளவில், எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்பது, நேற்று வெளியான, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, வெட்ட வெளிச்சமாக்கியது. மாறாக, தனியார் பள்ளி மாணவர்களே, மாநில அளவில், அனைத்து இடங்களையும் வாரி சுருட்டினர்.
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, முதல் மூன்று இடங்களை, 198 மாணவர்கள் பிடித்து, வியப்பை ஏற்படுத்திய போதும், இதில், இரண்டு இடம் தான், அரசுப் பள்ளிக்கு கிடைத்துள்ளது. "சென்டம்' எடுத்த மாணவர்களிலும், தனியார் பள்ளி மாணவர்களின் பங்களிப்பே, மிகவும் அதிகம் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமச்சீர் கல்வி அறிமுகம்: கடந்த, 2011 வரை, 10ம் வகுப்பு வரை, ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வி திட்டங்கள் அமலில் இருந்தன. இந்த திட்டத்தால், தனியார் பள்ளி மாணவர்களே சாதிக்கின்றனர்; அர” பள்ளி மாணவர்களால் ஜொலிக்க முடியவில்லை என, தமிழக அர” கருதியது. பெரும்பான்மை மாணவர்கள், அர” மற்றும் அர” நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர்.
மொத்தம் உள்ள, 1.25 கோடி மாணவர்களில், 90 லட்சம் மாணவர்கள், அர” மற்றும் அர” நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். எனினும், உயர்கல்வி பெறுவதிலும், வேலை வாய்ப்புகளை பெறுவதிலும், இந்த வகை மாணவர்களின் பங்களிப்பு, மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும், நான்கு வகை கல்வி திட்டங்கள், மாணவர்களிடையே, ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதாகவும் கருதி, சமச்சீர் கல்வி திட்டத்தை, முந்தைய தி.மு.க., அர” கொண்டு வந்தது.
இந்த திட்டம், படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, கடந்த ஆண்டு, 10ம் வகுப்பிற்கும் அமலுக்கு வந்தது. தி.மு.க., அர” கொண்டு வந்த பாடத்திட்டம் தரமாக இல்லை என, கூறி, அ.தி.மு.க., அர”, தரத்தை மேம்படுத்தி, திட்டத்தை அமல்படுத்தியது. இந்த சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தால், கிராமப்புற மாணவர்களின், கல்வித்தரம் மேம்படும் என, அர” எதிர்பார்த்தது.
அரசு எதிர்பார்ப்பு, "புஸ்...':ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, சமச்சீர் கல்வி திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களை விட, தனியார் பள்ளி மாணவர்களே, அதிக சாதனை படைத்து வருகின்றனர். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், முதல் பொதுத்தேர்வு, கடந்த ஆண்டு நடந்தது. இதில், முதல் இடத்தை ஒரு மாணவர், இரண்டாம் இடத்தை, ஆறு மாணவர், மூன்றாம் இடத்தை, 11 மாணவர்கள் பிடித்தனர். இந்த, 17 மாணவர்களும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். மாநில அளவில், ஒரு இடம் கூட, அரசு பள்ளிக்கோ, அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்கோ கிடைக்கவில்லை.
இந்த ஆண்டும் சாதிக்கவில்லை:கடந்த மார்ச் - ஏப்ரலில் நடந்த, இரண்டாம் ஆண்டு தேர்வில், 10.51 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதன் முடிவை, தேர்வுத்துறை, நேற்று வெளியிட்டது. முடிவை பார்த்த அனைவரும், வியப்பு அடைந்தனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, முதல், மூன்று இடங்களை, 198 மாணவர்கள் பிடித்தனர்.கல்வித்துறை வரலாற்றில், அதிக மாணவர்கள், முதல், மூன்று இடங்களை பிடித்தது, இதுவே முதல் முறை என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 498 மதிப்பெண்கள் எடுத்து, ஒன்பது மாணவர்கள், முதல் இடங்களை பிடித்தனர். 52, மாணவர்கள், 497 மதிப்பெண்கள் எடுத்து, இரண்டாம் இடத்தையும், 137, மாணவர்கள், 496 மதிப்பெண்கள் எடுத்து, மூன்றாம் இடத்தை பிடித்தனர். இந்த சாதனையைப் பார்த்து, கல்வித்துறையே வாயைப் பிளக்கிறது.
அரசு பள்ளி தரப்பில் இரண்டே பேர்...:முதல், மூன்று இடங்களைப் பிடித்த, 198 மாணவர்களில், சேலம் மாவட்டம், ஆத்தூர், அரசுமேல்நிலைப்பள்ளி மாணவி, தேவிஸ்ரீ என்பவர், 497 மதிப்பெண்கள் எடுத்து, இரண்டாம் இடம் பிடித்தார்; திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவி தீபிகா, 496 மதிப்பெண்கள் எடுத்து, மூன்றாம் இடம் பிடித்தார். மற்ற, 196 பேரும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.
தமிழ் அல்லாத பிறமொழியை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவர்களில், முதல் இடத்தை, இரு மாணவர்களும், இரண்டாம் இடத்தை, 17 மாணவர்களும், மூன்றாம் இடத்தை, 65 மாணவர்களும் பிடித்தனர். இவர்கள் அனைவரும், தனியார் பள்ளி மாணவர்கள். ஒட்டு மொத்தத்தில், சாதனை படைத்த, 282 மாணவர்களில், இருவர் மட்டுமே, அரசு பள்ளிகளை சேர்ந்தவர்கள்.
இது மட்டுமில்லாமல், 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை, 7.14 லட்சம் மாணவர்கள் பெற்றுள்ளனர். இவர்களில், தனியார் பள்ளி மாணவர்களே அதிகம் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கணித பாடத்தில், 29, 905 பேர், அறிவியல் பாடத்தில், 38,154 பேர், சமூக அறிவியல் பாடத்தில், 19,680 பேர் என, 87,739 பேர், 100க்கு, 100 பெற்று சாதனை படைத்துள்ளனர். இதிலும், தனியார் பள்ளி மாணவர்களின் பங்களிப்பே அதிகம் என, கூறப்படுகிறது.
சமச்சீர் திட்டத்தால் பலனில்லை? இந்த புள்ளி விவரங்கள், சமச்சீர் கல்வி திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பலனடையவில்லை என்பதும், மாறாக, தனியார் பள்ளி மாணவர்களே, முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதும் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.பாடத் திட்டம் வெளியானபோதே, அவை, மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத் திற்கு இணையாக இல்லை என்றும், தரம் குறைவாக உள்ளது என்றும், பல்வேறு தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். மாணவ, மாணவியரும், இதே கருத்தை தெரிவித்தனர்.
ஆனால், அரசு பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை, முந்தைய பாடத்திட்டத்தை விட, தற்போதைய பாடத்திட்டம் தரமாக உள்ளது என, கருத்து தெரிவித்தனர். இதை, அரசு பள்ளி ஆசிரியர்களும், ஆமோதித்துள்ளனர்.பெரும்பான்மை மாணவர்களான அரசுமற்றும் அரசு நிதியுதவி பெறும் மாணவர்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டம், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, எளிதாக அமைந்ததால், ஒட்டுமொத்த இடங்களையும், அவர்களால் வாரி சுருட்ட முடிகிறது என்பது நிரூபணமாகி உள்ளது.
TRADITIONAL SCHOOLS THREATENED FOR ADMISSION
பாரம்பரிய பள்ளிகளுக்கு குடிநீர் துண்டிப்பு: உயர் மக்கள் பிரதிநிதிகள் அடாவடி
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் ஏராளமான பழம்பெரும் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள செயின்ட் சேவியர் பள்ளி 1880ம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 130 ஆண்டுகளாக இருந்து வரும் இப்பள்ளியில் சீட் கிடைப்பது கொஞ்சம் அரிது தான். இதனால் இங்குள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் புள்ளிகள் இந்த பள்ளிகளில் சீட் கேட்டு தொந்தரவு செய்வர். ஆனபோதும் இங்குள்ள உயர் மக்கள் பிரதிநிதிகளுக்கு என்று இரண்டு மூன்று சீட்டுகள் கொடுக்கப்படுகிறது. இருந்தபோதும் அவர்கள் கூடுதல் சீட் கேட்டு இந்த பள்ளிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் சீட் தர மறுத்துள்ளது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளனர். இதேபோல் மற்றொரு பழமையான மகளிர் பள்ளியிலும் இதே பிரச்னைக்காக குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று உயர் மக்கள் பிரதிநிதிகள் பள்ளிகளில் அடாவடி தனத்தை தடுத்து நிறுத்த கல்வியாளர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)



























