SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Sunday, May 05, 2013

TET ANNOUNCEMENT: EXPECTED NEXT WEEK


டி.இ.டி. தேர்வு அறிவிப்பு: அடுத்த வாரம் வெளியாகிறதுமே 05,2013,13:35 IST

சென்னை: "ஆசிரியர் தகுதி தேர்வான, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும்" என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம், 22 ஆயிரத்து 500 பேர், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இன்னும், 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளது. இதற்காக, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.
அடுத்த தேர்வை நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், இது குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டைப்போல், ஜூலையில் தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், வலியுறுத்தினர். இது குறித்து, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார் என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்திருந்தார். எனவே, இதுதொடர்பாக, முதல்வரின் அறிவிப்பையும், பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்

balanagai is still waiting for you to join Twitter...

 
Top corners image
     
 
   
 
 
 

balanagai is still waiting for you to join Twitter...

 
 
  Accept invitation  
 
     
 

Twitter helps you stay connected with what's happening right now and with the people and organizations you care about.

 

Saturday, May 04, 2013

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 32 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவு




ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாமல் 32 பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் 
கிளை உறுதி செய்தது.

விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரத்தைச்சேர்ந்த ஜெயசாந்தி உள்ளிட்ட 32 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன் இந்த உத்தரவை பிறப்பித்தார். பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு 2010 ஏப். 1-இல் கொண்டு வந்தது. அதற்கு முன்பே எங்களை ஆசிரியர்களாக பணிகளில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்பதல் அளித்தனர். இருப்பினும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால், எங்கள் பணி நியமனத்துக்கான ஒப்புதலை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஏற்க மறுத்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாத நிலை ஏற்பட்டால், ஓராண்டு காலத்தில் மத்திய அரசை, மாநில அரசு அணுகி தகுதியில் இருந்து விதிவிலக்கு பெறவேண்டும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு கோரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு பணி வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி டி. ஹரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:

மத்திய அரசின் சட்ட விதிப்படி படி, ஆசிரியர்களை பணியில் நியமிக்கமுடியாத நிலை ஏற்பட்டால், மாநில அரசு அதற்கான காலக்கெடுவுக்குள் விதிவிலக்கு கோரி விண்ணப்பித்து இருக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் இல்லாத நிலை ஏற்பட்ட போதும் அரசு அதற்காக மத்திய அரசை அணுகவில்லை. இந்தச் சூழ்நிலையில்  32 மனுதாரர்களையும் ஆசிரியர்களாக பணியில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததில் தவறு காணமுடியவில்லை. எனவே, 32 பேருக்கும் அதிகாரிகள் தாற்காலிக ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், அதற்கான ஊதியம் பெறுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும். இந்த 32 பேரும் 2015 மார்ச் 31-க்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களை நீக்கம் செய்து தகுதியானவர்களை நியமிக்கலாம். மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு அவ்வப்போது தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை ஜூன் 6-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

எப்படி இருந்த பள்ளி...


எப்படி இருந்த பள்ளி...


டாண்... டாண்... டாண்...

பள்ளி துவங்குவதற்கான முதல் மணியோசை.

‘அம்மா... வரேன்மா..’ பையை தோளில் மாட்டிக் கொண்டு கிளம்புவேன். என் வீட்டுச் சுவரை ஒட்டியே பள்ளி, சில நொடி நடை தூரத்தில்.

காலை பத்து மணிக்குத்தான் பள்ளி. ஒன்பது மணிக்கே நான் ரெடியாகி விடுவதால், தினத்தந்தியில் சிந்துபாத், சாணக்கியன் சொல், ஆண்டியார் பாடுகிறார் (இவையெல்லாம் இன்னும் கூட வருது சார்!) எல்லாவற்றையும் நிதானமாகப் படித்துக் கொண்டிருப்பேன். முதல் மணி அடிக்கத் துவங்கியதும்தான் கிளம்புவேன்.

கல்யாணக் கூடம் போல் அமைந்திருக்கும் முதல் கூடத்தின் நடுவில், ஒரு கோபுரக் கூண்டில் பழங்கால பெரிய மணி. அதன் மேல் அரை வட்ட இரும்பில், சைக்கிள் செயின் மாட்டப்பட்டு இருபுறமும் தொங்கும். பள்ளியின் பியூன் அதை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, அந்தரத்திலிருந்து மத்தைக் கடைபவர் போல் மாறிமாறி இழுக்க, மணி ஊஞ்சல் போலாடி, தன் நாக்கை ஆட்டி, தேவ கானமாய் ஒலியெழுப்ப, அதுவே அன்றைய பள்ளி தினத்தைத் துவங்க உற்சாகத்தைத் தரும்.

பியூன் மணியை ஒரு நிமிடம் வரை தொடர்ந்து அடிப்பார். பள்ளியின் இரண்டாம் கட்டத்தில் விளையாட்டுத் திடல். அதைச் சுற்றி வகுப்பறைகள் நல்ல காற்றோட்ட வெளிச்சத்துடன்.

முதல் மணி அடித்து முடிவதற்குள் அனைத்து மாணவர்களும் திடலில் கூடி, எவருடைய கட்டுப்படுத்தலும் இன்றி, ஒழுங்கான வரிசைகளில் நிற்போம்.

இது ஒரு இடைநிலைப் பள்ளி. 6, 7, 8 வகுப்புகள் மட்டுமே.

திடலில் ஒவ்வொரு திசையிலும், ஒரு வகுப்பு அதன் பிரிவுகளுடன் நிற்க, நான்காம் திசையில் கொடிக் கம்பத்தைச் சுற்றி ஆசிரியர்கள்.

மாணவர் தலைவன், என்.எஸ்.சி மிடுக்குடன் தலைமை ஆசிரியருக்குச் சல்யூட் அடித்து, கொடிக் கயிறை எடுத்துக் கொடுக்க, தினமும் தேசியக் கொடி ஏற்றப்படும்.

துணைத் தலைமை ஆசிரியர், இளைய ராஜாவின் ரசிகர். அவரைப் போலவே கைகளை ஆட்டி ஸ்ருதியைச் சொல்ல, எல்லாரும் கோரஸாக ஏற்ற இறக்கங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவோம்.

திடலில் நடு நாயகமாக ஒரு மாணவன், தினமணியைப் பிரித்து சில முக்கிய செய்திகளை கணீரென்று வாசிக்க, நாட்டு நடப்புகளை அறிந்து கொண்டு தத்தம் வகுப்பறைகளில் ஆஜராவோம்.

எவ்வித படபடப்பும், நிர்பந்தமும், படிப்புச் சுமைகளும், டியூசன் செல்ல வேண்டிய அவசியம் இன்றி, வகுப்புகள் இனிமையாகத் துவங்கும்.

அதட்டல், மிரட்டல் இன்றி, சக மாணவன் போல கல்வி கற்பித்த அப்பள்ளி ஆசிரியர் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதலாம். அதிலும் தலைமை ஆசிரியர். சதா நிதானத்துடன், எப்பொழுதும் புன்னகைக்கும்  முகத்துடன், இலைமறைவான கண்டிப்புடன் அவர் நடத்திய பாடங்கள் வாழ்க்கைப் பாடங்கள்.

என் தந்தை, சித்தப்பா, மாமா... முன் தலைமுறை உறவுகளுக்கும் அவரே தலைமை ஆசிரியர். அவர் கற்பித்த ஆங்கிலப் புலமை எந்தக் கான்வென்ட்டிலும் கிடைக்காதது.

வரையும் கலை, பேசும் கலை, எழுதும் கலை என அனைத்தையும் கற்பித்து எங்களை படிப்படியாக வளர்த்த பள்ளி அது.

காஞ்சியில் நெசவு உச்சத்தில் இருந்த காலம் அது. பல மாணவர்கள் நெசவுக் குடும்பத்தின் வாரிசு. பள்ளியிலும் நெசவுக் கூடம் இருந்தது (என் வீட்டு சன்னல் வழியாக எட்டிப் பார்க்கலாம்!)

நூல்களை சிக்கல் பிரிப்பது, அறுந்த நூல்களை தறிச் சட்டத்தின் துளைகளில் இலகுவாகச் செல்லும் வகையில் முடிச்சிடுவது, ராட்டினம் சுற்றுவது அதன்பின் நெய்வது என தொழிலையும் பள்ளி போதித்தது.

டக்... டக்... டக்... டக்... சீராக, ரிதமாக எந்தவித தவறுமின்றி அதிக நேரம் நெய்வதில் போட்டியே நடக்கும்.

நான் கூட ஒரு ஜமுக்காளமும், கட்டிலுக்கான பட்டை நாடாவையும் நெய்திருக்கிறேன். அதையெல்லாம் காதி கிராப்ட் மூலம் விற்கவும் செய்திருக்கின்றனர்.

1987. இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட். மேட்ச் என்ன ஆச்சோ. ஆசிரியர்களுக்கும் டென்ஷன் எகிறும். வகுப்பின் இடைவேளையில்...

‘ரகு, ஸ்கோர் பார்த்துச் சொல்லேன்...’

அல்வாத் துண்டாய் விழும் வார்த்தையைக் கேட்டதும், வீட்டிற்கு ஓடி, ஒரு ஓவர் பார்த்து, அதே வேகத்தில் திரும்பி... கபில்தேவ் எடுத்த விக்கெட் பற்றியோ, நம்ம தயிர்சாதம், அதான் சார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விளாசிய ஃபோர் பற்றியோ, நான் வர்ணித்துச் சொல்ல, ஆரவாரத்துடன் வகுப்புகள் தொடரும்.

அப்பள்ளியின் ஆண்டு விழா மேடையில் நான் பேசிய நாடக வசனங்கள்தான், என் ப்ரொஃபஷனில் எடுத்த செமினார்களுக்கு அடித்தளம்.

எத்தனையோ நல்ல ஆபீஸர்களை, உயர் அதிகாரிகளை உருவாக்கிய பள்ளி அது.

அதன் பெயர் - தேவள்ள ராமசாமி ஐயா இடைநிலைப் பள்ளி (DRS Secondary School).

இருபது ஆசிரியர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சிறந்து விளங்கிய இப்பள்ளி, கால மாற்றத்தில் மெல்ல இறங்கு முகத்தைக் கண்டது.

அதை உயர்நிலைப் பள்ளியாக்க பலர் எடுத்த முயற்சிகள் தோற்றன. என்னுடன் படித்த நண்பர்கள் குழுவாக இணைந்து பள்ளியை வளர்க்க எடுத்த முயற்சிகளும் நீர்த்தன.

இப்போது நான்கு ஆசிரியர்கள். வெறும் பதினாறு மாணவர்கள். இதற்கு மேல் நடத்த முடியாததால், இதோ இந்த மார்ச் மாதத்துடன், இப்பள்ளி மூடப்படும் நிலையில் இருக்கிறது

NEWS ABOUT NAGAI VATTARAM KOOTTANI MEETING RESOLUTIONS


Friday, May 03, 2013

BEST WISHES TO MR.KARUNANIDHI FOR HIS VICTORY AS PRESIDENT



INVITATION FOR 10TH WORLD TAMIL TEACHERS CONFERENCE JUNE 3-5,2013 MALAYSIA



TAMIL LETTERS CLASSIFICATION


கோடை விடுமுறைக்குள் கழிவறை, குடிநீர் வசதிகளை செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை




tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை: கோடை விடுமுறைக்குள் எல்லா தனியார் பள்ளிகளிலும் கழிவறை, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் ஆய்வுக்குழுவினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

* தமிழகத்தில் இயங்கும் அனைத்து தனியார் பள்ளிகளும் கோடை விடுமுறையை தொடர்ந்து ஜூன் மாதம் திறக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட விடுமுறை காலத்தில் அந்தந்த பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

* பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாணவ மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவுக்கு இருபாலர் கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பல தனியார் பள்ளிகளில் தேவையான அளவுக்கு கழிவறை வசதிகள் இல்லை என்பது ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கூடுதல் கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் பெற்ற பள்ளிகள் உடனடியாக தேவையான வசதிகளை செய்ய வேண்டும்.

* மாணவ மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை வசதிகள், வகுப்பறையில் மேஜை, நாற்காலி வசதிகள், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் போன்றவற்றை பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நியமித்தல் வேண்டும்.

* இந்த வசதிகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஏற்படுத்த வேண்டும். இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அந்தந்த மாவட்ட அளவில் பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறையினர் இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ள ஆய்வுக்குழுவினர் அதிரடி ஆய்வு மேற்கொள்வார்கள்.

* அனைத்து தனியார் பள்ளிகளும் தங்கள் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை முறை குறித்து தகவல் பலகையில் தெரியப்படுத்த வேண்டும். அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத இடத்தை ஒதுக்கீடு செய்து வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே இலவச பொருட்களை வழங்க கல்வித்துறை உத்தரவு


By dn

First Published : 02 May 2013 01:12 PM IST
அரசு மற்றும் அரசு உதவி சார்ந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே அரசின் இலவச பொருட்களை வழங்க வேண்டுமென்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தக பை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஒவ்வொரு வருடமும் அரசு வழங்கி வருகின்றன. அந்த வகையில் வரும் கல்வியாண்டில் அரசின் இலவச பொருட்களை பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே வழங்குமாறு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.
அரசு உத்தரவின் படி இந்தாண்டு முதல் மாணவர்களுக்கு உலக வரைபடம் வழங்கப்பட உள்ளன.

G.O.145 DA ARREAR MAY 2013





Thursday, May 02, 2013

தமிழக அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : முதல்வர்


By dn, சென்னை

First Published : 02 May 2013 12:24 PM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 8% உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் இன்று அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 8% உயர்த்தப்படும். இது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட உள்ளது.
அகவிலைப்படி உயர்வின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,631 கோடி செலவாகும். இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் என 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று கூறினார்.

பள்ளிகளில் விடுமுறையே இல்லையே!



டி.கே.ஹரிகோவிந்தராஜ், கோவையிலிருந்து எழுதுகிறார்:ஆண்டு முழுவதும் மாணவர்கள் பள்ளிகளில் படித்து மனதில் இருத்தி, மூளையில் பதிவு செய்து, களைப்புற்றவர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு ஓய்வு நிலை தான், ஆண்டு விடுமுறை.
ஆனால், இன்று நடைமுறை வேறுவிதமாக உள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகள், எந்த விடுமுறையையும் விடுவதில்லை. பள்ளிக்கு விடுமுறை அறிவித்து விட்டு, தனிப் பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில், வகுப்புகள் நடத்தி வருகின்றன. அதற்கு தனியாக கட்டணமும் வசூல் செய்து விடுகின்றனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி விகிதம், 100 சதவீதம் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு, மாணவர்களை பிழிந்து எடுக்கின்றனர். மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றால் செய்தித்தாள்களில், 100 சதவீதம் தேர்ச்சி என்று பெரிய விளம்பரம் செய்து, பள்ளிக்கு மாணவர் சேர்க்கையை விரிவுபடுத்துகின்றனர். ஒவ்வொரு மாணவரிடமும் கட்டணம் வசூலித்து, தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்கின்றனர். தன் குழந்தைகள் நல்ல பள்ளிகளில் படிப்பதை, பெற்றோர் பெருமையாக நினைக்கின்றனர். நல்ல பள்ளி என்பது, 100 சதவீதம் தேர்ச்சி காட்டும் பள்ளி. அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எண்ணிப் பார்ப்பதில்லை.இவ்வாறு, தொடர்ந்து ஓய்வின்றி பள்ளி செல்வதால் மாணவர் மனநிலையும், உடல்நிலையும், மறைமுகமாக பெரியளவு பாதிக்கப்படுகிறது. பள்ளியை விட்டு மேற்படிப்புக்குச் செல்லும் போது, விடுதலை பெற்ற விலங்குகள் போல செயல்படுகின்றனர். அது அவர்களுடைய வாழ்க்கையை, பெரிதும் பாதிக்கிறது. கோடை விடுமுறை விடப்பட்டதும், ஓவியப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி என்று பலவகையான பயிற்சி முறை தொந்தரவுகள்... இதுவும் ஒருதலைவலியே.கடைசியில், குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் உள்ள பாச உணர்வும், உறவும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன.

விளையாட்டு போன்ற பயிற்சிகளுக்காக வசூலிக்கும் கட்டணத்தை கல்விக் கட்டணமாகக் கருத இயலாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு


By dn, சென்னை

First Published : 02 May 2013 02:28 AM IST
விளையாட்டு போன்ற பாடத் திட்டத்தோடு தொடர்பில்லாத செயல்பாடுகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தை கல்விக் கட்டணமாக கருத இயலாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே இது போன்ற கட்டண விவகாரத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட கல்விக் கட்டண நிர்ணயக் குழு தலையிட முடியாது என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
விளையாட்டு, இசை, நடனம் போன்ற பாடத் திட்டத்தோடு தொடர்பில்லாத சில செயல்பாடுகளுக்காக தங்கள் பள்ளி மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து சென்னை திருவொற்றியூரில் உள்ள கவிபாரதி வித்யாலயா பள்ளி சுற்றறிக்கைகளை வெளியிட்டது.
இது தொடர்பாக பெற்றோர்கள் சிலர் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு, கவிபாரதி வித்யாலயா பள்ளி வெளியிட்ட சுற்றறிக்கைகள் சட்டப்படி செல்லாது என உத்தரவிட்டது.
கல்விக் கட்டண நிர்ணயக் குழு பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.ரவிச்சந்திர பாபு ஆகியோர் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
இசை, நடனம், விளையாட்டு, யோகா பயிற்சிகள் போன்றவை பாடத் திட்டத்தோடு தொடர்பில்லாத கூடுதல் செயல்பாடுகள். பள்ளி நேரத்துக்கு முன்பாகவோ அல்லது பள்ளி முடிந்த பிறகுதான் இதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதுபோன்ற பயிற்சிகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை கல்விக் கட்டணமாகக் கருத இயலாது.
ஆகவே, விளையாட்டு போன்ற பாடத் திட்டம் சாராத செயல்பாடுகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பான விவகாரத்தில் கல்விக் கட்டண நிர்ணயக் குழு தலையிட முடியாது.
அதே நேரத்தில் கல்வித் திட்டம் சாராத பயிற்சிகளுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பெற்றோர் கருதினால் அது குறித்து சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளிடம் முறையிட பெற்றோருக்கு முழு உரிமை உண்டு என்று நீதிபதிகள் அந்தத் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

போட்டியை சமாளிக்க தமிழக அரசு அதிரடி : ஆங்கில வழி கல்வியை அதிகரிக்க முடிவு


தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளித்து, அதிகமான மாணவ, மாணவியரை ஈர்க்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வியை துவக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு, விரைவில், சட்டசபையில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள குறைவான அரசுப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 
சென்னையில், அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் உள்ளன. இந்த பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு சேர்க்கைக்கு, பலத்த போட்டி நிலவுகிறது.அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், போலீசார் பாதுகாப்புடன், விண்ணப்பங்களை வழங்குகின்றனர். 
தனியார் பள்ளிக்கு நிகராக, இந்த பள்ளி இயங்குவது தான், போட்டிக்கு காரணம். ஆசிரியர்களும், முழு ஈடுபாட்டுடன் உழைப்பதால், மாநில அளவிலான இடங்களில், இந்த பள்ளி இடம் பிடிக்கிறது. அத்துடன், தேர்ச்சியும், 100 சதவீதமாக இருந்து வருகிறது.இதேபோன்று, படிப்படியாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆங்கிலவழி கல்வி முறையை அறிமுகப்படுத்தி, தரமான கல்வியை வழங்கினால், தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரை இழுக்க முடியும் என, கல்வித்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
ஏற்கனவே, சென்னை மாநகராட்சி சார்பில் இயங்கும், 250 பள்ளிகளில், 95 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் நடந்து வருகின்றன. தற்போது, மேலும், 20 பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகளை துவக்க உள்ளதாக, மாநகராட்சி அறிவித்துள்ளது. 

மாநகராட்சியைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையும், அதிகளவில், ஆங்கில வழி கல்வி வகுப்புகளை துவங்க, திட்டமிட்டுள்ளன.கடந்த ஆண்டு, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்த பள்ளிகளில், 640 வகுப்புகள், ஆங்கில வழியில் நடந்து வருவதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டில், 500 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு, சட்டசபையில், இம்மாதம், 10ம் தேதி, பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியாகலாம் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில்,"படிப்படியாக, அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என, கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆங்கில வழி கல்வி திட்டத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கை, ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும். அந்த வகையில், வரும் கல்வி ஆண்டிலும், கணிசமான அரசு பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும்' என, தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை, 10 ஆயிரத்திற்குள் இருந்தாலும், இவற்றில், 43 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆனால், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, 36 ஆயிரமாக இருந்தபோதும், இவற்றில் பயிலும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, 58.05 லட்சமாகத் தான் உள்ளது.ஆண்டுக்கு ஆண்டு, தனியார் பள்ளிகளின் வளர்ச்சி வேகம் எடுத்து வரும் நிலையில், போட்டியை சமாளிக்கவும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.-

ஆசிரியர் இன்றி 2013 தமிழகத்தில் பள்ளிக்கல்விக்கு பாதிப்பு


புத்தகம் இன்றி 2011, ஆசிரியர் இன்றி 2013 தமிழகத்தில் பள்ளிக்கல்விக்கு பாதிப்பு

கருத்துகள்


நெல்லை: ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படாததால், வரும் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில் ஓரளவு தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழும் தமிழகத்தில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு தமிழ் வழிக்கல்வி முறை பின்தங்கிவிட்டது. இதை சரிசெய்ய சமச்சீர் கல்வி முறையை கடந்த ஆட்சியில் அமலாக்கினர். ஆனால், கடந்த 2011ல் சமச்சீர் கல்விக்காக அச்சிடப்பட்ட புத்தகங்கள் கைவிடப்பட்டு புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இதனால் சுமார் 3 மாதங்கள் பிள்ளைகள் பள்ளி சென்று படிக்காமல், விளையாடியும் ஊர் சுற்றியும் பொழுதை போக்கினர். பல பள்ளிகளில் பாடம் நடத்தாமலேயே ஒப்புக்கு தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஆசிரியர் காலி பணியிடங்கள் சுமார் 20 ஆயிரம் உள்ளன. இம்மாதம் கூடுதலாக சில ஆயிரம் பணியிடங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க முடியாதவாறு ஆசிரியர் தகுதி தேர்வு தடையாக உள்ளது. கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அதிகமில்லாத வடமாநிலங்கள் சிலவற்றில் கல்லூரி கல்வியை முடித்த வேகத்தில் பலரும் ஆசிரியரானதால், தகுதி தேர்வை மத்திய அரசு அமலாக்கியது. இத்திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் எதிர்ப்பை மீறி 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி அடையாததால் மறு தேர்வு நடத்தப்பட்டது. அக்டோபரில் நடந்த இத்தேர்வில் வென்றவர்களை டிசம்பரில் நியமித்தனர். இதனால் பாடம் நடத்தும் பணி பாதிப்படைந்தது. 

சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்க உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் அல்லது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே ஆசிரியர் நியமனம் நடந்தால் தான் திட்டமிட்டு, கால அட்டவணை போட்டு பாடம் நடத்தி முடிக்க முடியும். அதுவும்  கலந்தாய்வு முடிந்த பிறகு ஆசிரியர்களை நியமனம் செய்வதே நல்லது என்று ஆசிரியர்கள் பலரும் வலியுறுத்துகின்றனர்.

Wednesday, May 01, 2013

குழந்தைகள் படிக்க பெற்றோர் வாய்ப்பு கொடுங்கள்: பெரம்பலூர் கலெக்டர் பேச்சு


குழந்தைகள் படிக்க பெற்றோர் வாய்ப்பு கொடுங்கள்: பெரம்பலூர் கலெக்டர் பேச்சு
 
குழந்தைகள் படிக்க பெற்றோர் வாய்ப்பு கொடுங்கள்: பெரம்பலூர் கலெக்டர் பேச்சு
lekhafoods.gif
பெரம்பலூர், மே 1-

பெரம்பலூர் அருகே உள்ள பேரளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, மரம் நடும் விழா, கலைஅரங்கம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கிராம கல்வி குழத் தலைவரும் ஊராட்சி மன்ற தலைவருமான துரைக் கண்ணு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ஸ்ரீதேவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிராணி வரவேற்றார். ஆசிரியை ஜாய்ஸ் ஸ்டெல்லா ராணி ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ் அகமது புதிதாக கட்டப்பட்ட கலைஅரங்கத்தை திறந்து வைத்தும், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் பேசியதாவது:-

பேரளி ஊராட்சி மன்ற தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா இவ்வளவு பிரமாண்டமாக நடக்கும் என்று எதிர்பார்க்கல்லை இதை பார்த்தவுடன் பிரமிப்பாக உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் எனக்கு பல மீட்டிங் இருந்த தால் என்னால் 6 மணிக்கு வர முடிய வில்லை.

பேரளி இளைஞர்கள் 10 பேர் வந்து தொடர்ந்து நீங்கள் வந்து தான் ஆக வேண்டும் என்று கூறிய கட்டாயத்தல் மீட்டிங் முடித்து விட்டு 8 மணிக்கு மேல வந்து உள்ளேன். நிகழ்ச்சியில் குழந்தைகள் தாய்மார்கள் இருப்பாங்க நான் 8 மணிக்கு மேல் வந்தால் இன்னும் கால தாமதம் ஆகிவிடும் என்றேன். அதற்கு நீங்கள் தான் வந்து பேச வேண்டும் என்றார்கள்.

உங்கள் ஆர்வத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அரசு பள்ளிகளுக்கு முன் உதாரணமாக பேரளி பள்ளி கூடம் உள்ளது. நான் படித்தது கூட அரசு உதவி பெறும் பள்ளியில் தான் படித்தேன் அந்த பள்ளியில் தான் மாவட்ட ஆட்சியராக அன்று உள்ளேன்.

அரசு பள்ளியில் படித்ததில் எந்த குறையும் எனக்கு இல்லை. நம்முடைய சேவை நம்ம ஊரிலே இருக்க வேண்டும் என்று பேரளி துபாய் வாழ் நண்பர்கள் இங்கு 9 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டி கொடுத்து உள்ளார்கள். இம்மாதரி இளைஞர்கள் ஊர் ஊருக்கு இருந்தால் நன்றாக இருக்கும். பெற்றோர்களுக்கு சில கருத்தை சொல்ல விரும்பு கிறேன் குழந்தை எந்த பள்ளியில் படிக்கின்றது என்பது முக்கியமல்ல.

குழந்தை பள்ளி கூடத்தில் இருப்பது 6 மணி நேரம் தான். மீதி 18 மணி நேரம் உங்களிடம் தான் உள்ளது. எவ்வளவு வசதி படைத்த பள்ளியில் படிக்கின்ற குழந்தைகள் எல்லாம் கலெக்டராகவோ, என்ஜினீயரகவோ, டாக்ட ராகவோ ஆவது இல்லை. எல்லா பெற்றோர்கள் குழந்தைகள் முன்னேற வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

அப்படி பெற்றோர்கள் குழந்தைகள் முன்னேற வேண்டும் என்று தான் நினைத்தால் நீங்கள் செய்ய வேண்டியது டிவியில் சிரியல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் நீங்கள் டிவி பார்த்து கொண்டு அவன் படிக்க சொன்ன அவன் படிக்கமாட்டான் நீங்கள் என்ன செய்கிறீர்களே அதை குழந்தை திருப்பி செய்யும். காலையில் அப்பா பேப்பர் படிச்சா அவனும் பேப்பர் படிப்பான், நீங்கள் புத்தகம் படிச்சா அவனும் படிப்பான் உங்கள் செயலைதான் பிள்ளைகள் திருப்பி செய்யும்.

வாழ்கையில் முன்னேற படிப்பறிவு மிக முக்கியம். பெரிய பள்ளிகளில் அதிக தொகை கொடுத்து பிள்ளை சேர்த்து விட்டால் பொறுப்பு முடிந்தது என்று நினைப்பது தவறு. அது உண்மை இல்லை. மனிதன் வாழ்வதற்கு பல கஸ்டங்கள் உள்ளது. எனவே தவறாமல் பள்ளிக்கு அனுப்புங்கள். படிப்பதற்கு குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்.

உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் தினமும் செய்திதாள் வாங்கி கொடுங்கல் மாதம் ஒரு புத்தகம் வாங்கி கொடுங்கள். குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும் முன்னேறும். வரும் கல்வி ஆண்டில் இப்பள்ளியில் ஆங்கில வழி கல்வி தொடங்கபடும் என இவ்வாறு கலெக்டர் பேசினார்.

விழாவில் வேப்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராமதாஸ், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் புகழேந்தி, வார்டு உறுப்பினர்கள் கனகராஜ், கதிர்வேல், நல்லதம்பி, நாகராஜன், ஆசைதம்பி, ஆசிரியைகள் பவுஜியா பேகம், சந்திரா, உள்பட துபாய் வாழ் நண்பர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சொய் சொய்ங் சொய் சொய்ங் கும்கி பட பாடலை ரசித்து கேட்டார்.

மேலும் துபாய் வாழ் நண்பர்கள் உள்பட 175 பேர் புலவலராக சேர்ந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் 252 மரக்கன்று நடும் பணி தொடங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியை அமுதா நன்றி கூறினார்.

பள்ளிக் கட்டடம் இடிந்ததால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்!


பள்ளிக் கட்டடம் இடிந்ததால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்!

First Published : 01 May 2013 05:13 AM IST
திருவாலங்காடு அருகே பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து,3 மாதங்கள் ஆகியும் கட்டடம் சீரமைக்காததால் மரத்தடியிலும், வாடகை கட்டடத்திலும் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம் முத்துகொணாடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கோடிவள்ளி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சீமை ஓடுகளால் ஆன இரு வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டது.
பள்ளியின் பின்புறம் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி இருந்தது. இத்தொட்டியில் குடிநீர் நிரப்பட்டு கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் தொட்டியைப் பராமரிக்காததால் தொட்டியின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடிநீர் தொட்டி இடிந்து பள்ளிக் கட்டடம் மீது விழுந்தது. இதில் கட்டடம் முழுவதும் சேதம் அடைந்ததது. ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பினர்.
பள்ளி கட்டடம் சேதம் அடைந்ததால், அங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர். பள்ளி கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து சம்மந்தப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலக, ஒன்றிய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் வந்து நேரில் பார்வையிடவில்லை என மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் மாணவர்கள் மரத்தடியிலும், தனியார் வீட்டிலும் போதிய இடவசதியின்றி கல்வி பயின்று வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு இம்மாதம் 30 தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி தொடங்குவதற்கு முன், இடிந்த பள்ளிக் கட்டடத்தை புதுப்பித்துத் தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News and photos of executive body resolutions of nagai block asiriyar koottani



www.facebook.com/balakoottani
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

ஆசிரியர்கள் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்கவில்லை


நெல்லை : நெல்லை கேடிசி நகரில் குடியிருக்கும் ஆசிரியர் வையணன் ராமதநாதபுரம் மாவட்டம் டிஎம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக (உயிரியல்) கடந்த 17,7,12 முதல் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2012,13ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. கலந்தாய்வில் பங்கேற்காத தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிய ஒரு ஆசிரியைக்கு முறைகேடாக நெல்லை மாவட்டத்திற்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட் கிளை யில்  வழக்கு தொடர்ந்தார். 

இது தொடர்பான வழக்கில், ஆசிரியர் வையணன் கலந்தாய்வு நடவடிக்கைகளை குறை கூறி மோசடி செயலில் ஈடுபடுகிறார். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என பள்ளிக¢ கல்வி இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வினோத் கே.சர்மா, நிர்வாக காரணங்களுக்காக இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளதால் மேல் முறையீடு செய்யுமாறு கூறி மனுவை தள்ளு படி செய்தார். இதைத் தொடர்ந்து வையணன் தகுந்த ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், விமலா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அதில் கூறியிருப்பதாவது: 
ஆச¤ரியர்கள் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்தப்படவில்லை. விண்ணப்பம் அனுப்பாமலேயே ஆசிரியைக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எனினும், கல்வி ஆண்டின் இறுதியாகி விட்டதால் வரும் கல்வி ஆண்டில் (2013,14) கலந்தாய்வு நடத்தப்படும் போது ஆசிரியர் வையணன் விருப்பத்தின் பேரில் அவருக்கு பணியிடம் வழங்க வேண்டும். 

இந்த ஆண்டு கலந்தாய்வில் அனைத்து காலிப்பணி இடங்களை யும் ஒளிவு மறைவின்றி காண்பித்து வெளிப்படையான முறையில் கலந்தாய்வு நடத்த வேண்டும். உரிய இடம் கலந்தாய்வில் கிடைக்கவில்லை என நீதிமன்றத்திடம் நிவாரணம் கோரி ஆசிரியர்கள் வர அரசு வழி வகை செய்யக் கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.