தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

SAY NO TO PPP, TET ,CPS


widgets

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

Loading...

கல்வி செய்தி

Loading...

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

Loading...

BBCTamil.com | இந்தியா

Loading...

FLASH NEWS

விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்

  • தினத்தந்தி கல்வி செய்திகள்
  • விகடன் செய்திகள்

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Loading...

Tamilnadu Teachers friendly blog

Loading...

தினகரன் கல்வி செய்திகள்

Loading...

தமிழ் முரசு செய்திகள்

Loading...

தினகரன் முக்கிய செய்திகள் --

Loading...

TEACHER TamilNadu

Loading...

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Loading...

Dinamani

Loading...

Daily Thanthi

Loading...

widget

கல்வி அஞ்சல்

Loading...

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Loading...

Thursday, February 07, 2013

துவக்க, நடுநிலை பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த... * தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆசிரியர்களுக்கு பயிற்சி


  • நடவடிக்கை! * துவக்க, நடுநிலை பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த... * தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆசிரியர்களுக்கு பயிற்சி

    :துவக்கப்பள்ளிகளில், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தவும், பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    தமிழகத்தில், ஆங்கில மோகம் காரணமாக குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே தனியார் பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில், பல்வேறு சலுகை வழங்கப்பட்டாலும், ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உயர்கிறது. அரசு பள்ளிகளில், துவக்க நிலையில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்து பள்ளி கல்வி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.

    இதில், மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. பல பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 40 மாணவர்களுக்குள் மட்டும் படிக்கின்றனர். இதனால், அரசு கொண்டு வரும் திட்டங்களும், முயற்சிகளும் வீணாகி வருகின்றன. இதே நிலை நீடித்தால், ஓரிரு ஆண்டுகளில் பல அரசு பள்ளிகள் மூடும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதை தவிர்த்து, பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக, தமிழ் வழி, ஆங்கில வழி கல்விக்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்காக, பள்ளி வாரியாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    அடுத்த கல்வியாண்டில், பள்ளி திறப்பதற்கு முன் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி, ஆசிரியர்கள் நியமிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி முழுவீச்சில் வழங்கப்படவுள்ளது. இதில், தனியார் பள்ளிகளை போன்று, விளையாட்டு முறையுடனும், எளிமையான முறையிலும் கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    இதற்கு தேவைப்படும் பயிற்சிகள், பயிற்சியாளர்கள் விபரம் ஆகியவை தயாரிக்கும் பணி நடக்கிறது. அதுபோல், பள்ளி நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    இதற்கான, முதல்கட்ட பயிற்சி முகாம் இரு நாட்களுக்கு முன் துவங்கியது. தேர்வு நேரம் நெருங்குவதால், இப்பயிற்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்., மாத இறுதியில் மீண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பயிற்சி வழங்கப்படவுள்ளது.

    பள்ளி திறக்கப்படும் போது, மாணவர்களை கொண்டு சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தவும், பள்ளி மேலாண்மை குழு, கிராம கல்விக்குழு உறுப்பினர்களை கொண்டு வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை கணிசமாக உயரும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் காத்துள்ளனர்.

    பாக்ஸ்...

    "அடிப்படை வசதிகளும் மேம்படும்'

    கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "தற்போது, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதிலும், கல்வித்தரத்தை மேம்படுவதிலும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், பயிற்சி மட்டுமின்றி, பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதன்மூலம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும், சிறப்பான கல்வியும் கிடைக்கும். பள்ளி திறப்பதற்கு முன்னரே பெற்றோருக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது,' என்றனர்.
    விருப்பம் · 
    • Asiriyar Voiceமற்றும் வேறு 2 பேர்கள் ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.
    • Senthil Kumar first ban the card system in govt schools
      13 மணி நேரம் முன்பு · விருப்பம் · 3
    • Asiriyar Kural thats right
      13 மணி நேரம் முன்பு · விருப்பம்
    • Srinivasan Btp Abl card system must be banned
      12 மணி நேரம் முன்பு via கைத்தொலைபேசி · விருப்பம் · 2
    • Ram Kumar private schoolsla no training.only memory method.not good way for this.
      11 மணி நேரம் முன்பு via கைத்தொலைபேசி · விருப்பம்
    • Ravi Chandran வியாபாரப்பள்ளிகளை திறக்க கண்டபடி அனுமதித்துவிட்டு அங்கு 25% இலவசமாக பிள்ளைகளைச் சேர்க்கவும் அதற்கு அரசே நீதியும் கொடுத்து அரசு பள்ளியை மூட அச்சாரம் போட்டுவிடு அரசு பள்ளியை மேன்படுத்துவோம் என சூழுரைக்கிறது ஆஹா ....பேஸ் ...பேஸ் ! " பாலுக்கு காவல் பூனைக்குத் தோழன் "
      3 மணி நேரம் முன்பு · விருப்பம்
Posted by Unknown at 10:58:00 PM No comments:

CPS NEW PROCEEDINGS 1617 DATED 5.2.13




Posted by Unknown at 10:49:00 PM No comments:

G.O.11 middle school hms posts




-
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Posted by Unknown at 10:22:00 PM No comments:

Wednesday, February 06, 2013

RESOLUTIONS-BLOCK SECRETARIES MEETING OF NAGAPATTINAM DISTRICT TAMILNADU THODAKKAPALLI ASIRIYAR KOOTTANI



Posted by Unknown at 10:30:00 PM No comments:

Tuesday, February 05, 2013

PHOTOS-BLOCK SECRETARIES MEETING OF NAGAPATTINAM DISTRICT TAMILNADU THODAKKAPALLI ASIRIYAR KOOTTANI



--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Posted by Unknown at 10:57:00 PM No comments:

பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தேவையான தட்டு மற்றும் டம்ளர்கள் கடந்த, 30 ஆண்டுகளாக வாங்கப்படவில்லை.


திவு செய்த நாள் : பிப்ரவரி 05,2013,01:36 IST
பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தேவையான தட்டு மற்றும் டம்ளர்கள் கடந்த, 30 ஆண்டுகளாக வாங்கப்படவில்லை. வீட்டிலிருந்தே தட்டு கொண்டு வந்து சாப்பிட, மாணவர்கள் சங்கடப்படுகின்றனர். இதையடுத்து, சத்துணவு வழங்க, 62 லட்சம் தட்டு மற்றும் டம்ளர்கள் தேவை என, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 1982 - 83ம் கல்வியாண்டில், பள்ளிகளில் மதிய சத்துணவு திட்டத்தை, முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., தொடங்கி வைத்தார். அப்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும், 35 ஆயிரம் பள்ளிகளில், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

"வெரைட்டி ரைஸ்' : இதற்காக, ஒரு மாணவனுக்கு, 10 ரூபாய் என்ற அடிப்படையில், அலுமினிய தட்டு, டம்ளர் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்கி கொள்ள உத்தரவிடப்பட்டது. தற்போது, 43 ஆயிரம் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வரும், சத்துணவு திட்டத்தின் மூலம், 52 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை, 25 லட்சம் மாணவர்களும்; 6ம் வகுப்பு முதல், 10ம் 

வருகை பதிவேட்டுக்காக... சில மாணவர்கள், வருகை பதிவேட்டுக்காக சத்துணவு சாப்பிடுகின்றனர். இதற்காக,வீட்டில் இருந்து சிறிய தட்டு எடுத்து வருகின்றனர். முட்டையுடன், சத்துணவு வாங்கி, முட்டையை மட்டும் சாப்பிடுகின்றனர். சாப்பாட்டை அப்படியே கொட்டி விடுகின்றனர். இதனால் சத்துணவு வீணாகிறது. இவ்வாறு அவர் கூறினார். சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த பிரச்னை குறித்துல எங்கள் கவனத்துக்கும் வந்தது. 62 லட்சம் தட்டு மற்றும் டம்ளர்கள் வாங்க வேண்டியிருப்பதாகவும், இதற்காக, 16 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும், அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளோம். விரைவில் அரசு தரப்பில் நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement
Posted by Unknown at 9:10:00 AM No comments:

மாணவர்களுக்கு எட்டாத அரசின் இலவசங்கள்



பிப்ரவரி 04,2013,07:11 IST

:


சிவகங்கை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி ஆண்டு முடியும் தறுவாயில் கூட, புத்தகப் பை உட்பட, இலவச பொருட்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களிடம் கல்வியை ஊக்குவிக்கும்வகையில், பஸ் பாஸ், சீருடை, நோட்டுப் புத்தகம், காலணிஉட்பட, 16 இலவச பொருட்கள் வழங்கப்படும் என, அரசுஅறிவித்தது. ஆனால், 13 பொருட்களை மட்டுமே வழங்கிஉள்ளனர்.
கல்வி ஆண்டு முடிய உள்ள நிலையில், ஆறு முதல், 10ம்வகுப்பு மாணவர்களுக்கு, இலவச வடிவியல் பெட்டி -ஜியோமெட்ரி பாக்ஸ், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு காலணி, ஒன்று முதல்,பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்படவில்லை.
கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வி ஆண்டு முடிவதற்குள், எஞ்சிய இலவசபொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு உத்தரவுக்கு பின், விடுமுறைநாட்களில் கூட, மாணவர்களை அழைத்து கொடுத்து விடுவோம்" என்றார்.

வாசகர் கருத்து

 கல்வி துறை.. ஒவொரு இலவச பொருட்களுக்கும்.. தனி தனியே .. மாணவர் பற்றிய அணைத்து விவரங்களையும் கேட்கிறது.. உதரணமாக ... இலவச geomentry box க்கு .. மாணவர் பெயர், பிறந்த தேதி ..முகவரி, பெற்றோர் விவரம்... (ஏறக்குறைய 20-25 விவரங்கள்) திரும்பவும் இலவச செருப்பு க்கு ..மாணவர் பெயர், பிறந்த தேதி ..முகவரி, பெற்றோர் விவரம்... (ஏறக்குறைய 20-25 விவரங்கள்) இதை ஒரு DATABASE வைத்து தேவை பட்ட additional விவரங்களை மட்டும் .. உதரணமாக கால்-சைஸ் மட்டும் INPUT கொடுக்க SETUP செய்ய கல்வி துறை க்கு தெரியவில்லை... ஒரு சாதாரண ComputerOperator தெரிந்த விவரம் கூட ... INTERGRATED DATABASE வைத்து manage பண்ண கல்வி துறை க்கு தெரியவில்லை... இதில் .. அமைச்சர் - பல IAS அதிகாரிகள் ..பல லட்சம் சம்பளம் வங்கி கொண்டு ..சிறப்பாக செயல் படவில்லை இதுபோல் 20-25 இலவச பொருட்களுக்கும் 20-25 முறை ..மாணவன் பற்றிய அணைத்து விவரங்கை ..தொகுத்து அனுப்ப.. பல நாட்கள் ஆகின்றது.. பள்ளியில் உள்ள ஆபீஸ்-அச்சிச்டன்ட் க்கு ... யெனவே காலம் கடந்து வழங்கி ..பயன் இல்லாமல் போகின்றது பல பொருட்கள் (செருப்பு .. geomentry பாக்ஸ்..ஏறக்) TNPSC போன்று திறமையாக- விரைவில் Computerize செய்ய தெரிந்த ஒருவர் கல்வி துறைக்கு தேவை...  
by தனுஷ்,India    2/4/2013 11:36:11 AM IST
Posted by Unknown at 8:58:00 AM No comments:

அடிப்படையே ஆட்டம்!


By தினமணி

First Published : 05 February 2013 04:33 AM IST
இந்தியாவில் கல்வி அமைப்பு பற்றிய புள்ளிவிவரங்களை ஆண்டுதோறும் திரட்டி அறிக்கை வெளியிட்டு வருகிறது "அசர்' என்றொரு அமைப்பு. இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் 2012-ஆம் ஆண்டுக்கான அறிக்கை, பல அதிர்ச்சி தரும் தகவல்களை அளிக்கிறது.  கிராமப்புற இந்தியாவின் கல்வி நிலை பற்றிய புள்ளிவிவரங்கள், நமது வளர்ச்சி என்பது எந்த அளவுக்குப் போலித்தனமானது என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது.
 ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் 53 விழுக்காடு குழந்தைகள் இரண்டாம் வகுப்புக்கான பாடத்தைப் படிக்க முடியாத நிலையில் இருப்பதாக "அசர்' புள்ளிவிவரம் வெளிப்படுத்தி இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், இரண்டாண்டுகளுக்கு முன்பு 46% இருந்த நிலைமை, இப்போது, பள்ளிக் கல்விக்கான மத்திய நிதி ஒதுக்கீடு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்ட நிலையில் 53% ஆக அதிகரித்திருப்பதுதான். அரசுப் பள்ளிகளை மட்டும் பிரித்துப் பார்த்து ஆய்வு நடத்தியபோது, இந்தப் புள்ளிவிவரம் 58% ஆக மேலும் அதிகரிக்கிறது.
 கழித்தல், வகுத்தல் போன்ற கணிதப் பயிற்சிகளில் நிலைமை அதைவிட மோசம். அடிப்படை அரிச்சுவடிக் கணக்குகளைக்கூட சரிவரச் செய்ய முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பதுதான் உண்மை நிலை. வகுத்தல் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டால், கிராமப்புற இந்தியாவின் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் நான்கில் மூன்று பகுதியினருக்கு வகுத்தல் என்பது புதிராகவும், புரியாததாகவும் இருக்கிறது என்கிறது "அசர்' ஆய்வு.
 கடந்த ஐந்து ஆண்டுகளாக, நகர்ப்புறங்களைப் போலவே, கிராமப்புறங்களிலும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணம் இருக்கிறது. தேசிய அளவில் 28% அதிகரித்திருக்கிறது என்றால், சில மாநிலங்களில் தனியார் பள்ளிகளிலான மாணவர் சேர்க்கை ஏறத்தாழ 60% அதிகரித்திருக்கிறது. அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லாததும், கட்டமைப்பு வசதிகள் இருந்தும் பராமரிக்கப்படாததும், அரசுப் பள்ளிகள் என்றாலே குழந்தைகளுக்கு முனைப்புடனும், கடமை உணர்வுடனும் சொல்லித் தர மாட்டார்கள் என்கிற பொதுக் கருத்து வலுப்பெற்றிருப்பதும்தான் இதற்குக் காரணம்.
 கல்வி, சாலைப் பராமரிப்பு, சுகாதாரம், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு போன்றவை அரசின் கடமைகள் என்று காலாகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளைத் தனியார்மயம் என்கிற பெயரில் அரசு ஒன்றன்பின் ஒன்றாகக் கைகழுவுவதைப் பற்றிய விவாதத்திற்கு நாம் இப்போது வரவில்லை. ஆனால், கல்வி வரி என்கிற பெயரில் வசூலிக்கப்படும் மக்கள் வரிப்பணம், முறையாகச் செலவிடப்பட்டிருந்தால், செலவிடப்பட்ட பணம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணித்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காதே என்பதுதான் நமது ஆதங்கம்.
 2005-06 நிதியாண்டில் 2,555 கோடி ரூபாயாக இருந்த அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கான (சர்வ சிக்ஷô அபியான்) நிதி ஒதுக்கீடு, கடந்த ஏழு ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து கடந்த 2012-13 நிதியாண்டில் 25,555 கோடி ரூபாயாக மூன்று மடங்கிலும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. மத்திய அரசின் கல்விக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 2012-13 நிதியாண்டுக்கு மட்டும் எவ்வளவு தெரியுமா? ரூ. 74,056 கோடி!
 அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் அதிகம் பயனடைவது கிராமப்புற இந்தியாவாகத்தான் இருக்க முடியும். இந்தத் திட்டத்தின்படி, ஏறத்தாழ 40% ஆசிரியர்களுக்கும், 36% பள்ளிக்கூடக் கட்டமைப்பு வசதிகளுக்கும், 14% மாணவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. தொடக்கக் கல்வி பெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு ரூ. 4,269 ஒதுக்குகிறது. ஊட்டச் சத்துடன் கூடிய மதிய உணவும் வழங்கப்படுகிறது.
 இத்தனைக்குப் பிறகும், தொடக்கக் கல்வி பெறும் குழந்தைகளுக்கு அரிச்சுவடி வாய்ப்பாடு தெரியவில்லை, ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவனுக்கு இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தைப் படிக்கத் தெரியவில்லை என்றால், நமது வரிப்பணம் எங்கே வீணாகிறது, எப்படி வீணாகிறது? இந்தத் திட்டங்கள் எல்லாம் கோடிகளைக் கபளீகரம் செய்வதற்காகத்தானே தவிர, தெருக்கோடியில் இருக்கும் அடித்தட்டு வர்க்கத்தின் குழந்தைகளுக்கு முறையாகக் கல்வி புகட்டுவதற்கு அல்ல போலிருக்கிறதே!
 ""நூறு குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்ந்தால் அவர்களில் ஐம்பது பேர் மட்டுமே ஆறாம் வகுப்புக்கு வருகிறார்கள். ஐம்பது பேர் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். ஆறாம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள் பத்தாம் வகுப்புக்கு வரும்போது 35 குழந்தைகளே படிக்கிறார்கள். காரணம், ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வருவதற்குள் அவர்களில் பலர் தேர்வில் வெற்றிபெற முடியாமல் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். பிளஸ் டூ வரும்போது வெறும் 30 குழந்தைகளே படிக்கிறார்கள். அதாவது ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த 100 குழந்தைகளில் 70 பேர் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள்.
 பிளஸ் டூ-க்குப் பிறகு இடைநிலை பட்டப்படிப்பு (பி.ஏ., பி.எஸ்சி.) படிக்க 15 பேர் வருகிறார்கள். முதுநிலை படிக்க (எம்.ஏ., எம்.எஸ்சி.) வெறும் 7 அல்லது 8 பேரே வருகிறார்கள். ஆக, மொத்தம் ஒன்றாவதில் சேர்ந்த 100 குழந்தைகளில் 92 பேர் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை வருவதில்லை. இது இந்தியா முழுவதும் உள்ள நிலைமை'' என்று சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் கவிஞர் பாரதி கிருஷ்ணகுமார் வெளியிட்ட தகவல், "அசர்' அமைப்பின் புள்ளிவிவரத்தைவிட அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
 அடிப்படைக் கல்வியே சரியில்லை. திறமையான ஆசிரியர்கள் இல்லை. இந்த லட்சணத்தில், வீதிக்கு வீதி பொறியியல் கல்லூரிகளும், உயர்கல்வி நிறுவனங்களும் தனியாரால் தொடங்கப்படுகின்றன. பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்க மத்திய அரசு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் யாரை ஏமாற்ற நினைக்கிறோம்?
Posted by Unknown at 8:56:00 AM No comments:

பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் ஆலோசனை மையம்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடமாடும் ஆலோசனை மையம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் எற்படுத்தப்படவுள்ளது.
பள்ளி மாணவர்கள் சற்றுப்புறச்சூழல், குடும்ப நிலை, இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மனச்சோர்வு, மனக்குழப்பம், பாலியல் கொடுமைகள், மதிப்பெண் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவால் கொலை, தற்கொலை உள்ளிட்ட முரண்பாடான முடிவுகளை எடுப்பதுடன் உடல் மற்றும் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையை மாற்றி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழலை உருவாக்க, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வகையில் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
Posted by Unknown at 8:49:00 AM No comments:

Monday, February 04, 2013

10 DAYS HMS TRAINING CANCELLED

 தலைமை ஆசிரியர்களுக்கான 10 நாள் பயிற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது 
Posted by Unknown at 11:08:00 PM No comments:

Sunday, February 03, 2013

ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி

சென்னை: ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான, தகுதி தேர்வு, கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்தது. தகுதி மதிப்பெண், 60 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்டோர், சொற்ப அளவிலே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, 15 பேர், ஐகோர்ட்டில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தி, சலுகை காட்டுமாறு, கல்வித் துறைக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் என, கோரப்பட்டது.
இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி, சந்துரு பிறப்பித்த உத்தரவு:முதலாவதாக நடந்த தகுதி தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்ததால், இரண்டாவதாக, தகுதி தேர்வை, அரசு நடத்தியது.
இரண்டாவது தேர்விலும், மனுதாரர்கள் தேர்ச்சி பெறவில்லை. மற்ற மாநிலங்களில், தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால், இங்கும் வழங்க வேண்டும் என, கோருகின்றனர்.
மற்ற மாநிலங்களில் சலுகைகள் வழங்குவது, தமிழகத்தை கட்டுப்படுத்தாது. குழந்தைகளுக்கு, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களின் கல்வி தரத்தில், எந்த சமரசத்துக்கும் இடமில்லை என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை, பரிசீலிக்க விரும்பவில்லை. கல்வி தரத்தை குறைக்கும் வகையில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவதற்கு, அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி, சந்துரு உத்தரவிட்டுள்ளார்
Posted by Unknown at 9:13:00 AM No comments:

Saturday, February 02, 2013

சுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட்


மதுரை மாவட்டம் அய்யப்பன் நாயக்கன் பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வழக்கமாய் காலை 9.30 மணிக்கு துவங்கும், ஆனால் 8 மணிக்கே ஒருவரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
அவர்தான் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கில்பர்ட்(47).
மதுரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கொண்டுவந்த பாடபுத்தக குறிப்புகள் மற்றும் மதிய உணவு ஆகியவற்றை கொண்டு போய் தனது மேஜையில் வைத்துவிட்டு வெளியே வருகிறார்.
அடுத்த ஒரு மணி நேரம் அதாவது பள்ளி திறப்பதற்கு (காலை 9.30) அரை மணி நேரம் முன்புவரை, அவர் பம்பரமாக சுழன்று செய்யும் வேலைகள்தான் அவர் பற்றி இந்த கட்டுரை எழுத தூண்டுகோள்.
ஆமாம், கையில் ஒரு விளக்குமாறும், வாளி நிறைய தண்ணீரும் எடுத்துக் கொண்டு மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்கிறார், பின்னர் வகுப்பறைகளில் குப்பை கூளங்கள் இல்லாமல் பெருக்கி எடுக்கிறார், பள்ளி வளாகத்தில் பேப்பர் எதுவும் இல்லாமல் சுத்தம் செய்கிறார். இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், பள்ளியின் கழிப்பறை முதல் வகுப்பறை வரை பளீச்சென சுத்தமாக இருக்கிறது.
கை,கால் முகம் கழுவி தன்னை தலைமையாசிரியர் இருக்கையில் அமர்வதற்கும் பள்ளியின் இதர ஆசிரியர்கள், மாணவர்கள் வருவதற்கும் நேரம் சரியாக இருக்கிறது.
சுத்தம் சிறிதுமின்றி பல அரசு பள்ளிகள் இருக்கும் போது, இவரது பள்ளி மட்டும் எப்படி இவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது பலருக்கு ஆச்சர்யம், இதற்கு காரணம் தலைமை ஆசிரியரான கில்பர்ட்தான் என்பதே பலருக்கும் தெரியாது, அது தெரியவும் வேண்டாம் என்கிறார் கில்பர்ட்.
மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவரான கில்பர்ட், என்ன படிப்பது, எப்படி வாழ்க்கையை கொண்டு செல்வது என்பது தெரியாமல் இருந்தபோது முன்பின் தெரியாத பாதர் லூர்துசாமி என்பவர் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் இவருக்கு செய்திட்ட உதவியே இவரை ஆசிரியராக்கியது.
எப்போது ஆசிரியரானாரோ அப்போதே கில்பர்ட் ஒரு முடிவு செய்தார்.
முன்பின் தெரியாத தனக்கு எப்படி ஒருவர் உதவினாரோ, அதே போல நாமும் பலரது முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கவேண்டும் என்று. ஆசிரியராக இருந்து கொண்டு என்ன செய்யமுடியுமோ அதைச் செய்வது என்றும் முடிவு செய்தார்.
தனது சம்பளத்தில் ஒரு பங்கை ஒதுக்கி பொருளாதாரம் காரணமாக பள்ளியில் படிக்க முடியாமல் நின்ற குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து அவர்களை செலவு செய்து படிக்க வைக்கிறார்.
பள்ளி வளாகத்தில் மிட்டாய் விற்கும் மூதாட்டியின் குழந்தைகள் உள்பட்ட வறுமையான குடும்பத்து குழந்தைகளின் மொத்த படிப்பு செலவை ஏற்றுக் கொண்டு படிக்க வைக்கிறார்.
இவரைப் பொறுத்தவரை எந்த குழந்தையுமே படிக்காமல் இருக்கக்கூடாது. தொடர்ந்து மூன்று நாள் ஒரு மாணவன் வகுப்பிற்கு வராவிட்டால், என்னாச்சோ என்று அந்த மாணவனது வீட்டிற்கு தேடிப்போய் பார்த்து, சம்பந்தபட்ட மாணவன் பிரச்னையை தீர்த்து , வகுப்பிற்கு தொடர்ந்து வரும்படி பார்த்துக் கொள்வார்.
எப்போதுமே வீட்டில் இருந்து தனக்கு போக மேலும் இரண்டு பேருக்கு சாப்பாடு கொண்டு வருவார், அவசரத்தில் சாப்பாடு கொண்டு வராமல் வந்துவிடும் பிள்ளைகளுக்கு கொண்டுவந்த கூடுதல் சாப்பாடை கொடுத்துவிடுவார். தன்னிடம் கூடுதலாக ஒரு நூறு ரூபாய் இருந்தால் கூட போதும் உடனே அந்த நூறு ரூபாய்க்கு மிக்சர் போன்ற நொறுக்குத்தீனி வாங்கிவரச் செய்து , குழந்தைகளிடம் வழங்கி மகிழ்ச்சியடைவார். இவரது வீட்டிற்கு உறவினர்கள் வாங்கிவரும் இனிப்பு, காரத்தைக் கூட பள்ளிக்கு கொண்டுவந்து பகிர்ந்து கொள்வார். விசேஷ நாட்களில் வீட்டில் செய்யும் விசேஷ உணவுகளும் பள்ளி குழந்தைகளுக்குதான்.
வெறும் உணவு மட்டுமின்றி அவ்வப்போது ஜாமெண்ட்ரி பாக்ஸ், பேனா, ஸ்கூல் பேக் போன்றவைகளையும் வாங்கி கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்துவார். மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளார்.
இவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்த போது, இவரே வலிய போய் தனக்கு ஏதாவது ஒரு சின்ன கிராமத்தில் வேலை போட்டு கொடுங்கள் என்று கேட்டு அதன்படி கம்மாளபட்டி என்ற கிராம பள்ளிக்குதான் வேலை வாங்கிச் சென்றார். அதே போல பணிமாறுதல் வரும்போதும் ஏதாவது கிராமத்தில் உள்ள பள்ளிக்கே மாற்றிக்கொடுங்கள் என்று கேட்டு வாங்கிச் செல்வார். அந்த வகையில் இப்போது சோழவந்தானை அடுத்துள்ள அய்யப்பநாயக்கன்பட்டியில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார்.
பள்ளிக்கூடத்திற்கு வந்துட்டா அவங்கெல்லாம் நம்ம பிள்ளைங்க, நம்ம பிள்ளைங்க இருக்கிற இந்த இடத்தை கோயில் மாதிரி வைச்சுக்கணும்னு சக ஆசிரியர்களிடம் சொல்லி அவர்களது ஒத்துழைப்போடு பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிறார்.
எல்லாம் சரி கழிப்பறையை சுத்தம் செய்வது என்பதை ஒரு சிலர் கேலியாக நினைப்பார்களே என்றதும், "யார் கேலியாக நினைத்தால் எனக்கென்ன, என் மனசு சொல்கிறது, நான் செய்வது சரிதான் என்று. அது போதும் பிறகு ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் என்னுடைய பள்ளி என்று இல்லை எந்த அரசு ஆரம்பபள்ளியிலும் கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு என்று தனி சுகாதார பணியாளர் கிடையாது, ஒன்று மாணவர்கள் சுத்தம் செய்யவேண்டும், அல்லது ஆசிரியர்கள் சுத்தம் செய்யவேண்டும், பெரும்பாலான பள்ளியில் மாணவர்களை வைத்து சுத்தம் செய்வார்கள் எனக்கு அதில் உடன்பாடு இல்லை, சக ஆசிரியர்களை, மற்ற வேலைகள் சொல்லலாம் கழிப்பறை சுத்தம் செய்யுங்கள் என்று சொல்லமுடியாது ஆகவே நானே கழிப்பறை சுத்தம் செய்யும் பணியில் இறங்கிவிட்டேன், எனக்கு இதில் எந்த தயக்கமும் கிடையாது. மாறாக நிறைய மனத் திருப்திதான் உண்டாகிறது.' என்கிறார் சாந்தமாக.
பள்ளிக்குழந்தைகள் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களே ஏதாவது விசேஷ காரணம் உண்டா? என்றபோது ,"எனக்கு ஒரு முறை உடல் நிலை மோசமானபோது பள்ளி குழந்தைகள்தான் கண்ணீர்விட்டு அழுது பிரார்த்தனை செய்தனர், அவர்களது பிரார்த்தனையால்தான் நான் இன்று உயிருடன் இருப்பதாக எண்ணுகிறேன். இப்படி உயிர் கொடுத்த குழந்தைகளுக்கு நான் ஒன்றும் அதிகமாக செய்யவில்லை, என் கடமையையையும், கூடுதலாக என் நன்றிக்கடனையும் செலுத்துகிறேன்'' அவ்வளவுதான் என்ற தலைமை ஆசிரியர் கில்பர்ட் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவரும்கூட, எவ்வளவோ வற்புறுத்தி கேட்டு கொண்டும் கூட கழிப்பறையை சுத்தம் செய்வது போன்ற போட்டோ எடுக்க ஒத்துக் கொள்ளவில்லை, மேலும் இது எனக்கான மனதிருப்திக்காக செய்கிறேன், ஆகவே பிறர் வாழ்த்த வேண்டும், பாராட்ட வேண்டும் என்று ஒரு போதும் நினைப்பது கிடையாது, எப்போதுமே மற்றவர்களை முன்விட்டு கடைசி ஆளாக நிற்பவன் நான் ஆகவே எனது போன் நம்பரும் வேண்டாம் என்று கூறிவிட்டார். உங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையை உங்களுக்கு முன்னால் போக விடுங்கள் அது போதும் உலகம் அன்பு மயமாகும் என்பதை தனது வேண்டுகோளாக குறிப்பிடும்படி மெத்த பணிவுடன் கூறிவிடைகொடுத்தார்.

- எல்.முருகராஜ்


--

Posted by Unknown at 10:37:00 PM No comments:

உயிரோட்டமுள்ள ஆசிரியர்களே, உயிரூட்ட வாருங்கள்'

உயிரோட்டமுள்ள ஆசிரியர்களே, உயிரூட்ட வாருங்கள்' 

""குடும்பத்துக்கு ஆணி வேர் தாய் என்பதைபோல், சமூகத்துக்கு தாய் ஆசிரியர்கள்,'' என சென்னை ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த சுவாமி விமூர்த்தானந்தர் பேசினார்.விவேகானந்தா சேவாலயம் சார்பில், ஆசிரியர்களுக்கான புத்துணர்வு முகாம், திருப்பூரில் நேற்று நடந்தது. விவேகானந்தா சேவாலயம் நிர்வாகி செந்தில்நாதன் தலைமை வகித்தார். "உயிரோட்டமுள்ள ஆசிரியர்களே, உயிரூட்ட வாருங்கள்' என்ற தலைப்பில், சென்னை ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த, சுவாமி விமூர்த்தானந்தர் பேசியதாவது

கடும் வறட்சி நிலவும்போது, மண்ணில் உயிரினங்கள் இல்லாததுபோல் வறண்டு காணப்படும்; மழை பெய்தால், பல செடிகள் வளரும்; உயிரினங்கள் கண்ணில் தெரியும். 

வறட்சி காலத்தில், அவை, உயிரோட்டமுடன் பூமிக்குள் இருந்து, மகிழ்ச்சி கிடைத்ததும் உயிரோட்டத்தை பெறுகிறது.அதுபோலவே, உங்களிடத்திலும் திறமை உள்ளது. அவற்றை, சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு இன்றைய சூழ்நிலையில் புறச்சூழல்களால்பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றை எதிர்கொள்ளும் அபரிமிதமான ஆற்றலும் உண்டு என்பதை உணர வேண்டும்.உயிரோட்டமுள்ள ஆசிரியரால் உற்சாகமுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும். பலவீனங்களை தள்ளிவிட்டு, உடல் அளவிலும், மனதளவிலும் உற்சாகத்துடன் இருந்தால், உயிரோட்டமுள்ள மாணவர்களை ஈர்க்க முடியும். நல்ல மாணவர்களை உருவாக்கும் படைப்பாற்றல் ஆசிரியர்களுக்கு உண்டு. ஆசிரியப்பணி என்பது, இயந்திரத்தனமானதல்ல; மாணவர்களை உணர்வு 
ரீதியாக நேசிக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான அணுகுமுறையும், தன்னம்பிக்கையும் வேண்டும்.பள்ளி என்பது ஆசிரியர்கள் ஆடு மேய்த்தலை போலவும், மாணவர்களுக்கு சிறையாகவும், பெற்றோருக்கு விளையாட்டு திடலாகவும் காட்சியளிக்கிறது. வீட்டில்மகிழ்வாக இருக்கும் மாணவர்கள், பள்ளிக்கு வந்தால் சோர்வாகி விடுகின்றனர்.

மாணவர்களை ஈர்க்கும் ஆசிரியர்களாக, தினம், தினம் ஒரு புதிய தகவலை தருவதோடு, ஆர்வம், மொழி நடை, சிரித்த முகம், சிறிதளவு நகைச்சுவை உணர்வுடன், மாணவர்களை அணுகினால் போதும். ஆசிரியரை பிடித்தால், அந்த பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் மீது கோபப்படாமல், அன்பும்,நம்பிக்கையும் காட்டுங்கள்.சிறந்த சமுதாயத்தையும், சிறந்த நாட்டையும் அமைப்பது ஆசிரியர்களின் பொறுப்பு; குடும்பத்துக்கு ஆணி வேர் தாய்; சமூகத்துக்கு தாய் ஆசிரியர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மாணவர்களைவசீகரிக்கும் குணத்தை பெறுங்கள்; மாணவன் மூளை உங்கள்வசப்படும்,இவ்வாறு, அவர் பேசினார்.


--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Posted by Unknown at 5:12:00 PM No comments:

தலைமை ஆசிரியர்களுக்கு 10 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.



தொடக்கக்கல்வியில், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு 10 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.


தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் அதிகரிப்பால், அரசு தொடக்கக் கல்வித்துறையில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதாக,புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நடப்புக் கல்வியாண்டில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நிர்வாக ரீதியில் செயல்படும், தொடக்கக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு தரமான கல்வி, சேர்க்கையை அதிகரிப்பது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், இப்பயிற்சி, பிப்.,5 முதல் 19 வரை நடக்கிறது.சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள்.ஏ.இ.ஓ.க்கள்.மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், அரசின் புதிய உத்தரவு பற்றிய பயிற்சியை அளிக்க உள்ளனர்.
Posted by Unknown at 4:58:00 PM No comments:

டில்லியில் நாடாளு மன்றம் முன்பு ஏப்ரல் 4ஆம் தேதி மறியலில் ஈடுபட அகில இந்திய ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது


இடஒதுக்கீடு கொள்கைக்கு முரணான ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி டில்லியில் போராட்டம்
ஈரோடு, பிப். 1-நாடு முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டில்லியில் நாடாளு மன்றம் முன்பு ஏப்ரல் 4ஆம் தேதி மறியலில் ஈடுபட அகில இந்திய ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. மறியலில் தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் முத்துராமசாமி கூறிய தாவது: பீகார், உத்தரபிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் 9ஆம் வகுப்பு மற்றும் எஸ்எஸ்எல்சி., முடித்தவர்கள் ஒப்பந்த பாரா ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற ஆசிரியர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கட்டாயம் தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு சரியானது தான். அதன் அடிப்படையில் தான் அந்தந்த மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தேவையில்லாதது. ஏனெனில், தமிழகத்தி லுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதிக்கான பட்டம் மற்றும் பட்டயப்படிப்பை முடித்தவர்களே ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு முரண்பாடானது.

தமிழகம் போன்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை கட்டாயம் ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 6ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களையும் வலி யுறுத்தி ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி டில்லியில் நாடாளுமன்றம் முன் எங்களது தலைமை இயக்கமான அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய பொது செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் மறியல் போராட்டம் நடக் கிறது. மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு முத்துராமசாமி தெரிவித்தார்.
Samaruldhas Samuel ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு தேவையே இல்லை.பயிற்சி பெறாதவர்களுக்கு அதை நடத்தட்டு
Ramesh Uma Pathi அகில இந்தியப் பொதுச்செயலாளர் திருமிகு ஈசுவரன் அவர்கள் மிகச்சிறந்த கல்வியாளர். உலகக் கல்விக் கழகத்தின் துணைத் தலைவராகவும் சார்க் ஆசிரியர் அமைப்பின் ஒருமித்த செயலாளராகவும் உயர்ந்த பதவிகளை வகிப்பவர். இவர் உலகிலுள்ள அனைத்து நாடுகளின் கல்வி முறையையும் நன்குஅறிந்தவர். இந்திய அரசின் கல்விக் குழுவில் உறுப்பினராக இருந்து பல விதிகளை வரையறுத்துக் கொடுத்தவர். வருடத்தில் 200 நாட்கள் வெளிநாடுகளுக்குக் கல்விப்பயணம் மேற்கொள்பவர். கல்விமுறை சார்ந்த அக்கறையிலும் ஆசிரியப் பேரினத்தின் நலம் விரும்புவதிலும் அனுபவத்திலும் அறிவிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இவரே இந்தப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார் என்றால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆசிரியர்கள் பெருமளவில் டெல்லி செல்ல வேண்டும். போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அதிகபட்ச ஆதரவினைத் தெரிவிக்க வேண்டும்
Posted by Unknown at 4:46:00 PM No comments:

Friday, February 01, 2013

கருவூலங்க்கள் கணினிமயம்: ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்



பிப்ரவரி 01,2013,07:32 IST


கருவூலகங்களில் உள்ள சம்பள பில்கள் அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது.ஆசிரியர்கள் பணி நியமனத்தின் போது, அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் , சம்பளம்வழங்குவதற்கான அனுமதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.விருதுநகர்: கருவூலகங்கள் கம்ப்யூட்டர் மயமாவதால், பழைய அரசு ஆணைகள் தேவைப்படுகிறது. இது, இல்லாத பட்சத்தில், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

கடந்த 1980க்கு முன் உள்ள பள்ளிகளில், ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக ஆசிரியர்நியமித்தும், சம்பளம் வழங்க அனுமதியளித்தும், அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தஉத்தரவின் படி, பள்ளிகளிலே சம்பள பில் தயாரித்து, கருவூலகங்களுக்கு அனுப்பப்படும்.
இதை அதிகாரிகள் ஆய்வு செய்து, இ.சி.எஸ்., முறையில் நிதி விடுவித்து, அந்தந்த ஆசிரியர்கள்கணக்கில் வரவு வைக்கப்படும். ஆசிரியர்களும் வங்கி கணக்கில் இருந்து, ஏ.டி.எம்., கார்டுமூலமாக சம்பளம் பெற்று வந்தனர்.
இந்நிலையில், கருவூலகங்கள் யாவும் கம்ப்யூட்டர் மயமாவதால், சம்பள அனுமதி வழங்கியஒரிஜினல் அரசு உத்தரவு வழங்கும் படி, ஆசிரியர்களிடம் கேட்டு வருகின்றனர். ஆசிரியர்களோ,நிலையாக ஒரே பள்ளியில் இல்லாமல், ஆண்டுக்காண்டு இட மாறுதல் பெற்று, பணிபுரிந்துவருகின்றனர்.
இந்த உத்தரவோ பள்ளிகளில் முறையாக பாதுகாக்கப்படாமல், உத்தரவு கடிதங்கள் அனைத்தும்நைந்து, சிதைந்து விட்டன. பழைய உத்தரவு இல்லாததால், சம்பள பில் வழங்க முடியாது என,கருவூலகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது, பழைய உத்தரவு நகல்கள் இல்லாததால், ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
Posted by Unknown at 9:13:00 AM No comments:

"தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது"



பிப்ரவரி 01,2013,07:46 IST


திருநெல்வேலி மாவட்டம், சுப்பானூர் இந்து நடுநிலை பள்ளி,குலசேகரம்பட்டி பொன்னுச்சாமி துவக்க பள்ளி, புதுக்குடிமுருகா துவக்க பள்ளி, சொக்கம்பட்டி ஹரிஜன் துவக்கபள்ளி செயலர்கள் தாக்கல் செய்த மனுக்கள்:மதுரை: "லட்சக்கணக்கானோர் படித்து விட்டு, வேலையின்றி காத்திருக்கின்றனர். இந்நிலையில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, தகுதித் தேர்வு நடத்த வேண்டியுள்ளது. தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது" என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

எங்கள் பள்ளிகளில், 2011-12ம் கல்வியாண்டில், ஆசிரியர்காலிப் பணியிடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என,மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பித்தோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் என, தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளதாக,துவக்கக் கல்வி அலுவலர் தெரிவித்தார். இதை, கல்வியாண்டு துவங்கும் முன்பே தெரிவித்திருக்கவேண்டும். தாமதமாக தகவல் தெரிவித்தனர். அரசின் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டனர். நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன், மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் ஒரு சுற்றறிக்கையில், "ஆசிரியர்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, பணி நியமனம் செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முதலில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். மாவட்ட பதிவு மூப்பின்படி பணி நியமனம் கூடாது; மாநிலபதிவு மூப்பின்படி நியமிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், "தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களைத் தான், பட்டதாரிஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்" என, நிபந்தனை விதித்துள்ளது. மாணவர்களுக்கு கட்டாயக்கல்வி அவசியம். அதைவிட, தரமான கல்வி அவசியம். பதிவு மூப்பு அடிப்படையில், தகுதியானஆசிரியர்களை நியமிக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட், "தரமான கல்வியை வழங்க முடியாத, அரசு உதவி பெறும் பள்ளிகளைகளையெடுக்க வேண்டும்" என, அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்களுக்கு,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, ஐந்து ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஜூன், 1ல், கல்வியாண்டு துவங்கியது. ஆசிரியர் தகுதித் தேர்வு, 2012 ஜூலை, 12ல்நடந்துள்ளது. அதையே காரணமாகக் கொண்டு, தகுதி இல்லாதவர்களை ஆசிரியர்களாக நியமிக்கமுடியாது. ஒரு, "வெப்சைட்"டில், "தமிழகத்தில், 685 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் உள்ளன;அவற்றில், 73 ஆயிரம் பேர் படிக்கின்றனர்" என, தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, லட்கணக்கானோர் படித்து, வேலையின்றி காத்திருக்கின்றனர். இந்நிலையில்,தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, தகுதித்தேர்வு நடத்த வேண்டியுள்ளது. ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்திய தகுதித் தேர்வில், 7.14 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
இதில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். பட்டம் பெற்றிருந்தால் மட்டும், அவரை பணியில் அமர்த்தமுடியாது. தகுதியானவர்களை, வேலையில் நியமிக்க வேண்டும். மனுக்கள் தள்ளுபடிசெய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Posted by Unknown at 9:08:00 AM No comments:
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

LEARN ONLINE SPOKEN ENGLISH

  • CLICK HERE AND START YOUR SPOKEN ENGLISH CLASS

CPS PRELIMINARY LEDGER

  • CPS CREDIT VOUCHER ABSTRACT

AEEO PANEL SENIORITY LIST

  • MIDDLE HMS TO AEEO PANEL DOWNLOAD HERE

பகிர்வோம்

share

Share

உலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூர்

  • உலகத் தமிழாசிரியர் மாநாடு

CCE GRADING RESULT SHEET FOR THE YEAR END RESULTS

  • CCE RESULT SHEET 2012-2013

SCHOOL CENSUS FREE DOWNLOAD

  • பள்ளி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான பள்ளி மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் எக்செல் பார்மெட்டில் தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .

APPLICATION TO GET PASSPORT FOR ELEMENTARY TEACHERS

  • PASSPORT APPLICATION

CHECK YOUR TIME

தகவல்களை உடனுக்குடன் SMS மூலம் பெற

  • இங்கே கிளிக் செய்யவும்

CCE தரநிலை தேடி அலைய வேண்டாம்

  • புதிது
  • மூன்று பருவங்களுக்கும் ஒருங்கிணைந்த பட்டியல்
  • CCE மதிப்பெண் பட்டியல் தரநிலை உள்ளீடு செய்யப்பட்டது பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
  • செந்தமிழ் எழுத்துரு பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

asiriyarkural

Loading...

World Teachers' Day 2012

Loading...

இந்தத் வலைதளத்தை பார்வையிட்ட அன்பர்கள்

இந்த வலைப்பக்கத்தை உங்களுக்காக வடிவமைத்து கொண்டிருப்பவர்

Unknown
View my complete profile

இந்த வலைப்பூவை பார்த்தவர்கள்

உங்கள் நேரத்தை சரி பாருங்கள்

ஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்

Loading...

ஆசிரியர் கூட்டணி

Loading...

Translate

Welcome Tamilnadu Teachers Friendly Blog

Loading...

தினமலர் செய்திகள்

Loading...

சமீபத்திய பதிவுகள்

RECENT POSTS

உங்கள் சிந்தனைக்கு.....

கல்வி என்பது...விவேகானந்தரின் வாக்கு



கல்வி என்பது தகவல்களை மூளையில் ஏற்றிக் கொண்டு அசை போடாமல் அங்கேயே அடங்கிக் கிடப்பது அல்ல. நல்ல மனிதர்களை உருவாக்குகிற, நல்வாழ்க்கை தரும் சிந்தனைகளின் சங்கமமாக கல்வி இருக்க வேண்டும். ஐந்து நல்ல சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றையே உங்கள் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் - ஒரு நூலகத்தையே கரைத்துக் குடித்ததை விட அதுவே மிகப் பெரிய கல்வி. - விவேகானந்தர்

மாவட்டத் தலைவர்

மாவட்டத் தலைவர்
ப. முருகபாஸ்கரன் திருமருகல் 9443651770

இன்று ஒரு திருக்குறள்

மாவட்டச் செயலாளர்

மாவட்டச் செயலாளர்
மு. லெட்சுமி நாராயணன் நாகப்பட்டினம் 9443526696

CCE RECORDS printable

மாவட்டப் பொருளாளர்

மாவட்டப் பொருளாளர்
திரு.தங்க.மோகன்

BLUE PRINT & QUESTION PAPER MODEL FOR 1ST TERM

  • முதல் வகுப்பு
  • இரண்டாம் வகுப்பு
  • மூன்றாம் வகுப்பு
  • நான்காம் வகுப்பு
  • ஐந்தாம் வகுப்பு
  • ஆறாம் வகுப்பு
  • ஏழாம் வகுப்பு
  • எட்டாம் வகுப்பு

மாநில செயற்குழு உறுப்பினர்

மாநில செயற்குழு உறுப்பினர்
கோ. இராமகிருஷ்ணன் வேதாரண்யம் 9842957285

மாநில செயற்குழு குழு உறுப்பினர்

மாநில செயற்குழு குழு  உறுப்பினர்
சி. பிரபா நாகப்பட்டினம் 9865787653

மாவட்டத் துணைத் தலைவர்

மாவட்டத் துணைத் தலைவர்
ச.இராஜராஜன் சீர்காழி

மாவட்டத் துணைத் தலைவர் (மகளிர்)

மாவட்டத் துணைத் தலைவர் (மகளிர்)
திருமதி . வெ.ஜெயந்தி நாகப்பட்டினம் 9443825385

மாவட்டத் துணைச் செயலாளர்

மாவட்டத் துணைச் செயலாளர்
மா. சித்தார்த்தன் நாகப்பட்டினம் 9443601720

மாவட்டத் துணைச் செயலாளர் மகளிர்

மாவட்டத் துணைச் செயலாளர்   மகளிர்
இரா. நீலா புவனேஸ்வரி நாகப்பட்டினம் 9789330034

ஆசிரியர் தகுதித்தேர்வு விடைகள் 2012

  • இங்கே சொடுக்கவும்

நாட்காட்டி

Slider (DO NOT EDIT HERE!)

Main Menu(DO NOT EDIT HERE!)

tamilnadu

Popular Posts

  • Important updates to our Privacy Policy
    Read the updated policy in full         ...
  • Updates to our Terms of Service and Privacy Policy
     ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ...
  • SCHOOL CENSUS EXCEL SHEET FREE DOWNLOAD
    பள்ளி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான பள்ளி மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் எக்செல் பார்மெட்டில் தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .  தக...
  • மாஸ்டர் வா ராமுண்ணி
    மாஸ்டர் வா ராமுண்ணி
  • WELCOME TO PANI NIRAIVU PARATTU VIZHA
  • chief minister photos
  • G.O 264 REGARDING MORNING SCHOOL PRAYER ONLY ON MONDAYS
  • வாழ்த்துகிறோம்
    வாழ்த்துகிறோம்  எங்கள் முன்னாள் வட்டாரத் தலைவரும் சங்கமங்கலம் பள்ளி தலைமை ஆசிரியருமான திரு. மா. ரவி அவர்கள் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒ...
  • BILL PASSED FOR GOVERNMENT TAKING OVER ANNAMALAI UNIVERSITY
    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்கும் மசோதா நிறைவேறியது By  dn, சென்னை First Published :  17 May 2013 04:46 AM IST புகைப்...
  • thiruvarur photos

Educational thoughts

  • By Eraa. edwin

IMPROVE YOUR ENGLSIH

  • HOW TO SAY
  • DICTATION
  • PHONICS STORIES
  • PHONETICS
  • WORD PRONUNCIATION
கூட்டணி சின்னம் அகில இந்திய ஆசிரியர்கூட்டணி சின்னம் இரும்பு மனிதர் ஜே.எஸ். ஆர். திருமிகு. ஈஸ்வரன் மாஸ்டர் இயக்கக் கொடி மாநிலத் தலைவர் பொதுச் செயலாளர் மாநிலப் பொருளாளர்

CCE SOFTWARE PROVIDED BY SSA -FREE DOWNLOAD

  • மாணவர்களுக்கு CCE முறையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள SOFTWARE இதனை தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். தகவலிறக்கம் செய்தபின் வானவில் அவ்வையார் எழுத்துருவை செய்யவும் தகவல்களை உள்ளீடு செய்ய REVIEW TAB இல் கிளிக் செய்து பின்பு UNPROTECT SHEET கிளிக் செய்யவும். பின்பு (SHIFT)+SSA என்று டைப் செய்யவும். இதை ஒவ்வொரு SHEET க்கும் செய்யவும்

TO DOWNLOAD English communication FA(A) FA(B) for primary classes

  • TO DOWNLOAD English communication FA(A) FA(B) for primary classes CLICK HERE

FACEBOOK

Follow this blog

INSPECTION REPORT FOR MIDDLE AND PRIMARY SCHOOLS

  • CLICK HERE TO DOWNLOAD PDF FORMAT

GEO COUNT


widgeo.net

பள்ளிக்கல்விக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளம்

  • DOWNLOADS FROM DIRECTOR OF ELEMENTARY EDUCATION
  • இங்கே கிளிக் செய்யவும்

இணைப்புகள்

  • EDUCATION INTERNATIONAL WEBSITE
  • பள்ளிக்கல்வித்துறை
  • ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி
  • இசையில் நனையுங்கள்
  • கூட்டணி நாகை வட்டார இணையதளம்
  • எனது இணையதளம்
  • எனது facebook இணைப்பு

தமிழ் கம்ப்யூட்டர் நண்பன்

Loading...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Loading...

இயக்கக் காணொளி

அரசாணைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்

Loading...

SMS மூலம் தகவல் பெறுங்கள்

ஆசிரியர்கள் அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து
START 0என்று டைப் செய்து1909என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.
பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

--

TESTF KILVELUR

Loading...

THOTTIAM

Loading...

நீங்கள் way2sms கணக்கு தொடர வேண்டுமா ? குழு sms மூலம் நிறைய நபர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டுமா?

  • இங்கே கிளிக் செய்யவும்

தேதி வாரியாக பதிவுகளை பாருங்கள்

  • December 2019 (1)
  • June 2019 (1)
  • April 2018 (1)
  • January 2018 (1)
  • June 2017 (2)
  • May 2017 (1)
  • March 2017 (1)
  • February 2017 (1)
  • October 2016 (2)
  • June 2016 (1)
  • May 2016 (3)
  • April 2016 (4)
  • January 2016 (16)
  • December 2015 (37)
  • November 2015 (35)
  • October 2015 (31)
  • September 2015 (29)
  • August 2015 (22)
  • July 2015 (12)
  • June 2015 (11)
  • May 2015 (11)
  • April 2015 (10)
  • March 2015 (13)
  • February 2015 (10)
  • January 2015 (29)
  • December 2014 (16)
  • November 2014 (32)
  • October 2014 (23)
  • September 2014 (43)
  • August 2014 (49)
  • July 2014 (34)
  • June 2014 (55)
  • May 2014 (37)
  • April 2014 (28)
  • March 2014 (33)
  • February 2014 (54)
  • January 2014 (71)
  • December 2013 (72)
  • November 2013 (68)
  • October 2013 (69)
  • September 2013 (63)
  • August 2013 (125)
  • July 2013 (120)
  • June 2013 (118)
  • May 2013 (117)
  • April 2013 (106)
  • March 2013 (65)
  • February 2013 (63)
  • January 2013 (65)
  • December 2012 (56)
  • November 2012 (64)
  • October 2012 (48)
  • September 2012 (67)
  • August 2012 (61)
  • July 2012 (49)
  • June 2012 (54)
  • May 2012 (66)
  • April 2012 (29)
  • March 2012 (13)
  • February 2012 (18)
  • January 2012 (9)
  • December 2011 (37)
  • November 2011 (12)
  • October 2011 (7)
  • September 2011 (28)

கூட்டணி தொடர்பான வலைத்தளங்கள்

  • WWW.TESTFCUDDALORE.BLOGSPOT.IN
  • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-அதிகாரபூர்வ வலைத்தளம்
  • www.testfinkilvelur.blogspot.in

ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 2012

  • முதல் தாள் முடிவுகள்
  • இரண்டாம் தாள் முடிவுகள்
  • இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல்
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல்

கூட்டணி புகைப்படங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்

  • ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

Loading...

கூட்டணி தலைப்பு செய்திகள்

இசையில் நனையுங்கள்

Search

Social Bookmarking

Followers

Pages

  • Home

Popular Posts

  • Important updates to our Privacy Policy
    Read the updated policy in full         ...
  • Updates to our Terms of Service and Privacy Policy
     ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ...
  • SCHOOL CENSUS EXCEL SHEET FREE DOWNLOAD
    பள்ளி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான பள்ளி மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் எக்செல் பார்மெட்டில் தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .  தக...
  • மாஸ்டர் வா ராமுண்ணி
    மாஸ்டர் வா ராமுண்ணி
  • WELCOME TO PANI NIRAIVU PARATTU VIZHA
  • chief minister photos
  • G.O 264 REGARDING MORNING SCHOOL PRAYER ONLY ON MONDAYS
  • வாழ்த்துகிறோம்
    வாழ்த்துகிறோம்  எங்கள் முன்னாள் வட்டாரத் தலைவரும் சங்கமங்கலம் பள்ளி தலைமை ஆசிரியருமான திரு. மா. ரவி அவர்கள் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒ...
  • BILL PASSED FOR GOVERNMENT TAKING OVER ANNAMALAI UNIVERSITY
    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்கும் மசோதா நிறைவேறியது By  dn, சென்னை First Published :  17 May 2013 04:46 AM IST புகைப்...
  • thiruvarur photos
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக் கிளைக்கு சொந்தமானது. Travel theme. Powered by Blogger.