Pages

Wednesday, November 27, 2013

பீகாரில் தகுதித் தேர்வு: 10 ஆயிரம் ஆசிரியர்கள் 5-ம் வகுப்பு கணிதம்-இந்தி பாடத்தில் பெயில்
 
பீகாரில் தகுதித் தேர்வு: 10 ஆயிரம் ஆசிரியர்கள் 5-ம் வகுப்பு கணிதம்-இந்தி பாடத்தில் பெயில்
பாட்னா, நவ. 27-

பீகார் மாநிலத்தில் பள்ளிகளில் கல்வித்தரம் மோசமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு முதல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 5-ம் வகுப்பு வரையிலான ஆங்கிலம், கணிதம், இந்தி மற்றும் பொது அறிவு பாடத்திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், கணிதம் மற்றும் இந்தி தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். 

இதுதொடர்பாக கல்வித்துறை செயலாளர் அமர்ஜீத் சின்கா கூறியதாவது:-

தகுதித் தேர்வு எழுதியவர்களில் 24 சதவீத ஆசிரியர்கள் தோல்வியடைந்துள்ளனர். 43 ஆயிரத்து 447 பேரில் 32 ஆயிரத்து 833 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர்கள் தங்கள் திறனை நிரூபிக்காவிட்டால், தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லது வேலையை விடவேண்டும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 

அதன்படி முதல் முறை தகுதித் தேர்வில் தோல்வியடைந்தால், மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படும். இரண்டாவது முறையும் தோல்வியடைந்தால் அரசு விதிகளின்படி அவர்கள் வேலையை இழக்க நேரிடும். இவ்வாறு இரண்டு வாய்ப்புகளையும் வீணடித்த ஆசிரியர்களை கணக்கெடுத்து அதன்பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, November 20, 2013

தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 16,600 பேருக்கு விரைவில் பணி நியமனம்

தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 16,600 பேருக்கு விரைவில் பணி நியமனம்