SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, January 31, 2015

மாணவர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு


ஜனவரி 31,2015,11:19 IST




திருப்பூர்: பள்ளி மாணவர்களிடம் டெங்கு நோய் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவியதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மாணவர்கள் மத்தியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உத்தரவில் கூறியிருப்பதாவது: பள்ளிகளின் சுகாதாரம் குறித்து, தலைமை ஆசிரியர்கள் ஆய்வறிக்கை தயாரித்து, முதன்மை கல்வி அலுவலரிடம் பிப்., 8க்குள் ஒப்படைக்க வேண்டும். பள்ளி, வீடுகளில், திறந்தவெளியில் தண்ணீர் தேங்கக்கூடாது.
இதுதொடர்பாக, இறைவணக்கம் பாடும் நேரங்களில், மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். சுற்றுச்சுவர் அருகே தண்ணீர் தேங்கியிருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும். பள்ளி வளாகத்தில் கொசுத்தொல்லை இருந்தால், சுகாதாரத்துறையை அழைத்து துப்புரவு பணி செய்யவேண்டும். மாணவர்களுக்கு, சுகாதாரமான குடிநீர் பள்ளிகளில் வழங்க வேண்டும்.
கழிப்பறையை, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். சத்துணவு கூடங்களில் கழிவு, தண்ணீர் தேங்குவது கூடாது. டெங்கு நோய் பாதிப்பு, கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார நடவடிக்கை குறித்த அறிவிப்பு பலகை, விழிப்புணர்வு பதாகைகள் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதை கட்டாயம் வைக்குமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
தங்கள் வீடுகளுக்கு அருகில் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், காலி டயர், தேங்காய் தொட்டி போன்றவை தேங்காமல் அகற்றுமாறு, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நோய் பாதிப்பு அறிகுறி தெரிந்தால், அம்மாணவர் அல்லது மாணவியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.
டெங்கு நோய் குறித்து பள்ளிகளில் மாணவ, மாணவியர் மத்தியில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுகுறித்த தகவல் அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக, பள்ளி கல்வித்துறைக்கு விரைவில் அனுப்ப வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, January 28, 2015

தரமான கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்: ரோசய்யா

தரமான கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்: ரோசய்யா

First Published : 23 January 2015 12:09 PM IST
பள்ளிகள் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிப்பதன் மூலமே நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என்று, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.
கோவை அருகேயுள்ள கருமத்தம்பட்டி கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற வெள்ளி விழாவில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கலந்துகொண்டார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பிரபு தலைமை தாங்கினார். கோயமுத்தூர் கேந்திரா பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.கொங்கு வேளாளர் அறக்கட்டளைத் தலைவர் ஆர்.பொன்னுசாமி, செயலாளர் ஆர்.சின்னசாமி, பொருளாளர் எஸ்.கே.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.
கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.கலைவாணன் வரவேற்றார். பள்ளியின் முதல்வரும் கோவை மெட்ரிக் பள்ளிகளில் சிறந்த முதல்வர் விருதைப் பெற்றவருமான வசந்தி பால்ராஜ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
தமிழக ஆளுநர் ரோசய்யா விழாவில் பேசியது: கோவை மாநகர் நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது. ஜி.டி.நாயுடு, என்.மகாலிங்கம், பி.ஆர். ராமகிருஷ்ணன் போன்றோர் இம்மாவட்டத்தை முன்னிலைப்படுத்த பெரும் பங்காற்றியுள்ளனர். விவசாயம், கல்வி, தொழில் ஆகியவற்றில் கோவை மாவட்டம் பெரு வளர்ச்சியடைந்துள்ளது பெருமைக்குரிய விஷயம்.
1990-களில் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி மென்மேலும் வளர்ந்து மாணவர்களின் கல்வி வேட்கையைத் தீர்க்க வேண்டும். பள்ளிகள் தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும். கல்வியோடு மட்டுமல்லாது மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் நல் ஒழுக்கத்தையும் கற்றுத்தந்து நாட்டின் சிறந்த குடிமக்களை உருவாக்க வேண்டுமென்றார்.
பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், சிறந்த பள்ளி என்பது மதிப்பெண் அதிகம் வாங்கும் பள்ளியன்று. சமுதாயத்திற்கு சிறந்த மாணவர்களை வழங்குவதாகும் என்றார். மேலும், மாணவர்களுக்கு உபயோகமான கல்வி முறையை அரசு வகுக்க வேண்டும். அதுவே வலிமையான பாரதத்தை அமைக்க உதவும் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பிரபு பேசுகையில், புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும், கணினி மூலம் அறிவை வளர்த்துக் கொள்வதைவிட புத்தகத்தைப் படிக்கும் பழக்கத்தின் மூலம் சிறந்த அறிவாற்றலையும் ஞாபக சக்தியையும் பெறலாம் என்றார்.
பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி எம்.திவ்யபிரபா நன்றி கூறினார்.

Tuesday, January 27, 2015

அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்!ஜனவரி 27,2015,10:59 IST

எழுத்தின் அளவு :
சென்னை: அரசு விழாக்களின்போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில், அரசு பள்ளி மாணவர்களை புறக்கணித்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் வெட்டவெளிச்சமாகி உள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புறக்கணிப்பு ஏன்?
தமிழகத்தில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டிற்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதற்கு, தனியார் பள்ளிகளின் கல்வித்தரம், ஒழுக்கம், பல்திறன் வெளிப்பாடு என, பெற்றோர் மத்தியில் கவர்ச்சிகரமான பல விஷயங்கள் காணப்படுகின்றன.
இந்த சூழலுக்கு, அரசு பள்ளிகளும் மாறவேண்டிய காலகட்டத்தில், விழிப்புணர்வு என்ற பெயரில் துண்டு பிரசுரம் வினியோகிப்பது மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அரசு எடுக்கும் நடவடிக்கையாக உள்ளது. போட்டிகள் நிறைந்த உலகில் கல்வி, அறிவியல், விளையாட்டு, கலை என, பல வகைகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளால் போட்டி போட முடிவதில்லை.
அதற்கான முயற்சிகளும் அரசு பள்ளிகள் தரப்பில் எடுக்கப்படுவதில்லை. இப்படி முடங்கும் அரசு பள்ளிகளை, அரசும் கைகொடுத்து தூக்கி விட தயாராக இல்லை என்பதை, தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சுதந்திர, குடியரசு தினவிழாக்களின் கலை நிகழ்ச்சிகள் அம்பலமாக்கி வருகின்றன.
* நேற்று(ஜனவரி 26) சென்னை தலைமை செயலகத்தில் நடந்த, குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சிகளில், ஒரு அரசு பள்ளி மட்டுமே இடம் பெற்றிருந்தது.
* சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளில், ஒரு அரசு பள்ளி கூட இடம் பெறவில்லை. ஆனால், சென்னை மாவட்டத்தில், 27 அரசு பள்ளிகள், 10 அரசு ஆதி திராவிடர் நல பள்ளிகள், மழலையர் பள்ளிகள் உட்பட, 314 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வாகவே உள்ளது.
கலை நிகழ்ச்சிகளில் அசத்தும் திறன், அரசு பள்ளி மாணவர்களுக்கு இல்லையா? அல்லது அவர்களை தயார்படுத்தும் திறன் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், அரசு பள்ளிகளை பார்க்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை எப்படி அரசு பள்ளிகளில் மனமுவந்து சேர்ப்பர் என்பதே பொதுவான கேள்வியாக உள்ளது.
கலை நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படுவது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத பொதுத்துறை அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடியரசு, சுதந்திர தின விழாக்கள் மட்டுமின்றி, பொதுவான அரசு விழா கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள பள்ளிகளை வரவேற்கிறோம். ஆனால், தனியார் பள்ளிகள் அளவிற்கு, அரசு பள்ளிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு பள்ளி கல்வித்துறைதான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் முன்வந்து, மாணவர்களை களம் இறக்கினால், நாங்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாட போகிறோம்? இவ்வாறு, அந்த அதிகாரி கேள்வி எழுப்பினார்.
வாய்ப்பு கிடைப்பதில்லை
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கூலி தொழிலாளிகள் கூட, தங்கள் குழந்தைகள் கலர் சட்டை அணிந்து, வேடங்கள் அணிந்து, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விரும்புகின்றனர். இது மாணவர்களின் திறனை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும். அப்படி ஒரு வாய்ப்பு பெரும்பாலான அரசு பள்ளிகளில் கிடைப்பது இல்லை.
இதற்கு முதலில் பள்ளிகளையும், அரசு பள்ளி ஆசிரியர்களையும் தான் தயார்படுத்த வேண்டும். அவர்கள் தயாராக இருந்தால்தானே, மாணவர்களை இதுபோன்ற விஷயங்களுக்கு தயார்படுத்த முடியும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.
மாநகராட்சி விதிவிலக்கு!
சென்னை மாநகராட்சியில் நடைபெறும் எந்த ஒரு விழாவிற்கும், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. இதுவரை மாநகராட்சி விழாக்களில் தனியார் பள்ளிகளுக்கு இடம் அளிக்கப்பட்டதில்லை. நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் கூட ஆறு கலை நிகழ்ச்சிகள், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரை கொண்டே நடத்தப்பட்டது.

Monday, January 26, 2015

ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்: கல்வித்துறை அமைச்சர்

ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்: கல்வித்துறை அமைச்சர்

First Published : 23 January 2015 02:17 PM IST
கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக இருக்கும் 11,200 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தகுதித் தேர்வில் 23 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் திறமையானவர்களைக் கண்டறிந்து பணி நியமனம் செய்வதற்காக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதற்காக அறிவிக்கை இன்னும் 10 நாள்களில் வெளியாகும். இதன்மூலம், 11,200 பணியிடங்கள் நிரப்பப்படும்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். சில நேரங்களில் இணையதளம் சரியாக செயல்படாததால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காண்போம்.
அரசு அங்கீகாரம் பெறாமல் நடத்தப்பட்டு வந்த தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை குறித்து பெற்றோர்களுக்கு உரிய தகவல்களை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

மாணவர் சேர்க்கை: முறைப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில் 

First Published : 26 January 2015 02:22 PM IST
விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கான முடிவுகளே முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் தொடங்கி விட்டன.
சில பள்ளிகளில் கடந்த திசம்பர் மாதமே மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ&இந்தியன் ஆகிய பாடத் திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏப்ரல்& மே மாதங்களில் தான் மேற்கொள்ளப் பட வேண்டும். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய(சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மார்ச் மாதத்திற்குப் பிறகு தான் விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள்: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்
மாணவர் சேர்க்கைத் தொடங்கும். மெட்ரிக் பள்ளிகளில்  ஏப்ரல்     4 &ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் கூட வழங்கக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் இம்மாதம் 03 ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனியார் பள்ளிகள் இப்போதிலிருந்தே மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்காக முதல்நாள் இரவிலிருந்தே பள்ளிக்கூட வாசலில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பெற்றோர்கள்      காத்துக் கிடக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.
அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு விண்ணப்பத்திற்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற பள்ளிகளில் நன்கொடை, கட்டிட நிதி என பல்வேறு  பெயர்களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை பிடுங்கப்படுகிறது. இதுதவிர கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.50,000 முதல் ரூ.75 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. பல பள்ளிகளில் மழலையர் வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்காக அக்குழந்தைகளிடமும், அவர்களின்  பெற்றோர்களிடமும் நேர்காணலும், ஆண்டு வருவாய் குறித்த விசாரணையும் நடக்கின்றன.
இந்த விதிமீறல்களும், கல்விக் கட்டணக் கொள்ளைகளும் வெளிப்படையாகவே நடக்கும் போதிலும் இதையெல்லாம் தமிழக அரசு கண்டு கொள்வதில்லை என்பது தான் வருத்தம் அளிக்கும் உண்மை ஆகும். அது என்ன மாயமோ.... மந்திரமோ.... அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் இதுவரையிலான 45 மாதங்களில் ஒரு பள்ளி மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எந்த பள்ளியும் தவறே செய்யவில்லை என்று கூறமுடியாது. தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை வெளிப்படையாகவே நடப்பது அனைவருக்கும்  தெரிகிறது. அதன் பிறகும் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாததன் மர்மத்தை அரசு தான் விளக்க வேண்டும்.
விதிகளை மீறும் பள்ளிகள் மீதும், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள் மீதும் பெற்றோர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், பல இடங்களில் பள்ளி நிர்வாகங்கள் மீது புகார் கொடுத்த பெற்றோர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, கண்ணுக்கு நேராக கட்டணக் கொள்ளை நடைபெறும் போது பெற்றோர் புகார் கொடுத்தால் மட்டும் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி அரசு அதன் கடமைக் கண்ணை மூடிக்கொள்வது பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயலாகும்.
தவறு செய்யும் பள்ளி நிர்வாகங்களைக் காப்பாற்றும் நோக்கம் கொண்ட தமிழக அரசின் இந்த அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. தனியார் பள்ளிகளின் விதிமீறல்கள் மற்றும் கட்டணக் கொள்ளைக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கல்வித் துறை என்ற அமைப்பு இருந்தாலும் அது ஊழலில் திளைக்கிறது; செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
தனியார் பள்ளிகளில் இப்போதே மாணவர் சேர்க்கை நடத்தி 100% இடங்களும் நிரப்பப்படுவதால் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அருகமைப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் பறி போகின்றன. இது ஏழைக் குழந்தைகளின் கல்வி பெறும் உரிமையை பறிக்கும் செயலாகும். இதைத் தடுக்க அனைத்து மாநிலப் பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளில் ஏப்ரல் மாதத்திலும், மத்தியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மார்ச் மாதத்திலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
 ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் இன்றி அனைவருக்கும் இடம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கல்வி மாவட்ட அளவில் ஒற்றைச் சாளர முறையில் பள்ளிக் கல்வித்துறையே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்; பள்ளிக்கு அருகில் எவ்வளவு தொலைவில் மாணவர்கள் வசிக்கிறார்கள் என்பது மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான ஒற்றை அளவீடாக இருக்க வேண்டும்; இந்த விதிமுறைகளை ஏற்காத பள்ளிகளை அரசே ஏற்று நடத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் தயங்கக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: யுனிசெப்

ஜனவரி 25,2015,14:07 IST

ஐக்கிய நாடுகள்: பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில், அதிக முன்னேற்றம் அடைந்திருப்பது இந்தியா தான். கடந்த 2000 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளில், 1.6 கோடி குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
புள்ளி விவரம்:

’யுனெஸ்கோ’ எனப்படும், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு மற்றும் ’யுனிசெப்’ எனப்படும், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2000 - 2012 வரை, தெற்காசியாவில், பள்ளி செல்லா குழந்தைகளாக இருந்தவர்களில், 2.3 கோடி பேர், பள்ளிகளில் காலடி எடுத்து வைத்துள்ளனர்; அவர்களில், 1.6 கோடி பேர் இந்திய குழந்தைகள் என்பது மகிழ்ச்சியான செய்தி. 

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பிற முக்கிய தகவல்களாவன:

* இந்தியாவில், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கையில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், இன்னமும், 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமலேயே உள்ளன.

* உலகில், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு, சிறிய நாடுகளின் பங்களிப்பு தான் அதிகம்.

* அல்ஜீரியா, புருண்டி, கம்போடியா, கானா, இந்தியா, ஈரான், மொராக்கோ, நேபாளம் போன்ற, 42 நாடுகளில், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, இந்த, 12 ஆண்டுகளில், பாதியளவு குறைந்துள்ளது.

10 சதவீத சிறுமியர்

* எனினும், 2012ல், உலகம் முழுவதும் உள்ள சிறுவர், சிறுமியரில், 8 சதவீத சிறுவர்களும், 10 சதவீத சிறுமியரும் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். அதாவது, 5.8 கோடி சிறுவர்; 3.1 கோடி சிறுமியர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளது. பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பது, உண்மையில் அதிர்ச்சிகரமான தகவலே.

குறைப்பது எப்படி?

பள்ளி செல்லும் வயதில், பள்ளிகளில் காலடி எடுத்து வைக்காமல் உள்ள குழந்தைகளை ஈர்க்கும் விதமாக, பல வித திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, யுனிசெப் அறிவுறுத்தியுள்ளது.

* பள்ளிகளில் கட்டணங்கள் இருக்கக் கூடாது.

* பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டும்.

* குழந்தைகளின் பெற்றோருக்கு, பண உதவி வழங்கலாம்.

Saturday, January 24, 2015

dinamani article about exempting teachers from paying income tax

dinamani article about exempting teachers from paying income tax


clip

சலுகையல்ல, அங்கீகாரம்...

First Published : 24 January 2015 03:00 AM IST
மில்லியன் என்பது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல. குறிப்பாக, 135 மில்லியன் மக்கள் (13 கோடியே 50 இலட்சம் மக்கள்) என்றால் அதனுடைய முக்கியத்துவம் இன்னும் அதிகம்.
மோரீஷஸ், சுரிநாம், புருனே, டோங்கா போன்ற 50 நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட இது அதிகம். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலுள்ள மக்கள் தொகையின் கூடுதலைவிட அல்லது கனடா மக்கள் தொகையின் மூன்று மடங்கைவிட இது அதிகம்.
ஆனால், கல்வியாளர்களுக்கு, எனக்கு, அந்த எண்ணிக்கை தொடக்க மற்றும் அடிப்படைப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கையைத்தான் நினைவுபடுத்துகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வி ஆண்டு அறிக்கையின் புள்ளி விவரங்கள் சில முக்கிய பிரச்னைகளை எழுப்புகின்றன. அதிகமான குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளனர், பள்ளிக்கு வருகின்றனர் என்கின்ற நல்ல செய்திகளுக்கிடையே கவலையளிக்கும் ஒரு செய்தியும் இருக்கிறது.
ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பில் படிக்கும் 5.5 கோடி குழந்தைகளிடையே, எழுத்துகளை இன்னதென்று கண்டறிய முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 13% லிருந்து 32% வரை அதிகரித்திருக்கிறது.
அதுபோலவே, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய வகுப்புகளில் பயிலும் எட்டு கோடி மாணவர்களிடையே 50% மாணவர்கள் அடிப்படைக் கணிதத்தில் இன்னும் கூடுதல் பயிற்சி பெற வேண்டியவர்களாக உள்ளனர். அவர்களின் வாசிக்கும் திறன் போதுமானதாக இல்லை.
ஆசிரியர் பற்றாக்குறையினால் உயர்கல்வித் துறையில் நிலவும் நெருக்கடி பற்றி, சொல்லாமலிருப்பதே மேல். நம் பள்ளி முறை, தர அடிப்படையில் அமைந்துள்ளது. இது ஒவ்வொரு வகுப்பிலும் கற்க வேண்டிய கல்வியைப் புறக்கணிக்கிறது.
கல்லூரிச் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டால், அவை கல்லூரியை விட்டு வெளியே செல்வதற்காக இருக்கிறதே தவிர, தகுந்த தொழிலுக்கோ வேலைக்கோ மாணவர்களை தயார்படுத்துவதாக இல்லை.
இதை உடனே மாற்றிவிட முடியாதுதான். ஆனால், கல்வித் துறையில் தலைமை தாங்கும் ஆசிரிய - ஆசிரியைகள் மனது வைத்து முனைப்புடன் செயல்பட்டால் இதனைக் கவனித்து சரி செய்துவிட முடியும்.
சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஆசிரியர்களுக்குப் போதிய சம்பளம் இருக்கவில்லை. வாழ்க்கை வசதிகள் கிடையாது. பணி நிரந்தரம், ஓய்வூதியம் என்று எதுவும் கிடையாது.
ஆனாலும், அவர்கள் தனிப் பயிற்சி (டியூஷன்) எடுக்கவில்லை. தனது மாணவ - மாணவியருக்குத் தனி கவனம் செலுத்திப் பாடம் புகட்டினார்கள்.
வீட்டில் வறுமை இருந்தாலும், ஆசிரியர் பணிக்கு வெளியுலகில் கெüரவம் இருந்தது. வருங்கால சந்ததியரை உருவாக்குகிறோம் என்கிற கடமை உணர்வும், பெருமிதமும் அவர்களுக்கு இருந்தன.
ஆசிரியப் பணி என்பது சேவையாகவும், ஆசிரியர்கள் தெய்வீகமானவர்களாகவும் கருதப்பட்ட காலம் அது. இன்று அப்படியில்லை.
இன்றைய ஆசிரியர்களுக்கு அவர்களது பணி என்பது ஏனைய அலுவலகப் பணிகளைப் போன்ற ஒன்றாகத்தான் தெரிகிறது. இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தி, நல்ல தரமான மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்களை சமுதாயம், அதாவது, அரசு அங்கீகரித்து அவர்களது பணியை "தேச சேவை'யாக ஏற்றுக் கொள்கிறது என்கிற உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். அதற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுகள் மட்டுமே போதாது.
பிரதமர் மோடி உணர்ச்சி ததும்பும் தன்னுடைய ஆசிரியர் தின உரையில் ஆசிரியர் தொழிலுக்குப் புத்துயிர் ஊட்ட விரும்புவதாகச் சூளுரைத்தார். உலகத்திற்கு ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து தரப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அது மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கக்கூடிய லட்சியப் பார்வையாகும். அதற்குத் தகுந்த செயல்பாட்டுத் தலையீடு வேண்டும். என்.சி.டி.ஈ (NC​TE)​ இதில் முனைப்போடு இறங்கி உள்ளது.
சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதன் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலைப் பட்டப் படிப்புத் திட்டம் ஓர் ஆக்கப்பூர்வ நடவடிக்கை ஆகும். இதன்மூலம், இளைஞர்களை ஆரம்பத்திலேயே கவர முடியும்.
வழக்குரைஞர்கள், மருத்துவர்களைப் போல ஆசிரியர்களும் தொழில்முறைக் கல்வி பயில இது வழிகோலும். ஒரு பல்கலைக்கழகம் பலத்த போராட்டத்துக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பை ஆரம்பித்தது போன்ற முயற்சி இது.
அத்தகைய செயல்படும் கல்வித் துறையின் புதிய திட்டத்திற்கு மாறுதலை உண்டாக்கக் கூடிய அளவிற்கு நிதி உதவி அவசியமாகிறது.
நிதித் துறையின் தன்னிச்சை அதிகாரத்தினால், கடந்த எட்டு ஆண்டுகளில் பெரு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.40 லட்சம் கோடி வரியானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதனால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியை சிலர் பாராட்டுகிறார்கள். சிலர் குறை கூறுகிறார்கள். அது போகட்டும். பெரு நிறுவனங்களுக்கு அளித்தது போன்ற குபேர வரிச் சலுகையை ஆசிரியப் பெருமக்களுக்குத் தர வேண்டியதில்லை. ஒரு குசேல சலுகையாவது ஆசிரியர்களுக்குத் தரப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
அதன் மூலம், ஆசிரியர் சமுதாயமே புத்துணர்வுடன் பிரதமர் மோடி விரும்பும் புதிய இந்தியாவைப் படைக்க முனைப்புடன் செயல்படும் என்றால், ஏன் ஆசிரியர்களுக்கு அதுபோன்ற சலுகையை அரசு தரக்கூடாது?
ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்குவதுடன் வரி விலக்கும் வழங்கப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. பெரு நிறுவனங்களுக்கு வரி விலக்குகள் அளிப்பது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவில்லையா?
அதுபோல ஆசிரியர்களுக்கு வரி விலக்குகள் அளிக்கப்பட்டால், அது அறிவு வளர்ச்சிக்கு உதவும் தானே? இதைச் செய்வதால் அரசுக்குப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடப் போவதில்லை.
ஆசிரியர் துறையில் அதிருப்தி வளர்ந்து வருகிறது. ஆசிரியராக விரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கை அரிதாகி வருகிறது. நல்ல ஆசிரியர்கள் இல்லாமல் நல்ல மாணவர்களை எப்படி உருவாக்க முடியும்?
ஆசிரியர் பணியில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வத்தை மீட்டெடுத்தாக வேண்டும். அதற்குக் கையாளப்பட வேண்டிய பல வழிகளில் ஒன்று வரிச் சலுகை.
இந்தப் புனிதத் தொழிலுக்கு வருமான வரி விதிப்பை மொத்தமாகக் கைவிடும் கொள்கை (100% I‌n​c‌o‌m‌e Ta‌x ‌r‌e​b​a‌t‌e)​​ ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அடையாளமாக இருக்கும்.
தவிர, பிரதமர் இந்த புனிதப் பணியின் மீது கொண்டுள்ள அக்கறையையும் அது வெளிப்படுத்தும். ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயமே பிரதமரின் கனவை நனவாக்க முனைப்புடன் செயல்படும்.
ஆசிரியர்கள் தங்களுக்கு பொறுப்பு இல்லாத இலவச சலுகை கிடைப்பதை விரும்புவதில்லை. இது கவனத்திற்குரியது. எனவே, இந்த முழு வருமான வரிச் சலுகை, "ஆண்டு கல்வி அறிக்கை' ​(A‌n‌n‌u​a‌l Ac​a‌d‌e‌m‌ic R‌e‌t‌u‌r‌n)​ஒன்றை ஒவ்வொரு ஆசிரியரும் தாமாகவே முன்வந்து கணினி மூலமாக அளிப்பதன் அடிப்படையில் அமைக்கலாம்.
ஆசிரியர்களின் ஆண்டு அறிக்கை நான்கு பரிமாணங்களைக் கொண்டிருக்க வேண்டும். அவை மாணவர் கல்வி, தன் முன்னேற்றம், நிறுவன வளர்ச்சி, சமுதாய சேவை என்பன ஆகும். இந்த அறிக்கையை தேவை அடிப்படையிலும் பரிசீலனையும் செய்யலாம்.
நிறைவேற்றக்கூடிய இலக்குகளை எந்த ஆசிரியர் அடையவில்லையோ அவர் 100 சதவீத வரிச் சலுகைக்கு அருகதையற்றவர்.
மேலும், இத்தகைய (AAR)​  சமர்ப்பிப்பதில் எந்தவிதமான ஊழலும் இல்லாத அளவிற்கு ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது என்பது இன்றைய கணினி வளர்ச்சியில் சாத்தியமானதே.
மக்கள் தொகையில் செழுமையூட்டி ஆதாயம் உண்டாக்குவது ஆசிரியர் கைகளில் உள்ளது. அவர்கள் அறிவு வல்லமையைத் தருபவர்கள். வருமான வரி விலக்கு என்பது அவர்களது புனிதமான சேவைக்கு சமுதாயம் தரும் அங்கீகாரம், அவ்வளவே.
நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வர இருக்கும் நிதிநிலை அறிக்கையில், சிறப்பு அறிவிப்பாக ஆசிரியர்களுக்கு வருமான வரி விலக்கு என்கிற அறிவிப்பு வருமானால், அது இந்திய சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கக்கூடும்.
பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிப்பது குபேரர்களுக்குக் கிடைக்கும் கொள்ளை லாபம். ஆசிரியர்களுக்குத் தரப்படும் வருமான வரிச் சலுகை என்பது குசேலர்களின் பிடி அவல்!
கட்டுரையாளர்: தலைவர், திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை, சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

Monday, January 19, 2015

திறன் மதிப்பீட்டு படிவம் தலைமை ஆசிரியர்& ஆசிரியர்களிடம் கருத்து வேற்றுமையை உருவாக்குகிறது சங்கத்தினர் குற்றச்சாட்டு



நாகை,ஜன.19:
எந்த அரசுத்துறையிலும் இல்லாத வகையில், திறன் மதிப்பீட்டு படிவத்தை கொடுத்து தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கும் அனைவருக்கும் கல்வி இயக்கக முடிவை திரும்ப பெற வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாகை வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட் டார பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் லெட்சுமி நாராய ணன் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் பாலசண்முகம் தீர்மானங்களை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக நகர செய லாளர் தாமோதரன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், எந்த அரசுத்துறையிலும் இல்லாத வகையில், திறன் மதிப்பீட்டு படிவத்தை கொடுத்து தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கும் போக்கை அனைவருக்கும் கல்வி இயக்கக முடிவை திரும்ப பெற வேண்டும். நாகை உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, நலநிதி முன்பணம் உள்ளிட்ட பணப்பயன்கள் வழங்குவதில் ஏற்படும் காலத்தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களை கேட்டு கொள்வது, வடுகச்சேரி மற்றும் அந்தணப்பேட்டை ஆணிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிலுவை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உள்ளது. இத் தொகையை ஒருவார காலத்திற்குள் வழங்க நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களை கேட்டு கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டார பொரு ளாளர் தனுசுமணி நன்றி கூறினார்.

Sunday, January 18, 2015

தினமணி தலையங்கம் பற்றி உங்கள் கருத்துகள்?

clip

மாணவர்களுக்கு பாராட்டு

clip

தினமணி தலையங்கம் பற்றி வாசகர் கருத்துகள்

  • Magizhnan
    17-01-2015 | 22:58:48
    ஆசிரியர்கள் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடவேண்டும் என்றும் தனித்தனியாக அக்கறை எடுத்து கற்பிக்கவேண்டும் எனவும் தலையங்கம் கூறுகிறது காலியாக உள்ள பல்லாயிரகணக்கான பணியிடங்களை நிரப்பினால் ஆசிரியரின் யோசனையை செயல்படுத்தலாம் இந்த கட்டுரையை படித்துவிட்டு என் உடலையே கிள்ளி பார்த்துக்கொண்டேன் முதன்முறையாக தினமணி அரசு பள்ளிகளை பாராட்டியிருக்கிறது அதுவும் தலையங்கத்தின் கடைசி பாரா சூப்பர்.15-1-2015 தேதி டைம்ஸ் நாளிதழில் இதே ப்ராதம் தன்னார்வ நிறுவனம் இன்னொரு புள்ளிவிவரத்தையும் வெளியிட்டுள்ளது 2010ஆம் வருடம் அரசு பள்ளியில் பயிலும் இரண்டாம் வகுப்பு மாணவர்களில் தமிழ்,ஆங்கில எழுத்துகளை படிக்ககூடியவர்களின் சதவீதம் 75 ஆக இருந்தது இந்த சதவீதம் 2014இல் 76 ஆக உயர்ந்துள்ளது அதே கால கட்டத்தில் தனியார் பள்ளிகளில் இந்த சதவீதம் 85 லிருந்து 79 ஆக சரிந்துள்ளது புற்றீசல் போல தனியார் பள்ளிகள் பெருகிவருவதும் பயிற்சி பெறாத ஆசிரியர்களை தனியார் பள்ளிகள் குறைந்த சம்பளத்தில் பணிக்கமர்த்தி கல்லா கட்டுவதுதான் காரணம்
    • Share
  • சிவ.தணிகாசலம், நாமக்கல்கவிஞர் பேரவை, நாமக்கல்
    17-01-2015 | 21:02:18
    மத்திய அரசின் "அனைவருக்கும் கல்வி" என்கிற திட்டமே, இந்தியா முழுவதும் எட்டாம் வகுப்புவரை படிப்பவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி தருகிறது. பத்தாம்வகுப்பு வரை "அனைவருக்கும் இலவசக் கல்வி" என்பதை முதலில் நடைமுறைப்படுத்திவிட்டுப் பிறகு, பத்தாம்வகுப்பு வரை "அனைவருக்கும் கட்டாயக் கல்வி" என்பதைச் சட்டமாக்கவேண்டும். அவற்றை ஒழுங்காக நடைமுறைப்படுத்தவேண்டும். அதன்பிறகே பத்தாம்வகுப்பு வரை "அனைவருக்கும் தரமான கல்வி" என்பதைப் பல்வேறு ஆணையங்கள்மூலம் மத்திய அரசு கட்டுப்படுத்தமுடியும். தற்போது தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை ஓரளவுக்குக் கண்காணிப்பது பெற்றோர் ஆசிரியர் கழகங்களே! போதுமான சட்டங்களியற்றிய பின்னர் அப்பணியைப் பல்வேறு கல்வியாளர் குழுக்கள், தன்னார்வலர் குழுக்கள் அடங்கிய ஆணையங்கள் மூலம் கட்டுப்படுத்தமுடியும்.
    • Share
  • Karthik
    17-01-2015 | 15:10:59
    மொழி என்பது ஒரு குழந்தைக்கு மனதில் மட்டும் பதிந்து irupathu இல்லை, அக்குழந்தையின் பெற்றோர் மூலம் கிடைத்த மரபு அணுக்களிலும் பதிந்துள்ளது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஒரு குழந்தை பிறந்தவுடன் முதலில் அதன் தாய் மொழயில் பயிற்சி கொடுத்து,கற்றுத்தேர்ந்தபின் பிறமொழிகள் எதைவேண்டுமானாலும் எளிதாக கற்றுக்கொடுத்துவிடலம். ஒரு கட்டிடம் நன்றாக கட்டவேண்டுமானால் அஸ்திவாரம் முழுமையாக கட்டப்படிருக்க வேண்டும், அதேபோல ஒரு குழந்தை அதன் தாய் மொழியில் பேச,எழுத,படிக்க முழு அளவில் தேர்ந்து இருக்கவேண்டும் அப்படி ஒரு குழந்தை கற்கும்பட்சதில் அந்தக்குழந்தையின் கற்கும் திறன் முழுமையாக மேம்படும். நம் நாட்டுமக்களின் அறியாமை மற்றும் மோகம் அழியும் வரை நாம் அரைகுறைகளாகவே இருப்போம்!
    • 1
    • Share
  • Murthy
    17-01-2015 | 14:44:18
    சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த கற்கும், கற்பிக்கும் தரம் இன்று இல்லாமல் போனதன் காரணம் ஆட்சிகள்தான், அதாவது கழக ஆட்சிகள். எதில்தான் அரசியல் என்றில்லாமல், "சாமானியனுக்கு" உதவுவதாக பாவனை செய்துகொண்டு அவனைப் படுகுழியிலே தள்ளிவிட்டுவிட்டார்கள். தரமான கல்வியை வழங்காமல் 8-ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' எதற்கு? வசதியானவன் தனியார் பள்ளியில் கற்றுத் தேருகிறான்; இல்லாதவன் முன்னேறும் வாய்ப்பை இழக்கிறான். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. முன்பு அரசு பள்ளிகளிலே கற்றவர்கள் பல அரசு துறைகளின் பணியாற்றும் நிலைக்கு உயர்ந்தார்கள்; ஆனால், இன்று அது சாத்தியம் இல்லை. இன்றைய அரசு பள்ளி மாணவர்களின் தேவை 'தரம் பாஸ்' அன்று, தரமான கல்வி.
    • 1
    • Share
  • C As B Balchandhar
    17-01-2015 | 14:14:02
    When I was a student in the year 1952 - 1967 the education system was excellent. Good english, excellent tamil and what not. We even afraid of our class teachers even in colleges where we studied, but now ?????? Teachers worked and taught us various cultures of TN and there was no TASMAC. Now you can't see a teacher or a student without this. Nadir in education system is because of politicians and teaching methods also. Unless and otherwise this is changed you can't expect any improvement in the life of students. In those days people used to say rather proudly that INDIA IS BEING RULED BY 3 Ts i.e., HIGH EDUCATIONISTS AND IAS AND IPS WERE FROM TIRUCHY, TANJORE AND TIRUNELVELI DISTRICTS ALL THESE 3 Ts ARE ERSTWHILE UNDIVIDED DISTRICTS IN TN. But now ????
    • Share
  • Raji Dhanabal
    17-01-2015 | 12:14:37
    ஒருகாலத்தில் தமிழக அரசுப்பள்ளிகளில் கற்றவர்கள்தான் அரசின் பல்வேறு துறைகளையும் திறம்பட நிர்வாகம் செய்தனர் என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால் இன்று அரசுப்பள்ளிகள் தரம் தாழ்ந்து போனதற்கும்,கற்பித்தல் திறன் குறைந்து போனதற்கும்,மாணவர்களின் வாசிப்பு திறன் அதல பாதாளத்திற்கு சென்றதற்கும் காரணம் கல்வித்துறையின் ஊழல்,திறமையின்மை, மெத்தனம் என்றால் அது மிகையல்ல. மொத்தத்தில் அரசுத்துறைகளில் படிந்துள்ள ஊழல் கறை, தமிழக கல்வித்துறையையும் விட்டு வைக்கவில்லை என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வர்.
    • 1
    • Share
  • Manohar
    17-01-2015 | 10:18:32
    அருமையான தலையங்கம். கடைசி மூன்று பத்திகள் மிக அருமை.
    • Share
  • Pandian
    17-01-2015 | 09:39:53
    தலையங்கம் அருமை ..... கடைசி வரிகள் மட்டும் நிதர்சனம் ஆகிவிட்டால் .. நாமக்கல்லில் வெறிகொண்டு வியாபாரம் நடத்தும் பல கொழு கொழு "கோழி பண்ணைகள்" ஏலத்திற்கு வரலாம் ....
    • 1
    • Share
  • Ramesh
    17-01-2015 | 08:33:29
    எந்த செயல்வழிக்கற்றல் நீங்கள் உதவுகிறது என்று கூறுகிறீர்களோ அதே செயல் வழிக்கற்றல் தான் இன்றைய கல்வித்தரம் தாழ்ந்ததுக்கு காரணம் என்றால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? அதிகாரிகள் கொடுக்கும் போலியான புள்ளி விவரங்களை வைத்து தயவு செய்து தினமணி இந்த முடிவுக்கு வர வேண்டாம்.
    • Share
    • Magizhnan
      17-01-2015 | 19:26:55
      தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி விவரங்கள் எந்த அரசு அதிகாரியும் தந்ததல்ல தலையங்கத்திலேயே குறிப்பிட்டிருப்பதுபோல ப்ராதம் என்ற தன்னார்வு அமைப்பு நாடு முழுவதும் நடத்திய ஆய்வு மூலம் கிடைத்த புள்ளிவிவரங்கள் இந்த புள்ளி விவரங்கள் டைம்ஸ் மற்றும் ஹிந்து நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன தமிழ்நாடு கல்வியில் முன்னேறுவது உங்களுக்கு பிடிக்காத ஒன்றா?
      • Share