SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Tuesday, July 30, 2013

நாகை கூட்டணி வட்டார போராட்ட சிறப்பு பொதுக்குழு தினமலா் செய்தி


ஆசிரியர்களை குறை சொல்லாத தினமணியை பார்ப்பது அரிது


நல்லாசிரியர் விருதுக்கு புது நடைமுறை பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தகவல்


பதிவு செய்த நேரம்:2013-07-30 12:21:38

 மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தோரின் பள்ளிக்கே சிறப்பு குழு நேரில் சென்று ஆய்வு செய்யும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தேவராஜன் ரிவித்தார்.மதுரையில் நேற்று பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அமுதவல்லி தலைமை வகித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேவராஜன் பேசியதாவது: பள்ளிகளில் விளையாட்டு விழாக்களை மிகச்சிறப்பாக நடத்த வேண்டும். இதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதேபோல் அறிவியல் கண்காட்சிகளும் மிகச் சிறப்பாக நடத்தப்பட வேண்டும். வியக்க வைக்கும் நவீன கண்டுபிடிப்புகளுடன் மிகப்பெரிய அளவிலான விழாக்களாக இவை இருக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்களை ஒவ்வொரு பள்ளிக்கும் நேரடியாக வழங்கவும், தலைமையாசிரியர்கள் குறிப்பிட்ட மையத்திற்கு சென்று விலையில்லா பொருட்களை பெற்று வருவதில் செலவும், சிரமமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நல்ல முடிவு அறிவிக்கப்படும். 

மாநில நல்லாசிரியர் விருதுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான ஆசிரியருக்கு விருது கிடைக்கவும், தவறுகள் நடக்காமல் இருக்கவும் தமிழகத்தில் இந்த ஆண்டு புதிய நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி மாவட்டம் தோறும் முதன்மைக்கல்வி அதிகாரி, கல்வி மாவட்ட அதிகாரி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் 2 தலைமையாசிரியர்கள் கொண்ட சிறப்பு குழு ஏற்படுத்தப்படும். மாநில விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர் பணியாற்றும் பள்ளிக்கே இக்குழுவினர் நேரில் செல்வர். அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் பணித்திறன், சமூகப்பணி ஈடுபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து, அறிக்கை வழங்குவர். இதில் தேர்வானோரை கல்வித்துறை இணை இயக்குநர் நேர்காணல் நடத்தி தகுதியான ஆசிரியரை தேர்வு செய்வார். இவ்வாறு அவர் பேசினார்
.

Friday, July 26, 2013

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்


கீழ்வேளூரில்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

கீழ்வேளூர், ஜூலை.26-
கீழ்வேளூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு மற்றும் போராட்ட விளக்க ஆயத்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கமோகன், மாவட்டத்துணை தலைவர் மணிமாறன், வட்டார துணைத்தலைவர் மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
கூட்டணியில் புதிய உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்ப்பது. நாகையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொதுசெயலாளர் ஈசுவரன் கலந்து கொள்ளும் மாநாட்டில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட கட்டிட நிதிக்கு அதிக அளவில் நிதி வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்டசெயலாளர் லெட்சுமிநாராயணன், மாவட்டபிரதிநிதிகள் நரேஷ்குமார், கோபாலகிருஷ்ணன், சீனிவாசன், அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் அருள்முருகன் நன்றி கூறினா

FINANCIAL ASSISTANCE TO TEACHERS

G.O.237 INCENTIVE 3+3 FOR SPL GRADE AND SEL.GRADE

NAGAI BLOCK KOOTTANI SIRAPPU PODHUKUZHU RESOLUTIONS 25.7.13


NAGAPATTINAM DEEO NEW LIST OF HOLIDAYS 2013-14 CORRECTED