SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Sunday, September 30, 2012

BHARATHIDASAN UNIVERSITY B.ED LAST DATE OCT 7


பாரதிதாசன் பல்கலை.,யில் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம்-29-09-2012


இளநிலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்களும், ஒரே துறையில் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.திருச்சி: அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமுள்ளவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வியில் பி.எட். பயில விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை www.bdu.ac.in எனும் இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாயை செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை அக்டோபர் 7ம் தேதிக்குள் கிடைக்குமாறு, The Director, Centre For Distance Education, Bharathidasan University, Palkalai perur Campus, Trichy-620024 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.bdu.ac.in எனும் இணையதளம் அல்லது 0431- 2407027, 0431- 2407054, 0431- 2407028, 0431- 2407072 எனும் தொலைபேசி எண்களையும் அணுகலாம்.

Tuesday, September 25, 2012

7% D.A HIKE FOR CENTRAL GOVERNMENT EMPLOYEES


மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7சத டிஏ உயர்வு; ரூ. 7ஆயிரத்து 400 கோடி தான் கூடுதல் செலவு
புதுடில்லி: சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அப்போதைய விலைவாசி உயர்வை பொறுத்து அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த நிதி ஆண்டுக்கான அகவிலைப்படி 7 சதமாக உயர்த்தப்பட்டது.
இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த அதிகார குழு கூட்டத்தில், மம்தா ஆதரவு விலகல் காரணமாக அமைச்சர்கள் குழுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவை குழு மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு இன்று கூடியது. இந்த கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

72 சதமாக உயரும் :



அமைச்சர் குழு முடிவின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஏற்கனவே கடந்த முறை 7 சதம் உயர்த்தப்பட்டு சம்பள விகிதப்படி அகவிலைப்படி 58 முதல் 65 சதமாக உயர்ந்தது. தற்போது மீண்டும் 72 சதமாக உயர்கிறது. இதன் மூலம் அரசுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ. 7 ஆயிரத்து 400 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஆகும். 


அதிக எதிர்பார்ப்பில் ஊழியர்கள்:



இப்போது இருக்கும் விலைவாசி உயர்வில் மத்திய அரசு 7 சதம் உயர்த்தினாலும் எங்களுக்கு போதாது என்றும் கூடுதலாக கொடுத்தால் நன்றாக இருக்குமே என்றும் மத்திய அரசு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனராம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பள விகிதப்படி 65 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி 72 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், விலைவாசி உயர்வின் அடிப்படையில் தற்போது 7 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. 

இந்த அறிவிப்பு மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு 2012 ஜூலை முதல் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு மூலம், இந்த நிதியாண்டுக்கு, கூடுதலாக 7 ஆயிரத்து 408 கோடி ரூபாய் கூடுதல் செலவு மத்திய அரசுக்கு ஏற்படும். ஆறாவது ஊதியக்குழு வகுத்த நெறிமுறைகளை பின்பற்றி இந்த அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2006 ஜனவரிக்கு முன்பாக பணியில் இருந்து ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு அந்த தேதிக்குப் பின்னர் ஓய்வுபெற்றவர்களுக்கான ஓய்வூதியத்திற்கு சமமான சலுகைகளை வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Monday, September 24, 2012

INSTRUCTIONS BY EDUCAGTIONAL SECRETARY


மாணவர்களுக்கு பன்முகத்திறன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு-23-09-2012



விருதுநகர்: பள்ளிகளில் வாரத்தின் கடைசி பாட வேளையில் ஒரு மணி நேரம்,மாணவர்களுக்கு, பன்முகத்திறனை வெளிப்படுத்தும் விதமாக பயிற்சி வழங்க, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து 1.50 நிமிடம், கொடி ஏற்றம், கொடி வணக்கம் 2 நிமிடம், கொடிப்பாடல் 2 நிமிடம், உறுதிமொழி 4 நிமிடம், சர்வசமயவழிபாடு ஒரு நிமிடம், திருக்குறள் மற்றும் விளக்கம் 2 நிமிடம்,தமிழ், ஆங்கில செய்தி வாசிப்பு 4 நிமிடம், இன்றைய சிந்தனை, பழமொழி, பொது அறிவு 2 நிமிடம், பிறந்தநாள் வாழ்த்து அரை நிமிடம் என இருக்க வேண்டும்.
வகுப்பறையில் நடக்கும் வழிபாட்டில், தினமும் ஒரு மாணவர், தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டும். இதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். வாரத்தின் இறுதி நாளில் கடைசி பாட வேளையில் ஒரு மணி நேரம் ,மாணவர்கள் பன்முகத்திறனை வெளிப்படுத்தும், விதமாக இருக்க வேண்டும்.
இதில் ,பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை, மனக்கணக்கு, பொன் மொழிகள், பழமொழிகள், படைப்பாற்றல் போன்ற செயல்பாடுகள் இருக்க வேண்டும். இதை, அனைத்து அரசு உயர்நிலை, மேல் நிலை, நடுநிலை, மாநகாரட்சி, நகராட்சி, ஆங்கிலோ இண்டியன், மெட்ரிக்., பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

4 MEN COMMITTEE DRAFTS PROCEDURES FOR APPOINTMENT OF TEACHERS AFTER TRB



டி.இ.டி., தேர்ச்சிக்கு பின், பணி நியமனத்திற்கு தனி வழிமுறைகள்-23-09-2012


சென்னை: டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நான்குபேர் கொண்ட குழு, அடுத்த வாரம் சென்னையில் கூடுகிறது. குழுவின் இறுதி முடிவு, அடுத்த வாரமே, அரசாணையாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கும் என்பது தெரியாத நிலை இருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் இப்போதே, "கிலி&' அடைந்துள்ளனர்.
ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும், அக்டோPஅர் 3ம் தேதி, மறுதேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. புதியவர்களும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் வாய்ப்பு அளிக்கக்கோரி, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அதேபோல், "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே. பணி நியமனம் செய்வதற்கு, இதுவே இறுதித் தேர்வு கிடையாது. எனவே, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கு தனி வழிமுறைகளை வகுக்க வேண்டும்&' என, வலியுறுத்தி, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.
டி.ஆர்.பி., முடிவு: "மறுதேர்வில், புதியவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இதற்காக 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதனால், அக்டோPஅர் 3ம் தேதி நடக்க இருந்த தேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்ற முடிவை, மனுவாக, டி.ஆர்.பி., சமர்ப்பித்தது.
அதேபோல், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து, அரசு எடுத்துள்ள முடிவையும், மனுவாக டி.ஆர்.பி., சமர்ப்பித்தது.
இதை ஏற்று, நேற்று முன்தினம், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையிலான உயர்மட்டக் குழுவில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு, அடுத்தவாரம் சென்னையில் கூடி, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து, முடிவெடுக்கவுள்ளது.
குழு எடுக்கும் முடிவை, அரசுக்கு தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற்றதும், உடனடியாக அரசாணை வெளியிடப்படும். குழு, எந்த வகையான வழிமுறைகளை உருவாக்கப்போகிறது என, தெரியாமல், தேர்ச்சி பெற்றவர்களும், இனி தேர்வை எழுதப்போகும் தேர்வர்களும், "கிலி&' அடைந்துள்ளனர்.
நேர்முகத்தேர்வு முறையை அறிமுகப்படுத்தி, அதற்கு தனி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுமா என, தெரியவில்லை. நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் என்ற முறை வந்தால், அது முறைகேடுகளுக்கு வழி வகுத்துவிடும். எனவே, உயர்மட்டக்குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கப் போகிறது என்பதை அறிய, தேர்வர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

DEMANDS PLACED BY KOOTTANI FOR PORAATTAM-1


Saturday, September 22, 2012

MASTER MAALIGAI -NEW CONSTRUCTION COMMITTEE


OFFICIALS ARE INSTRUCTED TO VISIT CRC UPPER PRIMARY TODAY


BIG SCHOOLBAGS AFFECT BACK BONE - DINAMALAR


உடம்பை உடைக்கும் புத்தக பை
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சுமை, அங்கு நடத்தப்படும் பாடம் மட்டுமல்ல. அவர்கள் சுமந்து செல்லும் புத்தக பையும் தான். காலையில், புத்தக பையை மாட்டிக்கொண்டு பள்ளி செல்லும் குழந்தையை பார்த்தால் ஒரு நிமிடம் நின்று அவர்களை பார்க்கத் தோன்றும். அந்தளவு அழகாக இருக்கும். குழந்தை, பெரிய பையை கொண்டு செல்கிறார்கள் என சில பெற்றோரும் பெருமையாக நினைக்கின்றனர். 

உண்மையில் நடப்பது என்ன தெரியுமா? அளவுக்கு அதிகமான பாடப் புத்தகங்களை சுமந்து செல்லும் குழந்தைகளுக்கு முதுகு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்கள், மார்க்கெட்டிங் செய்வோர், கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் ஆகியோர் அதிக எடை கொண்ட பையை சுமந்து செல்கின்றனர். இவர்களுக்கு முதுகு வலி, கழுத்து வலி, தண்டுவடம் பாதிப்பு, கூன் விழுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள் தொகையில் 40 - 80 சதவீதம் பேருக்கு முதுகுவலி பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிச் சுமை, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருதல், உடல் உழைப்பு இல்லாமை, எடை அதிகரிப்பு ஆகிய காரணங்களாலும் இன்றைய இளைஞர்கள் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர். 


எங்கு பாதிப்பு அதிகம்:


இது குறித்து பெங்களூரு தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : "குழந்தைகள் சுமக்கும் "பை'களால் கழுத்து மற்றும் முதுகில் மேல் பகுதியில் கடும் வலி உண்டாகிறது. முதுகின் மேல் பகுதி (40 சதவீதம்), கழுத்து ( 27 சதவீதம்), தோள் பட்டை ( 20 சதவீதம்), முன் கை மணிக்கட்டு (7 சதவீதம்), முதுகின் கீழ் பகுதி (6 சதவீதம்)யில் வலி உண்டாகிறது'. இப்பிரச்னையில் இருந்து தப்பிக்க, தேவையான புத்தகங்களை மட்டும் குழந்தைகள் எடுத்துச் செல்ல ஆசிரியர்கள் அறுவுறுத்த வேண்டும். சில பள்ளிகளில் அனைத்து புத்தகங்களையும் எடுத்துவரச் சொல்கின்றன. இதற்கு பதில், பள்ளிகளிலேயே மாணவர்களுக்கான "லாக்கர்களை' ஏற்டுத்த பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது. 

இளைஞர்களுக்கு:


பைக்கில் அதிக தூரம் செல்ல வேண்டி இருந்தால் பைகளை தோளில் தொங்க விடாமல், பைக்கின் முன்பகுதியில் வைத்துச் செல்லலாம். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காரவோ, நிற்கவோ கூடாது. இதற்கு பதில், சிறிது நேரம் ஓய்வு அல்லது வாக்கிங் அல்லது ரன்னிங் போகலாம். மன அழுத்தம் உடலின் தசைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இச்சமயத்தில் சிறிது நேரம் மூச்சுப் பயிற்சி செய்யலாம். புகை பிடிப்பது முதுகெலும்பில் பாதிப்பை ஏற்படுத்தும். அப்பழக்கத்தை அறவே விட்டொழியுங்கள். முறையான தலையணைகளை பயன்படுத்துவதன் மூலம், கழுத்து வலியில் இருந்து தப்பிக்கலாம். 

எப்படி இருக்க வேண்டும் புத்தக பை:


* தோளில் தொங்க விடப்படும் பை, நன்கு அகலமாக, பட்டையாக இருக்கு வேண்டும்.
* ஒற்றை பட்டையை தவிர்க்க வேண்டும். 
- குழந்தையின் எடையில், 10 - 20 சதவீத எடைக்கு மேல் பையின் எடை இருக்கக் கூடாது.
- புத்தக பையுடன் நடக்கும் போது, சாய்ந்தவாறு நடக்கக்கூடாது.
- படத்தில் உள்ளது போல, புத்தக பை, சரிந்து இருக்குமானால், பையின் எடை அதிகரித்து குழந்தை முதுகுத் தண்டு பாதிக்கப்படும். 
* பையின் அளவு, குழந்தையின் முதுகின் அளவை விட, அதிகமாக இருக்கக்கூடாது. 
* "பை'யின் பின்புறம் கீழே "பிடி' இருப்பது நல்லது. 
* தேவையில்லாத புத்தகம், நோட்டுகளை எடுத்துச்செல்ல வேண்டாம் என குழந்தைகளுக்கு அறுவுறுத்த வேண்டும்.

HM SUSEPENDED IN ERODE FOR NOT OPENING SCHOOL


நீண்ட நாட்கள் பணிக்கு செல்லாததால்

பள்ளி மூடப்பட்டது தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்: கலெக்டர் நடவடிக்கை


ஈரோடு: மலைப்பகுதியில் உள்ள பள்ளிக்கு, பள்ளி துவங்கிய நாளில் இருந்து செல்லாமல் இருந்து வந்த தலைமையாசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் பர்கூர் ஊராட்சி கத்திரிமலை கிராமத்தில் பழங்குடியினத்தவர் 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சாலை, போக்குவரத்து, குடிநீர், மருத்துவம், மின்சாரம் என எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத இந்த மலை கிராமத்தில் கடந்த 97ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிடப்பள்ளி துவங்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டில் இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 75 மாணவ, மாணவியர் படித்து வந்தனர். இந்த கல்வியாண்டு தொடங்கியதில் இருந்து இப்பள்ளிக்கு எந்த ஆசிரியரும் பணிக்கு வராததால் பள்ளி மூடப்பட்டு கிடந்தது. மேலும், இப்பள்ளியில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாகவும் குறிப்பாக புதிதாக ஸீ13 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.கடந்த 2006ம் ஆண்ணீடுக்கு பிறகு நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்களில் ஒருவர்கூட பள்ளி க்கு வந்தது இல்லை என்று  பழங்குடி மக்கள் சங்கம் புகார் கூறியதோடு, இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கலெக் டர் சண்முகம் இது தொடர்பாக ஆதிதிராவிடர் நலத் துறை, பள்ளி கல்வித் துறை, அனைவருக் கும் கல்வி இயக்கம், மருத்துவத் துறை உள்பட 5 துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். இந்த குழுவினர்  விசாரணை நடத்தி, அறிக்கையை ஆதிதிராவிடர் நலத்துறை பொறுப்பு அலுவலரான கலால் துறை உதவி ஆணையர் ரங்கராஜன், கலெக்டர் சண்முகத்திடம் தாக்கல் செய்திருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்த தலைமை ஆசிரியர் புஷ்பராணியை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டார். தலைமை ஆசிரியர் புஷ்பராணி, பள்ளிக்கு செல்லாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர் பயிற்சி முடித்த ஒருவரை அவராகவே வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்த நபர் பாடம் எடுத்து வந்துள்ளார். அவருக்கு புஷ்பராணி தனியாக குறைந்த தொகையை ஊதியமாக கொடுத்துள்ளார். நடப்பாண்டில் பள்ளி திறந்ததில் இருந்து அந்த நபர், பாடம் எடுக்க வருவதை நிறுத்திக் கொண்டார். தலைமை ஆசிரியை புஷ்பராணியும் பள்ளிக்கு வருவதில்லை. இதன் காரணமாக பள்ளி நடப்பாண்டு திறந்ததில் இருந்தே மூடப்பட்டு உள்ளது. ஆனால், உண்டு உறைவிடப்பள்ளி என்பதால் மாணவ,  மாணவிகளுக்கு உணவு மட்டும் வழங்கி வந்துள்ளனர். இப்பள்ளிக்கு மலைப்பகுதியை சேர்ந்த ஒருவரை ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


*சாலை, போக்குவரத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவம், மின்சாரம் என எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.
*வெளியூருக்கு செல்வதாக இருந்தால் 8 கி.மீ. தூரம் கரடுமுரடான பாதையில் நடந்து லக்கம்பட்டி பிரிவு என்ற இடத்திற்கு வந்து தான் பஸ் ஏற முடியும். மளிகை உள்ளிட்ட எந்தப்பொருளை வாங்க வேண்டும் என்றாலும் லக்கம்பட்டி பிரிவில் இருந்து 10 கி.மீ. பஸ் பயணம் மேற்கொண்டு கொளத்தூர் கிராமத்திற்கு செல்ல வேண்டும்.
*இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு துணைத் தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் என மூன்று பேர் பணியாற்ற அரசாணை உள்ளது. ஆனால், ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு துணைத் தலைமை ஆசிரியர் என இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இதுவரை பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
*இப்பள்ளியில் பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Friday, September 21, 2012

TET EXAM POSTPONED TO OCTOBER 14.APPLICATIONS ARE INVITED


அக்டோபர் 14ல் ஆசிரியர் தகுதித் தேர்வு : புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்

First Published : 21 Sep 2012 05:58:58 PM IST



சென்னை, செப். 21 : தமிழகத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தேர்வில் புதிதாக விண்ணப்பிப்பவர்களும் தேர்வெழுத அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தோல்வி அடைந்ததை அடுத்து மறுதேர்வு நடத்த அறிவிப்பு வெளியானது.

இதில், புதிதாக தேர்வெழுத விரும்புவோரையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது இன்று பதில் தாக்கல் செய்த ஆசிரியர் தேர்வுக்குழு வாரியத் தலைவர், புதிதாக விண்ணப்பிப்பவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம். அதற்கு வசதியாக அக்டோபர் 5 ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட தேர்வு அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை புதிதாக தேர்வெழுத விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தார். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டதை அடுத்து வழக்கு முடிவுக்கு வந்தது.
டி.இ.டி., தகுதித்தேர்வு ஒத்திவைப்பு
சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து மீண்டும் அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் எனவும், புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய தலைவர் சென்னை ஐகோர்ட்டில் கூறினார். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

D.A. HIKE NOT NOW-IT MAY TAKE TIME-DINAMALAR

அகவிலைப்படி உயர்வு இப்போதைக்கு இல்லை
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்துவது குறித்து முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, தற்போது, 65 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதை, 72 சதவீதமாக உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நாளை (செப். 21) கூடும், பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சரவை கூட்டம், திடீரென அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள அரசியல் சூழ்நிலை காரணமாகவே, இன்று நடைபெறுவதாக இருந்த அமைச்சரவைக் கூட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Thursday, September 20, 2012

EXPECTING 7% DA TO BE ANNOUNCED TODAY BY CENTRAL GOVERNMENT


புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியினை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டீசல்விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் கடும் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியினை மத்திய அரசு 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதம் இருந்ததை 65 சதவீதமாக உயர்த்தி, ஜனவரி 1 2012-ம் ஆண்டில் இருந்து கணக்கிடப்பட்டது. 



தற்போது அகவிலைப்படியை மேலும் 7 சதவீதமாக அதிகரித்து 65 ல் இருந்து 72 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 50 லட்சத்தி்ற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் என மொத்தம் 80 லட்சம் பேர் பயனடைவர். இது ‌கடந்த ஜூ‌லை 1-ம் தேதி முதல் கணக்கீட்டு அதற்கான நிலுவைத்தொகை வழங்கப்படலாம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
விலைவாசி உயர்வு : மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு

First Published : 20 Sep 2012 03:46:13 PM IST



புது தில்லி, செப்., 20 : விலைவாசி உயர்ந்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படியை 7% உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முறைப்படியான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 65 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. விலை வாசி உயர்வு காரணமாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து மத்திய அமைச்சரவை கடந்த சில நாட்களாகக் கூடி விவாதித்து வந்தது. இந்த நிலையில், அகவிலைப்படியை 7% உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த உயர்வினால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 72% ஆக உயர்ந்துள்ளது. அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், ஓய்வூதியம் பெற்று வரும் 30 லட்சம் பேரும் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.

RETIRED HMS COMPLAINT TRICHY COLLECTOR ON G.O.207


பணப்பயன் கிடைக்காமல் அதிகாரிகளால் அலைக்கழிப்பு குறைதீர் கூட்டத்தில் ஓய்வு தலைமையாசிரியர்கள் புகார்

பதிவு செய்த நேரம்:2012-09-18 11:54:09
திருச்சி, : பணப்பயன் கிடைக்காமல் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கள் (எச்எம்) கல்வி அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவதாக குறைதீர் கூட்டத் தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ தியாகராஜன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் 898 பேர் மனு அளித்தனர்.
ஓய்வு பெற்ற பள்ளி, கல் லூரி ஆசிரியர் சங்க செயலர் தியாகராஜன் தலைமையில் ஓய்வூதியர்கள் அளித்த மனு: ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு அர சாணை 207ன்படி பணப்பயன் கள் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென் றோம். கடந்த 12ம் தேதி தா.பேட்டை உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினோம். இதுவரை நடவடிக்கை இல்லை. பணபயன் கிடைக்காமல் ஓய்வு எச்எம்களை கல்வித் துறை அதிகாரிகள் அலைக்கழிக்கி றார்கள். இது குறித்து விசா ரணை நடத்த வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 19, 2012

BLOCK SECRETARIES MEETING AT 21.9.12 FRIDAY 5PM AT OUR DISTRICT OFFICE

வட்டார செயலாளர்கள் கூட்டம் 

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  நாகப்பட்டினம் மாவட்டக்கிளை 21.09.2012 வெள்ளி மாலை 5 மணிக்கு வட்டார செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளது  எனவே அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் அனைத்து வட்டார பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகின்றது

20TH SEPTEMBER STATUS REPORT AT 10.30AM


2ND TERM TEXT BOOKS AFTER 1ST TERM HOLIDAYS


இரண்டாம் பருவத்திற்கு பாடப் புத்தகங்கள் வினியோகம்-20-09-2012



சென்னை: நடப்புக் கல்வியாண்டில், இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தக வினியோகத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். இரண்டாம் பாடப் பருவத்திற்காக, மொத்தம், 56 தலைப்புகளில், 2.2 கோடி புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவக் கல்வி முறைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜூன் முதல், செப்டம்பர் வரையிலான முதல் பருவம், இம்மாத இறுதியுடன் முடிகிறது.
இதையடுத்து, அக்டோபர் முதல், டிசம்பர் வரையிலான இரண்டாம் பருவத்திற்கு, பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி, சென்னையில் நேற்று துவங்கியது. எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, மாணவியருக்கு, பாடப் புத்தகங்களை வழங்கினார்.

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper வரும் 25ம் தேதிக்குள், அனைத்துப் பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பப்படும் என்றும், காலாண்டு விடுமுறை முடிந்து, அக்டோபர் 4ம் தேதி மாணவ, மாணவியர், பள்ளிகளுக்குத் திரும்பியதும், பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும், பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.
முதல், இரண்டாம் வகுப்புப் புத்தகங்களின் விலை, 70 ரூபாய், மூன்றாம் வகுப்பு முதல், ஆறாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலை, 85 ரூபாய், ஏழு, எட்டாம் வகுப்புப் புத்தகங்களின் விலை, 100 ரூபாய்.

.2ம் பருவ பாடபுத்தகங்கள் அடுத்த மாதம் வழங்கப்படும்

First Published : 18 Sep 2012 03:53:16 PM IST


சென்னை, செப்.,18: இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இந்த புத்தகங்கள் அனைத்தும் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று கல்வித்துறை அறித்துள்ளது.

2012
15
Sep
காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 2ம் பருவ பாட நூல்கள் வினியோகம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper













திருப்பூர் :மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதற்காக ஒன்று  முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் முதல் பருவமாகவும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2ம் பருவமாகவும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் 3ம் பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகமும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பருவத்துக்கு 2 புத்தகங்களும் வழங்கப்பட்டன. 2ம் பருவத்திற்கான இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாவட்ட பாடநூல¢ இருப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் கோபால் கூறுகையில், ‘2ம் பருவ பாட புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. புத்தகங்கள் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு வழங்கப்படும். மெட்ரிக் பள்ளிகளுக்கு தேவையான ¢அளவு பாட நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள¢ளது’ என்றார்

Tuesday, September 18, 2012

LEAVE CANCELLED FOR SEPTEMBER 20-WORKING DAY

2012
19
Sep
பள்ளிகள் நாளை இயங்கும்: தேர்வு நடக்கும், அரசு அறிவிப்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: பள்ளிகள் நாளை வழக்கம்போல இயங்கும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப் படி காலாண்டு தேர்வு நடக்கும் என்றும்  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் பந்த் அறிவித்துள்ளதால் 20ம் தேதி (நாளை) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக நேற்று மதியம் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் அறிவித்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் என அரசு அறிவித்தது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம்போல இயங்கும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி காலாண்டு தேர்வு நடக்கும்’’ என்றார்


செப். 20ம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்-19-09-2012


தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் விடுமுறை குறித்த முடிவை பள்ளிக் கல்வித்துறை எடுத்ததாக கூறப்படுகிறது. பின்பு அரசுக்கு விஷயம் தெரிந்ததும், வேலைநிறுத்தத்திற்கு அர்சே ஆதரவு தெரிவித்ததைப் போல் ஆகிவிடும் என்பதால், விடுமுறை அறிவிப்பைத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெறுங்கள், என பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டதாக துறை வட்டாரம் தெரிவிக்கின்றன.சென்னை: டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: 20ம் தேதி அனைத்து வகை பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும். காலாண்டுத் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றார்..

நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்: கல்வித் துறை அறிவிப்பு

First Published : 19 Sep 2012 12:00:00 AM IST


 சென்னை, செப். 18: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
 முன்னதாக, வேலைநிறுத்தத்தையொட்டி, அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
 ஆனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முடிவு எடுக்கவில்லை எனவும், விடுமுறை தொடர்பான அறிவிப்பு தவறாக வெளியாகியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலையில் மறுப்பு தெரிவித்தனர்.
 டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் செப்டம்பர் 20-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இப்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. வேலைநிறுத்த அறிவிப்பையொட்டி, இந்தத் தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வந்தது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான சுற்றறிக்கை செவ்வாய்க்கிழமை காலையில் அனுப்பப்பட்டது.
 அதன் விவரம்: அனைத்து வகை பள்ளிகளுக்கும் செப்டம்பர் 20-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் பொதுவான காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது.
 அந்த வகுப்புகளுக்கு வியாழக்கிழமை நடைபெற இருந்த தேர்வை, இறுதி தேர்வு நாளுக்கு மறுநாள் நடத்த வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு நடைபெற இருந்த தேர்வை எந்த தேதியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 திடீர் திருப்பம்: இதையடுத்து, சில மாவட்டங்களில் மாற்று தேர்வு தேதிகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவித்துவிட்டனர். இந் நிலையில், பள்ளி கல்வித் துறை செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென விடுமுறை அறிவிப்பை மறுத்தது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் பள்ளிகள் வியாழக்கிழமை வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை:"அனைத்து பள்ளிகளுக்கும், நாளை விடுமுறை' என, காலையில் அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை, மாலையில் திடீரென அறிவிப்பை, "வாபஸ்' பெற்றது.டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை, நாடு தழுவிய அளவில், "பந்த்' நடக்கும் என, எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதனால், பள்ளிகள் இயங்குமா, இயங்காதா என்ற குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி, "20ம் தேதி அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை; 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு, தேர்வு முடியும் மறுநாளன்று நடக்கும். இதர வகுப்புகளுக்கான தேர்வை, வேறு தேதியில் நடத்துவது குறித்து, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முடிவெடுத்துக் கொள்ளலாம்' என்ற அறிவிப்பை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. இந்த உத்தரவு, உடனடியாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டன.இதையடுத்து, நேற்று தேர்வுக்கு வந்த மாணவ, மாணவியரிடம், 20ம் தேதி விடுமுறை குறித்த அறிவிப்பை, ஆசிரியர் வெளியிட்டனர். இதற்கிடையே, காலையில் வெளியிட்ட அறிவிப்பை, திடீரென மாலையில் பள்ளிக் கல்வித்துறை, "வாபஸ்' பெற்றது.
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும்  அனைத்து   பள்ளிகளும் 20.09.2012 வியாழன் அன்று வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது 


Dear DEEOs,
Ensure the Quarterly Examination to be conducted on 20-09-2012. Question Paper reaches concern School Headmasters by Tomorrow (19-09-2012) evening and report immediately.

கீழே உள்ள கடிதத்தில் நமது தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் விடுமுறையை  ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் 


- Director, DEE


ADMISSION IN GOVT SCHOOLS DECREASED-DINAMALAR


தமிழகத்தில் உள்ள துவக்கப் பள்ளிகளில், வசதி வாய்ப்புகளும், ஆசிரியர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தாலும், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால், பாதிக்கும் மேற்பட்ட அரசு துவக்கப் பள்ளிகளுக்கு, மூடுவிழா நடத்த வேண்டிய சூழல் உருவாகும்.

தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. துவக்கக் கல்வியை தரமானதாக்க, உலக வங்கி உதவியுடன், பத்து ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கம் துவங்கப் பட்டது.இத்திட்டம் துவக்கப்படும் முன், அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வகுப்பறை, கழிவறை, குடி நீர் வசதிகள் குறைவாகவும் இருந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் செயல்பாடுகளால், அனைத்து பள்ளிகளிலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கல்வி முறையும் மாற்றி அமைக்கப்பட்டு, மாணவர்கள் தாமாகவே கற்றுக் கொள்ளும், செயல்வழிக் கற்றல் முறையும் அறிமுகப் படுத்தப்பட்டது. 

ஏராளமான துவக்கப் பள்ளிகள் துவங்கியதுடன், புதிய ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டன. நாற்பது மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலையை மாறி, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை உருவானது.கடந்த பத்து ஆண்டுகளில், துவக்கப் பள்ளிகளின் நிலை, எதிர்பார்த்த அளவிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், மாணவர் சேர்க்கையோ, தலைகீழாக உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியில், ஆண்டுக்கு, 11.72 சதவீத வளர்ச்சி இருக்கும் நிலையில், துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த, 2004 - 05ல், 62 லட்சமாக இருந்த மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, தற்போது, 58 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அப்போது, 41:1 என்றிருந்த ஆசிரியர் மாணவர் விகிதம், தற்போது, 27:1 என்ற நிலைமைக்கு மாறியுள்ளது. துவக்கப் பள்ளிகளில், ஓய்வுபெறும் பணியிடங்களையும், பணி நிரவல் செய்வதன் மூலமே நிரப்பிவிடும் நிலை உள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள, அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்துள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது

:குழந்தைகளின் கல்வியில் அக்கறை கொண்டுள்ள அனைத்து பெற்றோரும், தங்களது குழந்தைகளை, தனியார் பள்ளியில் சேர்க்கவே விரும்புகின்றனர். அரசு பள்ளியில் படிப்பதை, கவுரவக் குறைச்சலாக சில பெற்றோர் நினைக்கின்றனர். அரசு ஊழியரின் குழந்தை கூட, அரசு பள்ளியில் படிப்பதில்லை.கல்வி குறித்து, ஆசிரியர்களிடம் கேள்வி கேட்காத பெற்றோரின் குழந்தைகள் மட்டுமே, அரசு பள்ளியில் படிக்கின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களிடம், கல்வி கற்பித்தலில் அதிக அக்கறை காட்டாததும் இதற்கு காரணம்.இவ்வாறு, கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Monday, September 17, 2012

RTE TRAINING ON SEP 27(SGT,PRI.HM),28(BT)&29

கட்டாய கல்வி சட்டம்: ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி-19-09-2012


கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, 2013 மார்ச் மாதத்திற்குள், அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் 27ம் தேதி, வட்டார வள மைய அளவில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 28ம் தேதி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 29ம் தேதி நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படுகிறது.தேனி: கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 27 முதல், மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன வழிகாட்டுதல் படி, அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.


CEOs CAN DECIDE ON HOLIDAY ON SEP 20 BANDTH

சென்னை:வரும், 20ம் தேதி, "பந்த்' நடைபெறவுள்ளதால், மாநிலம் முழுவதும், பள்ளிகளில் நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும், 20ம் தேதி, தேசிய அளவில், "பந்த்' நடத்த, எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. பள்ளிகளில், காலாண்டுத் தேர்வுகள் தற்போது நடந்து வருவதால், "பந்த்' அன்று மாணவ,மாணவியர், பள்ளிகளுக்கு செல்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அன்று நடைபெறும் தேர்வினை, வேறு தேதியில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு, தமிழக அரசு அறிவித்துள்ளதால், 20ம் தேதி நடைபெறவிருந்த காலாண்டுத் தேர்வுகள், ரத்து செய்யப்பட்டுள்ளன.

Saturday, September 15, 2012

KOOTTANI AGITATION STARTS-FOR SGTS GRADE PAY-OCT28 KORIKKAI VILLAKA SIRAPPU PODHUKUZHU-NOV 22 -PERANI AT DIST HEADQTRS.JAN 5 DHARNA AT DIST


இடைநிலை ஆசிரியர்களுக்கான தர ஊதியம் உயர  தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் 

கூட்டணியின் போராட்டம் ஆரம்பம் 
செப்டம்பர் 15 இல் நடந்த மாநில செயற்குழுவில் தீர்மானம் 

அக்டோபர் 25 முதல் நவம்பர் 7  வரை மாநிலம் முழுவதும் கோரிக்கை விளக்க மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் !

நாகையில்  அக்டோபர் 28 இல்   கோரிக்கை விளக்க மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் !!

நவம்பர் 22 இல் மாவட்டத் 
தலைநகர்களில் பேரணி !!!

ஜனவரி 5 இல் மாவட்டத் தலைநகர்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தர்ணா போராட்டம் !!!

Wednesday, September 12, 2012

QUARTERLY EXAMS START FOR 10 TO 12

இன்று முதல் காலாண்டு பொதுத் தேர்வுகள் துவக்கம்

First Published : 12 Sep 2012 11:03:34 AM IST


சென்னை, செப்.,12: தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஒரே நடைமுறையில் காலாண்டுத் தேர்வுகள் இன்று முதல் துவங்குகிறது.


காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் வழங்கப்படும் கேள்வித்தாளுக்கும், பொதுத்தேர்வில் வழங்கும் கேள்வித்தாளுக்கும் வித்தியாசம் இருப்பதால் பொதுத்தேர்வை எழுதும் நேரத்தில் மாணவர்கள் திணறுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் குறித்து பொதுத்தேர்வு நடத்துவது போலவே காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்த, தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.


பத்தாம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கி செப்.,20ம் தேதி வரையும், பிளஸ் 2 தேர்வுகள் இன்று முதல் செப்.,25ம் தேதி வரையும் நடைபெறுகின்றது.


பொதுத்தேர்வைப் போலவே கேள்வித்தாளை படித்துப் பார்க்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும் 15 நிமிடம் வழங்கப்படும். அதன்பின் காலை 10.15க்கு தேர்வு துவங்கும் என தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர்கள் கூறியுள்ளனர்

ஒரே நடைமுறை - துவங்கியது காலாண்டு தேர்வு-12-09-2012



சென்னை: கடந்த ஆண்டு வரை, மாவட்ட அளவில் நடந்து வந்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள், இந்த ஆண்டு முதல், மாநில அளவில், ஒரே மாதிரியாக நடத்தப்படுகின்றன. தேர்வுத்துறை தயாரித்து வழங்கியுள்ள கேள்வித்தாள் அடிப்படையில், இன்று முதல், காலாண்டுத் தேர்வுகள் துவங்குகின்றன.
வருவாய் மாவட்ட அளவில் நடக்கும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் வழங்கப்படும் கேள்வித்தாளுக்கும், பொதுத்தேர்வில், தேர்வுத்துறை வழங்கும் கேள்வித்தாளுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும், இதனால் பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் திணறுவதும், அரசின் கவனத்திற்கு வந்தது. அத்துடன், தேர்வை நடத்தும் முறைகளிலும், தேர்வு அறைகளில் மாணவ, மாணவியர் கடைப்பிடிக்கும் முறைகளிலும், ஒரே சீரான நடைமுறை இல்லாததால், பொதுத்தேர்வில், மாணவர்கள் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காலாண்டு, அரையாண்டுத் தேர்வையும், பொதுத்தேர்வைப் போல், தேர்வுத்துறை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இரு வகுப்பு மாணவ, மாணவியருக்கும், பாட வாரியாக கேள்வித்தாளை தயாரித்து, அதை, "சிடி"யில் பதிவு செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம், தேர்வுத்துறை ஒப்படைத்தது. அவர்கள், "பிரின்ட்" எடுத்து, பள்ளிகளுக்கு வினியோகம் செய்தனர்.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது: பொதுத் தேர்வைப் போலவே, கேள்வித்தாளை படித்துப் பார்க்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும், 15 நிமிடங்கள் வழங்கப்படும். அதன்பின், காலை, 10:15க்கு, தேர்வு துவங்கும். 10ம் வகுப்பு தேர்வு, 12:45க்கும், பிளஸ் 2 தேர்வு, 1:15க்கும் முடிவடையும். தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர்கள், தேர்வுப் பணியை பார்வையிடுவர். இவ்வாறு, வசுந்தரா தேவி கூறினார்.

வினாத்தாள் வழங்குவதில் குளறுபடி காலாண்டு தேர்வுகள் தாமதம்


சென்னை: கேள்வித்தாள் அனுப்புவதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் 2 மணி நேரம் தாமதமாக துவங்கின. அரசு தேர்வுகளுக்கு நடப்பாண்டில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகளுக்கு கேள்வித்தாள்களை அரசே அச்சிட்டு வழங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அரசு தேர்வுத்துறை கேள்வித்தாளுக்கான மாடல் வினாத்தாளை அனுப்பும். அதை பெற்றுக் கொள்ளும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேள்வித்தாளை வடிவமைத்து அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்குவார்கள் என்றும்  அறிவிக்கப்பட்டது. 

ஆனால் காலாண்டு தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியபோது பல பள்ளிகளுக்கு கேள்வித்தாள் வந்து சேரவில்லை. 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்காக அந்தந்த பள்ளிகளுக்கு ஒரே ஒரு வினாத்தாளை மட்டும் அனுப்பிய தேர்வுத்துறை, மீதமுள்ள மாணவர்களுக்கு ஜெராக்ஸ் பிரதி மூலம் கேள்வித்தாளை கொடுக்க உத்தரவிட்டது. இதனால் ஜெராக்ஸ் மெஷின் உள்ள பள்ளிகளில் உடனுக்குடன் பிரதிகள் எடுக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு எழுதினர். 

ஆனால் ஜெராக்ஸ் மெஷின் இல்லாத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேள்வித்தாள்களோடு, தனியார் ஜெராக்ஸ் கடைகளுக்கு சென்று ஜெராக்ஸ் பிரதி எடுத்தனர். ஏற்கனவே கடைகளில் கூட்டம் இருந்த நிலையில் தலைமையாசிரியர்களுக்கு உடனுக்குடன் பிரதிகள் கிடைக்கவில்லை. இதனால் தேர்வுகள் தொடங்குவது 2 மணி நேரம் வரை தாமதமானது. 6 முதல் 8 வகுப்புகளுக்கும் இதே நிலைதான் நீடித்தது. மாநிலம் முழுவதும் இதே நிலைதான் இருந்தது குறிப்பிடத்தக்கது.