Pages

Tuesday, November 27, 2012

முன்மாதிரியான விருத்தாசலம் தனியார் பள்ளி சோலார், காற்றாலை மின் உற்பத்தி முறை அமைப்பு :


விருத்தாசலம்: விருத்தாசலம் இன்பேன்ட் மெட்ரிக் பள்ளியில் சோலார், காற்றாலை மின் உற்பத்தி முறை அமைத்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் பல மாதங்களாக தொடர் மின்வெட்டு நிலவி வருவதால், தொழில்துறை நிறுவனங்கள், அரசு, தனியார் அலுவலக பணிகள் கடுமையாகப் பாதித்துள்ளன. பள்ளி, கல்லூரிகளில் கணினி பயிற்சி, இயற்பியல், வேதியல் செய்முறை பயிற்சிகளை செய்ய முடியாமல் மாணவர்கள் பாதிப்படைந்தனர்.விருத்தாசலம் இன்பேன்ட் மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் வசதிக்காக நிர்வாகத்தினர் சோலார், காற்றாலை மின் உற்பத்தி முறைகளை அமைத்துள்ளனர். அதன் மூலம், மாணவர்கள் கணினி பயற்சி பெறுகின்றனர். வகுப்பறைகளில் மின் விளக்குகள், மின்விசிறிகள் இயங்குகின்றன.அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், மரபுசாரா எரிŒக்தி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் முன்மாதிரியாக இப் பள்ளியில் சோலார், காற்றாலை மின் உற்பத்தி முறை செய்யப்பட்டுள்ளது.
பள்ளி முதல்வர் விஜயகுமாரி கூறுகையில், "எங்கள் பள்ளியில் 10 மாதமாக சேலார், காற்றாலை மின் உற்பத்தி முறை செயல்படுகிறது. சோலார் சிஸ்டம் மூலம் 350 வாட் மின்சாரமும், காற்றாலை மூலம் 300 வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தடையற்ற மின்சாரம் கிடைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்காமல், பெற்றோர்களுக்கு அளித்த உறுதியை காப்பாற்றியுள்ளோம். மேலும், மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க சோலார் வாட்டர் ஹீட்டர் பொருத்தியுள்ளோம்.இதற்கான செலவு ஒரு லட்Œத்து 70 ஆயிரம் ரூபாய் ஆனது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் மரபுசாரா எரிŒக்தித் துறை, 30 சதவீதம் மானியம் வழங்கியுள்ளது. இதனால், மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்' என்றார்.

கிராம பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்கள் அதிகரிப்பு





சென்னை: கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தி, இரண்டாண்டுகளாகியும், பள்ளியில் இடைநிற்கும், மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், 2010, ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயக்கல்விசட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதுஇதன் அடிப்படையில்,ஒன்றாம் வகுப்பு முதல்எட்டாம் வகுப்பு வரைஅனைவரும்கல்வி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுவாகபள்ளிகளில் ஒன்று முதல்எட்டாம் வகுப்பு வரைபடிக்கும், 10 சதவீதம் மாணவர்கள் இடைநிற்கும் நிலை உள்ளதுஇதை மறைத்துபெரும்பாலானபள்ளிகளில்புள்ளி விவரங்கள் தயாரிக்கப்படுகிறதுகட்டாயக்கல்வி சட்டத்தில்இடைநிற்கும்மாணவர்களின் எண்ணிக்கையே இருக்கக்கூடாது எனவும்இதற்காகமாநில அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரைகடந்த சில ஆண்டுகளுக்கு முன்அனைவருக்கும் கல்விஇயக்கத்தின் சார்பில்அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கான பிரச்சாரம், "பிரிட்ஜ் கோர்ஸ்&'மையங்கள் எனபல்வித செயல்பாடுகள் இருந்தனதற்போதுஅவையும்செயல்படுத்தப்படுவதில்லைஇதனால்கிராமப்பகுதிகளில்இடைநிற்கும் மாணவர்களின்எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதுஇவற்றை தடுத்து நிறுத்தவும்,அனைவருக்கும் கல்வி வழங்கவும்தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனகோரிக்கைஎழுந்துள்ளது.
இதுகுறித்துஅனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் கூறியதாவதுஅனைவருக்கும்கல்வி இயக்ககத்தின் கீழ்அனைத்து மாணவர்களையும்பள்ளிகளில் சேர்ப்பதற்கானபல்வேறுசெயல்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளியில்இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதிகளில்சிறப்பு பயிற்சிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளனஇங்குமூன்று மாதம் வரை பயிற்சி வழங்கிஅந்தந்தவயதுக்குரிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
பல குழந்தைகளைபெற்றோரே பள்ளிக்கு அனுப்பாமல்விவசாயம் உட்படபல்வேறுபணிகளுக்கு அனுப்பி விடுகின்றனர்கலெக்டரிடம் புகார் கொடுத்துபோலீஸ் மூலம் மிரட்டி,இடைநின்ற மாணவனை பள்ளிக்கு வரவழைத்தாலும்ஒரு சில நாட்கள் மட்டுமே வருகின்றனர்.இதனால்இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாத நிலை உள்ளது.
உயர் அதிகாரிகள் கண்டிப்பார்களோ என்ற பயத்தில்ஆசிரியர்களும்தலைமை ஆசிரியர்களும்இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கையை மறைத்து விடுகின்றனர்இடையில் நிற்கும் மாணவன்,தனியார் பள்ளியில் சேர்ந்து விட்டதாகவோவேறு ஊருக்கு மாறுதல் பெற்றுச் சென்றதாகவோ,கணக்கு காட்டி விடுகின்றனர்தீவிர நடவடிக்கை இல்லாததால்கிராமப்பகுதிகளில் இடைநிற்கும்மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதுஇவ்வாறுஅவர் கூறினார்.